உள்ளடக்கத்துக்குச் செல்

சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 12°58′56″N 80°9′49″E / 12.98222°N 80.16361°E / 12.98222; 80.16361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்
சென்னை வானூர்தி நிலையத்தை மேலிருந்து பார்க்கும் போது
  • ஐஏடிஏ: MAA
  • ஐசிஏஓ: VOMM
    MAA is located in இந்தியா
    MAA
    MAA
    இந்தியாவில் சென்னை அண்ணா வானூர்தி நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்இந்திய அரசு
இயக்குனர்இந்திய வானூர்தி நிலைய ஆணையம்
சேவை புரிவதுசென்னை மாநகர பரப்பு
அமைவிடம்மீனம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
மையம்
உயரம் AMSL52 ft / 16 m
ஆள்கூறுகள்12°58′56″N 80°9′49″E / 12.98222°N 80.16361°E / 12.98222; 80.16361
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
07/25 12,001 3,658 தார்
12/30 9,596 2,925 தார்/பைஞ்சுதை
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2019 - மார்ச் 2020)
பயணிகள் போக்குவரத்து22,266,722(1.2%)
சரக்கு டன்கள்355,194 (13.6%)
வானூர்தி போக்குவரத்து167,982 (5.6%)
மூலம்: ஏஏஐ[1][2] [3]
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலைய உட்புறம்

சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையமானது சென்னைக்கு 20 கிலோ மீட்டர் தெற்கே மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது மும்பை, தில்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியமாக உள்ள வானூர்தி நிலையமாகும். 2005 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பயணிகள் இந்நிலைய வானூர்திகளின் மூலமாக பயணம் செய்துள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக அதிக போக்குவரத்துள்ள சரக்கு வானூர்தி நிலையமும் இதுவாகும். 1400 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 34 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் இந்தியாவின் தொடக்ககாலத்தில் உருவாக்கப்பட்ட வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். இது மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளதால் மீனம்பாக்கம் வானூர்தி நிலையம் என்றும் அழைக்கப்படுகின்றது. முதல் வானுர்தி (புஷ்மோத்) 1932 ஆம் ஆண்டு தரை இறங்கியது. இரண்டாம் உலகப் போரின்போது இராணுவப் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 1952 ஆம் ஆண்டு உள்நாட்டு வானுர்தி வாரியம் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது. இது தற்போது சரக்கு போக்குவரத்து வானூர்திகள் வந்து செல்லுமிடமாக உள்ளது. 1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் 1985 ஆம் ஆண்டு மீனம்பாக்கம் அருகில் திரிசூலத்தில் புதிய நிலையம் கட்டப்பட்டது. 1989 ஆம் ஆண்டு புதிய பன்னாட்டு முனையகம் தொடங்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு புதிய பன்னாட்டு புறப்பாடு முனையகம் செயல்படுத்தப்பட்டது. இங்கு இரண்டு முனையங்கள் உள்ளன. ஒன்று அண்ணா பன்னாட்டு முனையமாகும். இரண்டாவது காமராசர் உள்நாட்டு முனையமாகும்.

தனித்துவம்

[தொகு]

இந்நிலையம் உலகத் தரத்திற்கான அனைத்து இலவச மற்றும் கட்டண வசதிகளை கொண்டது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையகம் அருகருகில் அமையப்பெற்று இரண்டும் (கநோபி ) இணைக்கப்பட்டது. எதிரில் அமையப்பெற்ற திரிசூலம் புறநகர் ரயில் நிலையத்துடன் சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட்டது. இது முதல் இடத்தை பல விசயங்களில் பிடித்துள்ளது அவை:

  • ISO-9001-2000 சான்றிதழை பெற்ற முதல் பன்னாட்டு முனையகம்.
  • உள்நாட்டு முனையகத்தில் aerobridges எனப்படும் வானூர்தியுடன் இணைக்கும் பாலத்தை முதலில் பெற்ற நிலையம் இதுவே.
  • சுற்றுச்சுழலை கருத்தில் கொண்டு வானூர்தி நிலையத்தில் காகிதக் கிண்ணத்தை (cup) அறிமுகப்படுத்திய முதல் வானூர்தி நிலையம்.
  • சிறந்த வானூர்தி நிலையம் - உள்நாட்டு முனையகம் என்ற விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பெற்றது.
  • சுகாதாரமான இலவசக் குடிநீரை இரு முனையங்களிலும் வழங்கிய முதல் நிலையம்.

