சென்னை மத்திய தொடருந்து நிலையம்
சென்னை மத்திய தொடருந்து நிலையம் புரட்சி தலைவர் முனைவர் ம. கோ. இராமச்சந்திரன் மத்திய தொடருந்து நிலையம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே மற்றும் சென்னை புறநகர் இருப்புவழி நிலையம் | |||||||||
சென்னை மத்தியின் முதன்மை நுழைவாயில் | |||||||||
பொது தகவல்கள் | |||||||||
வேறு பெயர்கள் | ம.கோ.இரா. சென்னை மத்தி, சென்னை மத்தி, மெட்ராஸ் மத்தி | ||||||||
அமைவிடம் | மாபெரும் மேற்கு வழித்தடம், கண்ணப்பர் திடல், பெரியமேடு, சென்னை, தமிழ் நாடு, 600003 India | ||||||||
ஆள்கூறுகள் | 13°04′57″N 80°16′30″E / 13.0825°N 80.2750°E | ||||||||
ஏற்றம் | 3.465 மீட்டர்கள் (11.37 அடி) | ||||||||
உரிமம் | இந்திய அரசு | ||||||||
இயக்குபவர் | இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே | ||||||||
தடங்கள் | சென்னை–புது தில்லி சென்னை–ஹவுரா சென்னை–மும்பை சென்னை–பெங்களூரு | ||||||||
நடைமேடை | 17 (12 முதன்மை நிலையம் + 5 சென்னை புறநகர் முனையம்) | ||||||||
இருப்புப் பாதைகள் | 17 | ||||||||
இணைப்புக்கள் | மாபோக, புறநகர் தொடருந்து, பெ.வி.க.அ., முனைவர் ம.கோ.இரா. சென்னை மத்திய மெட்ரோ. | ||||||||
கட்டமைப்பு | |||||||||
கட்டமைப்பு வகை | ரோமனெசுக்[1] | ||||||||
தரிப்பிடம் | கிடைக்கும் | ||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||
மற்ற தகவல்கள் | |||||||||
நிலை | செயல்படுகிறது | ||||||||
நிலையக் குறியீடு | MAS | ||||||||
மண்டலம்(கள்) | தென்னக தொடருந்து மண்டலம் | ||||||||
கோட்டம்(கள்) | சென்னை | ||||||||
வரலாறு | |||||||||
திறக்கப்பட்டது | 1873[2] | ||||||||
மறுநிர்மாணம் | 1959 1998 (இரண்டாவது) | (முதல்)||||||||
மின்சாரமயம் | 1931[3] | ||||||||
முந்தைய பெயர்கள் |
| ||||||||
பயணிகள் | |||||||||
பயணிகள் | ஒரு நாளைக்கு 5,30,000[4] (ஒரு நாளைக்கு 200 தொடர்வண்டிகள் (46 ஜோடி விரைவு/அஞ்சல் தொடர்வண்டிகள் உட்பட)[4]) | ||||||||
சேவைகள் | |||||||||
| |||||||||
|
சென்னை மத்திய தொடருந்து நிலையம் (அதிகாரப்பூர்வமான பெயர்:புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்) என்பது இந்தியாவின், முக்கியமான மற்றும் பெரிய தொடருந்து (இரயில்) நிலையங்களுள் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையம், இந்தியாவின் தென்னக இரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த தொடருந்து நிலையம், இன்று சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.
