ராமப்பிரியா
Appearance
ராமப்பிரியா கருநாடக இசை முறையில் 52வது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். இந்த மேளத்தில் பிறக்கும் ரமாமனோகரி அசம்பூர்ண மேளபத்ததியில் 52வது மேளமாக விளங்குகிறது.
இலக்கணம்
[தொகு]ஆரோகணம்: | ஸ ரி1 க3 ம2 ப த2 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த2 ப ம2 க3 ரி1 ஸ |
- பிரம்ம என்றழைக்கப் படும் 9வது வட்டத்தில் (சக்கரத்தில்) 4 வது இராகம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
[தொகு]- பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுக்கிறது.
- கருணைச் சுவையை வெளிப் படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
- 16வது மேளமாகிய சக்ரவாகம் இந்த இராகத்தின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
- இதன் முறையே கிரக பேதத்தின் வழியாக ஒரு மேளகர்த்தா இராகத்தையும் கொடுக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
உருப்படிகள்
[தொகு]வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | சந்தேகமுனு | தியாகராஜர் | ஆதி |
கிருதி | ஸ்மராம் யகம் | முத்துசாமி தீட்சிதர் | ரூபகம் |
கிருதி | தூக்கிய பாதத்தின் | முத்துத் தாண்டவர் | ரூபகம் |
கிருதி | சாமிசதா | கோடீஸ்வர ஐயர் | ஆதி |
கிருதி | எந்நாவில் சிறிதும் | பாபநாசம் சிவன் | ஆதி |
ஜன்ய இராகங்கள்
[தொகு]ராமப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை.
- ரீதிச்சந்திரிக்கா
- சுதிப்பிரியா
- சிறீகரி
- சிந்தாமணி
- ரக்திமார்க்கிணி
- கன்கணாலங்கரி
- தபஸ்வினி
- சீமந்தனிப்பிரியா
- பாடலாம்பரி
- விசுபதி