உள்ளடக்கத்துக்குச் செல்

ஆவடி

ஆள்கூறுகள்: 13°06′24″N 80°05′49″E / 13.106700°N 80.097000°E / 13.106700; 80.097000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆவடி
மாநகராட்சி
ஆவடி is located in சென்னை
ஆவடி
ஆவடி
ஆவடி (சென்னை)
ஆவடி is located in தமிழ் நாடு
ஆவடி
ஆவடி
ஆவடி (தமிழ் நாடு)
ஆள்கூறுகள்: 13°06′24″N 80°05′49″E / 13.106700°N 80.097000°E / 13.106700; 80.097000
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர்
புறநகர்சென்னை
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்ஆவடி மாநகராட்சி
 • ஆளுநர்ஆர். என். ரவி[1]
 • முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
 • மாவட்ட ஆட்சியர்மருத்துவர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப
பரப்பளவு
 • மொத்தம்65 km2 (25 sq mi)
ஏற்றம்
55 m (180 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,45,996
 • அடர்த்தி5,300/km2 (14,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
"600 054, 600 055, 600 062, 600 065,
600 071, 600 072,
602 024"
வாகனப் பதிவுTN 12
மக்களவைத் தொகுதிதிருவள்ளூர்
சட்டமன்றத் தொகுதிஆவடி

ஆவடி (Avadi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது சென்னை மாநகருக்கு வடமேற்கில் அமைந்துள்ளது; மற்றும் இது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சியாகும்.[3] ஆவடி மாநகராட்சி தன்னகத்தே கொண்டுள்ள திருமுல்லைவாசல் என்னும் ஊரில் 'மாசிலாமணீஸ்வரர் கோயில்' (சிவாலயம்) உள்ளது. ஆவடி மாநகரில், கன ஊர்தி தொழிற்சாலை, போர் ஊர்தி தொழிற்சாலை வாரியம், போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் ஆகியவை அமைந்துள்ளன. சென்னையின் மேற்குப் புறநகர்ப் பகுதிகளில், அதிக மக்கள் தொகை மற்றும் வளர்ந்த பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். ஆவடியில் உள்ள ஏரி 'பாலேரிப்பட்டு' என்று அழைக்கப்பட்டது; இது இப்போது மிகவும் பழைய நில ஆவணங்களில் மட்டுமே காணப்படுகிறது.

ஆவடி மாநகராட்சியுடன் இணைத்தல்

[தொகு]

17 சூன் 2019 அன்று ஆவடி நகராட்சியை, ஆவடி மாநகராட்சிப் பகுதியுடன் இணைக்க, தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து, அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.[4][5][6][7][8]

பெயர் காரணம்

[தொகு]

தமிழில் “ஆ“ என்றால் பசு என்று பொருள். இந்த நகர் நிறைய பசு நிறைந்த ஊர் என்பதால் ஆ+அடி=ஆவடி என்று கூறுவதுண்டு.

ஆவடி ( AVADI ) என்ற வார்த்தை ஆங்கிலத்தில், இங்குள்ள அரசுத் தொழிற்சாலையான “Armoured Vehicles and Ammunition Depot of India” என்பதன் சுருக்கமும் ஆகும். 1960க்குப் பிறகு இந்த நகர் வளர்ச்சி அடைந்தது.

வரலாறு

[தொகு]

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில், 'மெட்ராஸ்' (இன்றைய சென்னை), முதன்மை நகரின் வடக்கு மற்றும் மேற்குப் பிராந்தியங்களில், ஆட்டோமொபைல் தொழிற்துறை வளர்ந்தபோது, வளர்ந்த "ஆட்டோ பெல்ட்" இன் ஒரு பகுதி ஆவடியாகும்.[9]

இந்திய தேசிய காங்கிரசின் புகழ்பெற்ற அமர்வு, 10 சனவரி 1955 அன்று ஆவடியில் நடைபெற்றது.[10] இந்த வரலாற்றுச் சந்திப்பு சோசலிசத்தின் முக்கியத்துவத்தையும், சமூக வளர்ச்சியில் அதன் தாக்கத்தையும் வலியுறுத்தியது. ஏ.ஐ.சி.சி. (A.I.C.C. - All India Congress Committee) அமர்வில், மொரார்ஜி தேசாய் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களுடன் ஜவஹர்லால் நேரு, 'சமுதாயத்தின் சோசலிச முறை', காங்கிரஸின் குறிக்கோள் என்று அறிவித்தார்.[11][12]

அமைவிடம்

[தொகு]

சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், ஆவடி அமைந்துள்ளது.

