கன்னடா
Appearance
கன்னடா இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
[தொகு]இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த மத்திமம் (ம1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), ,காகலி நிசாதம் (நி3), சதுச்ருதி ரிசபம் (ரி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ச ம1 க3 ம1 ப ம1 த2 நி3 ச் |
அவரோகணம்: | ச் நி3 ச த2ப ம1 க3 ம1 ரி2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ சம்பூரண" இராகம் என்பர். இதன் ஆரோகணத்தில் மத்திமமும், அவரோகணத்தில் சட்சம், மத்திமம் என்பனவும் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு இருசுர வக்கிர இராகம் ஆகும்.