உள்ளடக்கத்துக்குச் செல்

தட்சிண சித்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தட்சிண சித்ராவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு திருநெல்வேலி அக்ரகாரம்

தட்சிண சித்ரா தென்னிந்திய கலாச்சாரம், நுண்கலை, கட்டடக்கலை மற்றும் மக்களின் வாழ்க்கைமுறை ஆகியவற்றை விளக்கும் மையம் ஆகும். இது தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் அமைந்திருக்கிறது. சென்னையிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த பண்பாட்டு கலாச்சார மையம் சுமாராக 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

பெயர் விளக்கம்

[தொகு]

தட்சிணம் + சித்ரம் என்ற இரு வடமொழி வார்த்தைகளின் கூட்டே தட்சிண சித்ரா ஆகும். தட்சிணம் என்றால் தெற்கு என்று பொருள், சித்ரம் என்பதற்கு காட்சி என்பது பொருள், தமிழில் தெற்கின் காட்சி (தென்னாட்டு காட்சி) என பொருள்படும். தென்னாட்டு மக்களின் கலாச்சாரத்தை விளக்குவதால் இந்த காரணப்பெயர்.

வெளி இணைப்புகள்

[தொகு]

சித்ரா இணையதளம்



"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்சிண_சித்ரா&oldid=3730911" இலிருந்து மீள்விக்கப்பட்டது