மந்தைவெளி
Appearance

மந்தைவெளி என்பது இந்தியாவின் சென்னை நகரிலுள்ள ஒரு பகுதியாகும். இது மைலாப்பூர், அடையாறு, ராஜா அண்ணாமலைபுரம், சாந்தோம் பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ளது. கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் செல்லும் பறக்கும் ரயிலுக்கு மந்தைவெளியிலும் ஒரு நிலையம் உள்ளது.