உள்ளடக்கத்துக்குச் செல்

பசுபதிப்பிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பசுபதிப்பிரியா இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்

[தொகு]

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:

ஆரோகணம்: ச ரி21 ப ம12 ச்
அவரோகணம்: ச் த2 ப ம1 ரி21

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ" இராகம் எனப்படுகின்றது. இதன் ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் மத்திமம் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Music Handbook - Raga Index -P 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுபதிப்பிரியா&oldid=3765660" இலிருந்து மீள்விக்கப்பட்டது