உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ராமப்பிரியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிந்து, நீங்கள் இசை பற்றி எழுதி வரும் கட்டுரைகளை விரும்பிப் படிப்பவன் நான். நானும் இவை பற்றி எழுத எண்ணியிருந்தேன். நீங்கள் தரும் கருத்துக்கள் பயனுடைய கருத்துக்கள், ஆனால் தங்கள் எழுத்து-நடையை சிறிதளவு மாற்றி மேலும் நல்ல தமிழில் எழுத வேண்டும் என பரிந்துரைக்க நான் என் விடுமுறையில் இருந்து வந்ததிலிருந்து எண்ணி வருகிறேன். திருத்தவோ, மாற்றி எழுத பரிந்துரைகளைத் தரவோ நேரம் இல்லை (பல கட்டுரைகளும் மிகவும் தொடர்பானவை, எனவே எங்கு தொடங்குவது என்றே புரியவில்லை). முதலில் ஒன்றை முன் வைக்கின்றேன். எண்ணிப்பாருங்கள். ஆரோகணம், அவரோகணம் என்று நீங்கள் எல்லா மேளகர்த்தா இராகங்களுக்கும் ஒரே மாதிரியாக ஸ ரி க ம ப த நி என்று குறிப்பிடுகிறீர்கள். கட்டுரையின் உட்பகுதியிலே சுத்த ரிஷபம், அந்தர காந்தாரம், பிரதி மத்திமம் முதலியவற்றைக் குறிக்கிறீர்கள். ஆரோகண அவரோகணத்திலேயே ரி2 , க1, ம2 முதலிய குறித்தல் நலம். பிறவற்றை பின்னர் எழுதுகிறேன். --C.R.Selvakumar 13:40, 29 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ராமப்பிரியா&oldid=67755" இலிருந்து மீள்விக்கப்பட்டது