சுத்தசாவேரி
Appearance
சுத்தசாவேரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29வது மேளகர்த்தா இராகமாகிய "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 5 வது இராகமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
[தொகு]ஆரோகணம்: | ஸ ரி2 ம1 ப த2 ஸ் |
அவரோகணம்: | ஸ் த2 ப ம1 ரி2 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), ஆகிய சுரங்கள் வருகின்றன.
இதர அம்சங்கள்
[தொகு]- காந்தாரம், நிஷாதம் என்னும் சுரங்கள் வர்ஜம், ஆதலால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
- இது ஒரு ஔடவ இராகம். உபாங்க இராகம்.
- இது ஒரு சுத்த கர்னாடக இராகம் ஆகும்.
- சர்வ ஸ்வர மூர்ச்சனாகார ஜன்ய ராகம். இவ்விராகம் மோகனத்தின் தைவத மூர்ச்சனையே ஆகும்.
- இதன் ரி, ம, ப, த சுரங்கள் கிரக பேதம் மூலம் முறையே உதயரவிச்சந்திரிக்கா, மோகனம், மத்தியமாவதி, இந்தோளம் ஆகியவற்றைக் கொடுக்கும்.
கிருதி | தாளம் | கலைஞர் |
---|---|---|
ஆனலேகர (கீதம்) | திரிபுடை | புரந்தரதாசர் |
வண்டார்பூங்குழல்நாயகி (வர்ணம்) | அட | திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை |
காலஹரண | ரூபகம் | தியாகராஜர் |
தாரிணி தெலுசுகொண்டி | ஆதி | தியாகராஜர் |
ஸ்ரீ குருகுஹ | ரூபகம் | முத்துசுவாமி தீட்சிதர் |
கண்டாயோ | ஆதி | முத்துத்தாண்டவர் |
தருணம் தருணம் | ரூபகம் | வேதநாயகம் பிள்ளை |
தாயே திரிபுரசுந்தரி | கண்டசாபு | பெரியசாமித் தூரன் |
ரஞ்சிதகவி | ரூபகம் | கோடீஸ்வர ஐயர் |
கற்பகாம்பிகை | கண்ட ஜம்பை | பாபநாசம் சிவன் |
திரையிசையில் இவ்விராகம்
[தொகு]- காதல் மயக்கம் ... - புதுமைப்பெண்
- கோயில் மணி ஓசை தன்னை ... - கிழக்கே போகும் ரயில்
- மலர்களில் ஆடும் இளமை புதுமையே ... - கல்யாணராமன்
- ராதா ராதா நீ எங்கே ... - மீண்டும் கோகிலா
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ பக்கம் எண்: 199 & 200, டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.)
உசாத்துணைகள்
[தொகு]- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996