உள்ளடக்கத்துக்குச் செல்

பேகடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேகடா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பான" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

[தொகு]

இந்த இராகத்தில் சட்சம் (ச), அந்தர காந்தாரம் (க3), சதுச்ருதி ரிசபம் (ரி2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச க3 ரி231 ப த2ப ச்
அவரோகணம்: ச் நி32 ப ம13 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம் என்பர்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேகடா&oldid=983688" இலிருந்து மீள்விக்கப்பட்டது