உள்ளடக்கத்துக்குச் செல்

செம்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பாக்கம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
வட்டம் தாம்பரம்
அருகாமை நகரம் தாம்பரம் மற்றும் சென்னை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆ. ர. ராகுல் நாத், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

45,356 (2011)

7,257/km2 (18,796/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6 சதுர கிலோமீட்டர்கள் (2.3 sq mi)
குறியீடுகள்

செம்பாக்கம் (ஆங்கிலம்:Sembakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் வட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும்.

அமைவிடம்[தொகு]

செம்பாக்கம் பகுதி, காஞ்சிபுரத்திலிருந்து 60 கிமீ; தாம்பரத்திலிருந்து 5 கிமீ; சென்னையிலிருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது.

அரசியல்[தொகு]

செம்பாக்கம் பகுதி, தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 11,668 வீடுகளும், 45,356 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பகுதியின் எழுத்தறிவு 92.52% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 998 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]

வரலாறு[தொகு]

தேர்வுநிலை பேரூராட்சியாக இருந்த செம்பாக்கம், 2013-ஆம் ஆண்டு முதல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[5] செம்பாக்கம் நகராட்சியில் செம்பாக்கம், இராஜகீழ்பாக்கம் மற்றும் கௌரிவாக்கம் பகுதிகள் கொண்டது.

தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்[தொகு]

3 நவம்பர் 2021 அன்று செம்பாக்கம் பகுதி தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. Sembakkam Town
  4. Sembakkam Population Census 2011
  5. Sembakkam is now municipality
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பாக்கம்&oldid=4022293" இலிருந்து மீள்விக்கப்பட்டது