வரலாறு
[தொகு]சென்னையின் முதல் தொடருந்து நிலையம் இராயபுரத்தில் பொ.ஊ. 1856-ல் அமைக்கப்பட்டது. மதராஸ்-வியாசர்பாடி வழித்தடம் உருவாக்கத்தின் சென்னையின் இரண்டாவது இரயில் நிலையமாக சென்னை மத்திய தொடருந்து நிலையம், பார்க்டவுனில் உருவாக்கப்பட்டது. இந்த இரயில் நிலையம் ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது. 2019இல், இந்நிலையம் 'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சேவைகள்
[தொகு]இத்தொடருந்து நிலையத்திலிருந்து, பிற மாநிலங்களுக்குச் செல்லும் இரயில்களும், சென்னையின் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் இரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிற்கு இங்கிருந்து இரயில்கள் இயக்கப்படுகின்றன. அண்டை மாநிலங்களான கேரளா, கருநாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா செல்லும் இரயில்கள் இங்கிருந்தும், இவ்வழியாகவும், தமிழ்நாட்டின் கோவை, ஈரோடு, கரூர், சேலம், மதுரை, நாமக்கல், ஜோலார்பேட்டை, அரக்கோணம், காட்பாடி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் இரயில்கள் இங்கிருந்தும் இயக்கப்படுகின்றன. சென்னையின் புறநகர் இரயில்களும் எண்ணூர், கும்மிடிப்பூண்டி மற்றும் அம்பத்தூர், திருவள்ளூர் மார்க்கத்தில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. சென்னைக் கடற்கரை மார்க்கமாகவும், புறநகர் இரயில்கள் இயக்கப்படுகின்றன.
வசதிகள்
[தொகு]சென்னை மத்திய ரயில் நிலையத்தின் அருகில் பேருந்து நிலையமும், 'ஆட்டோ ரிக்சா', 'டாக்ஸி' நிறுத்தும் இடமும் உள்ளன. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் உள்ளன.
சென்னை மத்திய இரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வண்டிகள்
[தொகு]- சென்னை-புதுதில்லி Grand Trunk விரைவுத் தொடர்வண்டி வழி போபால் சந்திப்பு : எண்:12615/12616
- சென்னை-புதுதில்லி தமிழ்நாடு விரைவுத் தொடர்வண்டி : எண்:12621/12622
- சென்னை- ஹசரத் நிஜாமுதீன் ராஜதானி விரைவுத் தொடர்வண்டி : எண்:12433/12434
- சென்னை- ஹசரத் நிஜாமுதீன் கரீப் ரத் (ஏழைகளின் தேர்) : எண்:12611/12612
- சென்னை-மும்பை மெயில் : எண்:11028/11027
- சென்னை-மும்பை விரைவுத் தொடர்வண்டி : எண்:10422/1041
- சென்னை-ஷாலிமார் கோரமண்டல் விரைவுத் தொடர்வண்டி : எண்:12842/12841
- சென்னை-ஹவுரா Mail : எண்:12840/12839
- சென்னை-கோயம்புத்தூர் விரைவுத் தொடர்வண்டி|விரைவு தொடர்வண்டி : எண்: 12679/12680 (புறப்பாடு 14:30)
- சென்னை-கோயம்புத்தூர் சேரன் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12673/12674 (புறப்பாடு 22:10)
- சென்னை-கோயம்புத்தூர் கோவை விரைவுத் தொடர்வண்டி : எண்: 12675/12676 (புறப்பாடு 06:15)
- சென்னை-கோயம்புத்தூர் (ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பாடு 22:20)
- சென்னை-கோயம்புத்தூர்/ மேட்டுப்பாளையம் நீலகிரி விரைவுத் தொடருந்து : எண்: 12671/12672
- சென்னை-மங்களூர் West Coast விரைவுத் தொடர்வண்டி (இந்தியா)|West Coast விரைவுத் தொடர்வண்டி] : எண்: 16627/16628 வழி கோயம்புத்தூர்
- சென்னை-மங்களூர் மெயில் : எண்: 12601/12602
- சென்னை-மங்களூர் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12685/12686 tri-weekly
- சென்னை-அகமதாபாத் நவஜீவன் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12656/12655
- சென்னை-சாப்ரா கங்கா காவிரி விரைவுத் தொடர்வண்டி : எண்: 12669/12670
- சென்னை-திருமலா - திருப்பதி சப்தகிரி விரைவுத் தொடர்வண்டி : எண்: 16057/16058
- சென்னை-திருமலா - திருப்பதி விரைவுத் தொடர்வண்டி : எண்: 16053/16054
