நவரோஜ்
Appearance
நவரோஜ் இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். பண்டைய தமிழிசைப் பண்களில் காந்தாரம் என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.[1]
இலக்கணம்
[தொகு]இந்த இராகத்தில் பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3), சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ப த2நி3 ச் ரி2 க3 ம1 ப |
அவரோகணம்: | ம1 க3 ரி2 ச நி3 த2ப |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமைந்துள்ளன. இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூர்ண" இராகம் என்பர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அ. கி. மூர்த்தி (1998). சைவ சித்தாந்த அகராதி. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 161.