திருவொற்றியூர்
திருவொற்றியூர் | |||
ஆள்கூறு | 13°10′N 80°18′E / 13.16°N 80.3°E | ||
நாடு | ![]() | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | சென்னை | ||
வட்டம் | திருவொற்றியூர் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3] | ||
சட்டமன்றத் தொகுதி | திருவொற்றியூர் | ||
சட்டமன்ற உறுப்பினர் | |||
மக்கள் தொகை | 2,49,446 (2011[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 0 மீட்டர்கள் (0 அடி) | ||
குறியீடுகள்
|

திருவொற்றியூர் (ஆங்கிலம்:Tiruvottiyur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டம், திருவொற்றியூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பெருநகர சென்னை மாநகராட்சியின் பகுதியும் ஆகும். தேவாரப் பாடல்கள் பாடப் பெற்ற பழைமையான திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் இங்கமைந்துள்ளது.
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 13°10′N 80°18′E / 13.16°N 80.3°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0 மீட்டர் (0 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மக்கள்தொகை 2,49,446 பேர் ஆவர். அதில் 1,25,300 ஆண்களும், 1,24,146 பெண்களும் உள்ளடங்குவர். இந்நகரத்தின் எழுத்தறிவு வீதம் 88.6% ஆகும்; பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் அமைகிறது. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 26,903 பேர் ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 952 பெண் குழந்தைகள் வீதமாக அமைகிறது. பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 35,332 மற்றும் 502 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 83.7%, இசுலாமியர்கள் 6.93% , கிறித்தவர்கள் 8.56% சமணர்கள் 0.15% பிறர் 0.66% ஆகவுள்ளனர்.[5]
போக்குவரத்து
[தொகு]பேருந்து
[தொகு]திருவொற்றியூரில் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து (மா.போ.க.) முனையம் உள்ளது. மா.போ.க. பேருந்துகள் திருவொற்றியூரில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இது தவிர மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் சில, இங்கிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன.
தொடர்வண்டி
[தொகு]சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தொடர்வண்டித்தடம் திருவொற்றியூர் வழியாகச் செல்கிறது. திருவொற்றியூர் தொடருந்து நிலையம் மற்றும் விம்கோ தொடருந்து நிலையம் திருவொற்றியூரில் அமைந்துள்ளன. சென்னை மெட்ரோ தொடர்வண்டி சேவையும் உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து விம்கோ நகர் செல்லும் மெட்ரோ தொடர்வண்டியில் திருவொற்றியூர் தேரடி இரயில் நிலையத்தில் இறங்கினால் அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் கோவில் உள்ளது.
இவ்வூரின் சிறப்பு
[தொகு]கோயில்கள்
[தொகு]- ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில் தேவாரத் திருத்தலம்
- பட்டினத்தார் சமாதி
மேலும் விபரம்
[தொகு]திருவொற்றியூர், தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியாகும். வங்காள விரிகுடா கரையில் அமைந்துள்ள இப்பகுதியின் அருகில் மணலி பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை, எண்ணூர் அனல்மின் நிலையம், கே.சி.பி. தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகளும் மற்ற சிறு மற்றும் பெரும் தொழிற்சாலைகளும் திருவொற்றியூரைச் சுற்றி அமைந்துள்ளன. இங்கு மனைகள் குறைவான விலையில் கிடைத்ததால், இங்கு மக்கள் தொகை பெருகத் தொடங்கியது. சென்னையின் கூவம் ஆறு திருவொற்றியூரின் மேற்குப் பகுதியில் பாய்கிறது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Tiruvotriyur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ திருவொற்றியூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்