ஹம்சவினோதினி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹம்சவினோதினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்[தொகு]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/de/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF.svg/250px-%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF.svg.png)
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ச ரி2 க3 ம1 த2நி3 ச் |
அவரோகணம்: | ச் நி3 த2ம1 க3 ரி2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர்.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
| |||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹம்சவினோதினி&oldid=1320233" இலிருந்து மீள்விக்கப்பட்டது