போக்குவரத்து

[தொகு]

இந்நிலையம் தேசிய நெடுஞ்சாலை NH45யை ஒட்டியே அமைந்துள்ளது. இதன் எதிரில் திரிசூலம் புறநகர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. புதிதாக அமைய உள்ள சென்னை மெட்ரோ ரயில் இந்நிலையத்திற்குள் வந்து செல்லுமாறு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆதலால் நகரத்தின் அனைத்து பகுதிகளுடன் போக்குவரத்து ரீதியில் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்

[தொகு]
வானூர்திச் சேவைகள் சேரிடங்கள்
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் அடிஸ் அபாபா போலே பன்னாட்டு வானூர்தி நிலையம் (16 ஜூலை 2020 முதல்)
ஏர் அரேபியா சார்ஜா
ஏர் ஆஸ்திரால் சான்-டெனீ ரீயூனியன்
ஏர் இந்தியா அகமதாபாத், பெங்களூர், கோவை, கொழும்பு, தில்லி, துபாய், கோவா, ஐதராபாத்து, கொச்சி, கொல்கத்தா, குவைத், மதுரை, மும்பை, மஸ்கட், போர்ட் பிளேர், சிங்கப்பூர், சார்ஜா, திருவனந்தபுரம், வாரனாசி ஜித்தா
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர், திருவனந்தபுரம்
ஏர் மொரீசியசு மொரீசியசு
ஏர்ஏசியா கோலாலம்பூர்
ஏர்ஆசியா இந்தியா ஐதராபாத்து, தில்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா
ஏர் பிரான்சு பாரிஸ் (31 மார்ச் 2024 முடிகிறது)
ஆல் நிப்பான் ஏர்வேஸ் நரிட்டா
அலையன்ஸ் ஏர் ஐதராபாத்து, மதுரை, யாழ்ப்பாணம், திருச்சிராப்பள்ளி, கொச்சி, கோவை
பாடிக் ஏர் பாலி, மேடான், கோலாலம்பூர்
பிரித்தானிய ஏர்வேஸ் இலண்டன் - ஹீத்ரோ
கதே பசிபிக் ஹொங்கொங்
எமிரேட்ஸ் எயர்லைன் துபாய்
எடிஹட் ஏர்வேஸ் அபுதாபி
பிளைதுபாய் துபாய்
கோஏர் அகமதாபாத், ஐதராபாத்து, கண்ணூர், புனே, மும்பை, போர்ட் பிளேர்
வளைகுடா விமானம் பகுரைன்
இன்டிகோ அகமதாபாத், இலக்னோ, இந்தோர், ஐதராபாத்து, பட்னா (29 மார்ச் 2020 முதல்), மங்களூரு, மதுரை, வடோதரா (29 மார்ச் 2020 முதல்), நாக்பூர், ராய்ப்பூர், ராஜமன்றி, வாரனாசி, சிங்கப்பூர், திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி, விசயவாடா, விசாகப்பட்டினம், தூத்துக்குடி, மும்பை, பெங்களூர், பேங்காக் - சுவர்ணபூமி, புவனேசுவரம், கோவை, கொழும்பு, தில்லி,தோகா, துபாய், கோவா, குவகாத்தி, பூப்பள்ளி, செய்ப்பூர், கண்ணூர், கொச்சி, கொல்கத்தா, கோலாலம்பூர், கோழிக்கோடு, குவைத், போர்ட் பிளேர், புனே, சூரத்து
குவைத் ஏர்வேஸ் குவைத்
லுஃப்தான்சா பிராங்க்ஃபுர்ட்
மலேசிய வான்வழி கோலாலம்பூர்
மாலத்தீவின் வான்வழி டாக்கா, டாக்கா
ஓமான் ஏர் மஸ்கத்
கத்தார் ஏர்வேஸ் தோகா
சவூதி ரியாத், ஜித்தா மதீனா
சில்க் ஏர் சிங்கப்பூர்
சிங்கப்பூர் வான்வழி சிங்கப்பூர்
ஸ்பைஸ் ஜெட் அகமதாபாத், ஐதராபாத்து, பட்னா, பாக்டோக்ரா, வாரனாசி, சீரடி, திருவனந்தபுரம், விசயவாடா, விசாகப்பட்டினம், துர்காபூர், புனே, தூத்துக்குடி, குவகாத்தி, செய்ப்பூர், பெங்களூர், கோவா, கோவை, கொழும்பு, தில்லி, கொச்சி, கொல்கத்தா, மதுரை, மும்பை, போர்ட் பிளேர்,
சிறீலங்கன் விமானச் சேவை கொழும்பு
தாய் ஏர்ஏசியா பேங்காக்- டான் மியூங்,
தாய் ஏர்வேஸ் பேங்காக் - சுவர்ணபூமி
உண்ம ஜெட் ஐதராபாத்து, கடப்பா, சேலம், மைசூர்
US-பங்களா வான்வழி டாக்கா, சிட்டகொங்
விஸ்தாரா டில்லி, மும்பை, போர்ட் பிளேர்
பிட்சுஏர் யாழ்ப்பாணம் (22 மே 2020 முதல்)

