உள்ளடக்கத்துக்குச் செல்

பீர்க்கன்கரணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீர்க்கன்கரணை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
வட்டம் தாம்பரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். அருண்ராஜ், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

25,871 (2011)

4,061/km2 (10,518/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 1.786 சதுர கிலோமீட்டர்கள் (0.690 sq mi)

பீர்க்கன்கரணை (ஆங்கிலம்:Peerkankaranai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டததில் இருக்கும் தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இப்பகுதி சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது.

தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்

[தொகு]

3 நவம்பர் 2021 அன்று இந்த பகுதியானது தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

அமைவிடம்

[தொகு]

பீர்க்கன்கரணை பகுதி மாவட்டத் தலைமையிடமான காஞ்சிபுரத்திலிருந்து 40 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 28 கிமீ தொலைவிலும் உள்ளது. இதனருகில் உள்ள தொடருந்து நிலையம், 2.5 கிமீ தொலைவில் உள்ள அ பெருங்களத்தூர் ஆகும். இதனருகில் வண்டலூர் 3 கிமீ; கிழக்கு தாம்பரம் 3.50 கிமீ; பழைய பெருங்களத்தூர் 2.40 கிமீ தொலைவில் உள்ளது.

பகுதியின் அமைப்பு

[தொகு]

1.786 சகிமீ பரப்பும், 244 தெருக்களையும் கொண்ட இப்பகுதி தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதி 25,871 மக்கள்தொகை கொண்டது. கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 47.7% ஆகவுயர்ந்துள்ளது. மேலும் இப்பகுதியின் எழுத்தறிவு 92% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 985 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 13% மற்றும் 1% ஆக உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு கிமீ 4061 நபர் வீதம் வாழ்கின்றனர்.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. More areas to come under Chennai Corporation
  4. Peerkankaranai Population Census 2011
  5. Peerkankaranai Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீர்க்கன்கரணை&oldid=4022275" இலிருந்து மீள்விக்கப்பட்டது