- சென்னை-திருமலா - திருப்பதி விரைவுத் தொடர்வண்டி : எண்: 16203/16204
- சென்னை-ஐதராபாத் சார்மினார் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12759/12760
- சென்னை-ஐதராபாத் ஐதராபாத் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12603/12604
- சென்னை-ஈரோடு ஏற்காடு விரைவுவண்டி வழி சேலம் : எண்: 16669/16670
- சென்னை-பெங்களூர் பிருந்தாவன் அதிவிரைவு தொடர்வண்டி : எண்: 12639/12640
- சென்னை-பெங்களூர் இலால் பாக் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12607/12608
- சென்னை-பெங்களூர் பெங்களூர் மெயில் : எண்: 12657/12658
- சென்னை-பெங்களூர் சதாப்தி விரைவுத் தொடர்வண்டி : எண்: 12027/12028
- சென்னை-பெங்களூர் விரைவுத் தொடர்வண்டி (மாலை) : எண்: 12609/12610
- சென்னை-சத்திய சாய் ப்ரஸந்தி நிலையம் விரைவுத் தொடர்வண்டி(வார இறுதியில் மட்டும்) : எண்: 12691/12692
- சென்னை-மைசூர் சதாப்தி விரைவுத் தொடர்வண்டி : எண்: 12007/12008
- சென்னை-மைசூர் காவிரி விரைவுத் தொடர்வண்டி : எண்: 16222/16221
- சென்னை-ஆலப்புழா ஆலப்புழா விரைவுத் தொடர்வண்டி: எண் : 16041/16042
- சென்னை-திருவனந்தபுரம் திருவனந்தபுரம் Mail : எண்: 12623/12624
- சென்னை-திருவனந்தபுரம் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12695/12696 Via கோயம்புத்தூர்
- சென்னை-திருவனந்தபுரம் விரைவுத் தொடர்வண்டி (வாரமொருமுறை) : எண்: 12697/12698
- சென்னை-திருப்பத்தூர் ஏலகிரி விரைவுத் தொடர்வண்டி : எண்: 16089/16090
- சென்னை-காக்கிநாடா சிர்கார் விரைவுத் தொடர்வண்டி : எண்: 16043/16044
- சென்னை-ஜம்மு தாவி அந்தமான் விரைவுத் தொடர்வண்டி : எண்: 16031/16032
- சென்னை-சண்டிகர்/தேராதூன் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12687/12688
- சென்னை-விஜயவாடா பினாகினி விரைவுத் தொடர்வண்டி : எண்: 12712/12711
- சென்னை-விஜயவாடா ஜன சதாப்தி விரைவுத் தொடர்வண்டி : எண்: 12077/12078
- சென்னை-புவனேஸ்வர் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12829/12830
- சென்னை-ஜெய்ப்பூர் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12967/12968
- சென்னை-லக்னோ விரைவுத் தொடர்வண்டி : எண் : 16093/16094
- சென்னை-வாஸ்கோ-ட-காமா விரைவுத் தொடர்வண்டி : எண்: 17311/17312 (வாரமொருமுறை)
- சென்னை-ஹூப்ளி விரைவுத் தொடர்வண்டி : எண்: 17313/17314 (வாரமொருமுறை)
- சென்னை-நாகர்கோயில் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12689/12690 (வாரமொருமுறை) வழி ஈரோடு
- சென்னை-யஷ்வந்த்பூர் விரைவுத் தொடர்வண்டி : எண்: 12291/12292 (வாரமொருமுறை) வழி கிருஷ்ணராஜபுரம்
மேலும் பார்க்க
[தொகு]- சென்னையில் உள்ள தொடருந்து நிலையங்கள்
- சென்னையில் போக்குவரத்து
- சென்னை கட்டடக்கலை
- சென்னையின் பாரம்பரியக் கட்டடங்கள்
குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "Origin and development of Southern Railway" (PDF). Shodhganga. p. 6. பார்க்கப்பட்ட நாள் 25 December 2013.
- ↑ "IR History: Early Days – I". IRFCA. பார்க்கப்பட்ட நாள் 26 November 2012.
- ↑ "Electric Traction-I". IRFCA. பார்க்கப்பட்ட நாள் 26 November 2012.
- ↑ 4.0 4.1 Anbuselvan, B. (27 February 2023). "Chennai Central becomes India's first 'silent' railway station" (in en). The New Indian Express. https://www.newindianexpress.com/cities/chennai/2023/Feb/27/chennai-central-becomes-indias-first-silent-railway-station-2551344.html.