வருணப்பிரியா
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வருணப்பிரியா கருநாடக இசையின் 24வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 24வது இராகத்திற்கு பெயர் வீரவசந்தம்.
இலக்கணம்[தொகு]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a0/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE.svg/250px-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE.svg.png)
ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம1 ப த3 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த3 ப ம1 க2 ரி2 ஸ |
- வேத என்று அழைக்கப்படும் 4வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6 வது மேளம்.
- இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சதுசுருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.
சிறப்பு அம்சங்கள்[தொகு]
- சில ஜன்ய இராகங்கள் உண்டு.
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் நீதிமதி (60) ஆகும்.
- இதன் பஞ்சம முறையே கிரக பேதத்தின் வழியாக ராகவர்த்தனி (32) மேளகர்த்தா இராகத்தை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).
உருப்படிகள்[தொகு]
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | வீரவசந்த தியாகராஜ | முத்துசாமி தீட்சிதர் | ஆதி |
கிருதி | ஏமநி பொகடுதுரா | தியாகராஜர் | ஆதி |
கிருதி | ஸமாஷ்ரயாமி ஸதா | மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா | ஏகம் |