உள்ளடக்கத்துக்குச் செல்

கிண்டி

ஆள்கூறுகள்: 13°00′24″N 80°13′14″E / 13.006700°N 80.220600°E / 13.006700; 80.220600
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிண்டி -
—  அண்டைப்பகுதி  —
கிண்டி -
அமைவிடம்: கிண்டி -, சென்னை , இந்தியா
ஆள்கூறு 13°00′24″N 80°13′14″E / 13.006700°N 80.220600°E / 13.006700; 80.220600
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை மாவட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3]
திட்டமிடல் முகமை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
Civic agency சென்னை மாநகராட்சி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


37 மீட்டர்கள் (121 அடி)

இணையதளம் சென்னை மாவட்ட இணையத்தளம்


கிண்டி (ஆங்கிலம்: Guindy) தமிழ்நாட்டின் சென்னை நகரத்திலுள்ள ஒரு நகர்ப் பகுதியாகும். இது சென்னையின் தென்பகுதியில் அமைந்துள்ளது. கிழக்கே அடையாறும் வடக்கே கோட்டூர்புரமும் உள்ளன. இங்கு புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கிண்டி தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் மாநில ஆளுநரின் அதிகாரப்பூர்வ இருப்பிடம் ராஜ்பவன் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள வளாகத்தின் முந்தைய கிண்டி பொறியியற் கல்லூரி, இந்தியாவின் பழமையான பொறியியற் கல்லூரிகளுள் ஒன்றாகும். மேலும் கிண்டியில் ஒரு பாம்புப் பண்ணையும் சிறுவர் பூங்காவும் உள்ளன. இவற்றை அடுத்து இராசாசி, காமராசர் மற்றும் அண்ணல் காந்தி நினைவிடங்கள் உள்ளன. தாம்பரம்சென்னைக் கடற்கரை சுற்றுப்புற வழித்தடத்தின் நிறுத்தமாக தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகாமையில் தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்தியாவிலே முதன் முதலில் உருவான CIPET அமைந்துள்ளது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.

அமைவிடம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிண்டி&oldid=3700369" இலிருந்து மீள்விக்கப்பட்டது