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 13°07′N 80°06′E / 13.12°N 80.1°E / 13.12; 80.1 ஆகும்.[13] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 17 மீட்டர் (55 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஏரி

[தொகு]
ஆவடி ஏரியின் காட்சி

ஆவடி வீட்டு வசதி வாரியத்தின் பின்னால், 86 ஏக்கர் பரப்பில் பருத்திப்பட்டு ஏரி உள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு, 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, 'பசுமை பூங்கா' உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், 60,000 கனமீட்டர் தூர் வாரப்பட்டு, 6 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்க ஏரியின் சேமிப்பு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 கி.மீ. தூரத்திற்கு ஏரியைச் சுற்றி நடைபாதை, படகு குழாம், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, ஜூன், 21 ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.

இதுபோல், ஆவடியைச் சுற்றி விளிஞ்சியம்பாக்கம் ஏரி, அராபத் ஏரி, சித்தேரி உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகள் உள்ளன. அவைகள் குடியிருப்புப் பெருக்கத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கழிவு நீர் கலக்கும் இடங்களாக உள்ளன.

கழிவு மேலாண்மை

[தொகு]

இந்நகரில் வசிப்பவர்களால் தினமும் சுமார் 150 மெட்ரிக் டன் குப்பைகள் உருவாகின்றன. திருவேற்காடு மற்றும் பூந்தமல்லி ஆகியவற்றுடன் சேர்ந்து, ஆவடியில் சுமார் 120,000 வீடுகளில் இருந்து சுமார் 210 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் உருவாகின்றன. இவை ஆவடி மாநகராட்சிக்குச் சொந்தமான சேக்காட்டில் 17.78 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்படுகின்றன. 2017 ஆம் ஆண்டில், நகராட்சி, 10.6 மில்லியன் டாலர் செலவில், 33 பரவலாக்கப்பட்ட உரம் பதப்படுத்தும் ஆலைகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டது; ஒவ்வொன்றும் 4 டன் மக்கும் கழிவுகளை எருவாக மாற்றும் திறன் கொண்டது. இவற்றில், 17 ஆலைகள் 2018 பிப்ரவரி வரை செயல்பட்டு வந்தன.

மக்கள் வகைப்பாடு

[தொகு]
மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
84.23%
கிறித்தவர்கள்
10.69%
முஸ்லிம்கள்
4.56%
சைனர்கள்
0.08%
சீக்கியர்கள்
0.07%
பௌத்தர்கள்
0.03%
மற்றவை
0.3%
சமயமில்லாதவர்கள்
0.03%
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
19515,979—    
196113,050+118.3%
197177,413+493.2%
19811,24,701+61.1%
19911,83,215+46.9%
20012,30,913+26.0%
20113,45,996+49.8%

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 3,44,701 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[14] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். ஆவடி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும்; இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. ஆவடி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். நகரில் மொத்தம் 87,733 வீடுகள் இருக்கின்றன. மொத்தம் 127,152 தொழிலாளர்கள், 787 விவசாயிகள், 1,095 முக்கிய விவசாயத் தொழிலாளர்கள், வீட்டுத் தொழில்களில் 1,444, 111,013 மற்ற தொழிலாளர்கள், 12,813 குறு தொழிலாளர்கள், 221 குறு விவசாயிகள், 310 குறு விவசாயத் தொழிலாளர்கள், வீட்டுத் தொழில்களில் 449 குறு தொழிலாளர்கள் மற்றும் 11,833 பிற தொழிலாளர்கள் உள்ளனர். 2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, ஆவடியில் 84.23% இந்துக்கள், 4.56% முஸ்லிம்கள், 10.69% கிறித்தவர்கள், 0.07% சீக்கியர்கள், 0.03% பௌத்தர்கள், 0.08% சைனர்கள், 0.3% பிற மதங்களைப் பின்பற்றுகிறவர்கள் மற்றும் 0.03% சமயமில்லாதவர்கள் உள்ளனர்.

தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் மற்றும் தொழிற்சாலைகள்

[தொகு]

சி. டி. எச். (CTH - Chennai Tiruvallur High road) சாலையில் உள்ள ஆவடியின் பட்டாபிராமில் 2,300 மில்லியன் டாலர் செலவில் 10 ஏக்கர் நிலத்தில் 500,000 சதுர அடி பரப்பளவில் புதிய டைடல் பூங்கா கட்டப்படும். இது 30,000 பேருக்கு வேலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள் ஆகத்து 2020 இல் தொடங்கப்பட்டன. டெல் டெக்னாலஜி மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டி.சி.எஸ். - TCS) ஆவடிக்குச் செல்ல ஆர்வம் காட்டியுள்ளன. ஐடெக்ஸ் பாதுகாப்பு ஏற்றுமதிக்கான மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப நிறுவனம், டைடல் பார்க் ஆவடி (பட்டாபிராம்)-இல் 1000 கோடி முதலீடு செய்தது.

இராணுவ நிறுவனங்களுக்கு மேலதிகமாக, ஆவடி, பல தகவல் தொழில்நுட்பம்/ஐடிஇஎஸ் மற்றும் பிற சேவைத் துறை சார்ந்த நிறுவனங்களையும் கொண்டுள்ளது.

இராணுவ நிறுவனங்கள்

[தொகு]
ஆவடி இராணுவ தளவாட ஆலையில் தயாரிக்கப்பட்ட, அர்ஜீன் பீரங்கி

இங்கு கன ஊர்தி தொழிற்சாலை, போர் ஊர்தி தொழிற்சாலை வாரியம், போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் ஆகியவை அமைந்துள்ளன.

கல்விக்கூடங்கள்

[தொகு]
  • ஆர். சி. எம். மேல்நிலைப் பள்ளி
  • இமாகுலேட் மேல்நிலைப் பள்ளி
  • எஸ். ஏ. பல்தொழில் நுட்பப் பயிலகம்
  • எஸ். ஏ. பொறியியல் கல்லூரி
  • கேந்திரிய வித்தியாலயா
  • நாசரேத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி
  • புனித ஆன்டனி பள்ளி
  • புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி
  • மகாலட்சுமி கலைக் கல்லூரி
  • விவேகானந்தா வித்தியாலயா
  • விஜயந்தா சீனியர் செகண்டரி பள்ளி
  • வெல்டெக் இன்ஜினிங் காலேஜ்
  • செயின் பீட்டர் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரி
  • விஜயந்தா உயர் இரண்டாம்நிலை பள்ளி
  • விஜயந்தா மூத்த இரண்டாம் வகுப்பு
  • முருகப்பா தொழில்நுட்பக் கல்லூரி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. ஆவடி நகராட்சி[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி
  5. Avadi becomes corporation
  6. Avadi becomes TN’s 15th municipal corporation
  7. 15வது மாநகராட்சியாக ஆவடி அறிவிப்பு
  8. ஆவடி மாநகராட்சி உதயம் - எந்தெந்த பகுதிகள்?
  9. Muthiah, S. (2014). Madras Rediscovered. Chennai: EastWest. p. 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-84030-28-5.
  10. "Miscellaneous / This Day That Age : dated January 10, 1955: Avadi session of Congress". தி இந்து. 2005-01-10. Archived from the original on 2005-01-13. பார்க்கப்பட்ட நாள் 2021-06-06. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  11. "Long way from Avadi". frontline.in.
  12. "Madras Musings - We care for Madras that is Chennai". madrasmusings.com.
  13. "Avadi". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  14. [>http://www.census.tn.nic.in/index.php?ppt2.php பரணிடப்பட்டது 2012-04-23 at the வந்தவழி இயந்திரம் இந்திய 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவடி&oldid=4033803" இலிருந்து மீள்விக்கப்பட்டது