ஹாடகாம்பரி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஹாடகாம்பரி கருநாடக இசையின் 18 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 18 வது இராகத்திற்கு ஜயசுத்தமாளவி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கணம்[தொகு]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF.svg/250px-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF.svg.png)
ஆரோகணம்: | ஸ ரி1 க3 ம1 ப த3 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த3 ப ம1 க3 ரி1 ஸ |
- அக்னி என்றழைக்கப்படும் 3வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6வது மேளம்.
- இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.
சிறப்பு அம்சங்கள்[தொகு]
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் விஷ்வம்பரி (54) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் காந்தார சுரம் முறையே கவாம்போதி (43) மேளம் தோற்றுவிக்கிறது (மூர்ச்சனாகாரக மேளம்).
- சில ஜன்ய இராகங்கள் உண்டு.
உருப்படிகள்[தொகு]
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | நரஹரீமாஷ்ரயாமி | முத்துசாமி தீட்சிதர் | திஸ்ர த்ரிபுட |
கிருதி | ரக்ஷதுமாம் | மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா | த்ரிபுட |