விபத்துகள்

[தொகு]

விமான நிலையக் கண்ணாடி உடைந்தமை

[தொகு]

சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பன்னாட்டு முனையத்தில் மேற்கூரைக் கண்ணாடிகள் முதல் முறையாக 2013 மே 12 அன்று விழத் தொடங்கி 2016 மார்ச் 13 வரை 56 தடவைகள் உடைந்து கீழே விழுந்துள்ளன.[4] 2014 ஏப்ரல் 7 இல் 17ஆவது முறையாகவும் கண்ணாடிகள் உடைந்தன[5] 2014 சூன் 23 இல் 20ஆவது முறையாகவும்[6] 2014 நவம்பர் 28 இல் 29 ஆவது முறையாகவும்,[7] 2015 சனவரி 15 இல் 32ஆவது முறையாகவும்,[8] 2015 மார்ச் 16 இல் 36ஆவது முறையாகவும்,[9] டிசம்பர் 7,2018 அன்று 83 முறையாக கண்ணாடி உடைந்து விபத்து.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Traffic News for the month of March 2020: Annexure-III" (PDF). இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம். 22 May 2020. p. 3. Retrieved 22 May 2020.
  2. "Traffic News for the month of March 2020: Annexure-II" (PDF). இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம். 22 May 2020. p. 3. Retrieved 22 May 2020.
  3. "Traffic News for the month of March 2020: Annexure-IV" (PDF). இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம். 22 May 2020. p. 3. Retrieved 22 May 2020. url-status=live
  4. "சென்னை விமான நிலையத்தில் 56ஆவது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து". புதிய தலைமுறை. மார்ச்சு 13, 2016 இம் மூலத்தில் இருந்து 2016-03-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160315141323/http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/chennai/22/12059/glass-door-breaks-at-chennai-airport-for-56th-time. 
  5. "சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்தது". தினமணி. ஏப்ரல் 7, 2014. http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/04/07/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/article2154197.ece. 
  6. "20ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது". ஈகரை. சூன் 23, 2014. http://www.eegarai.net/t111228-20. 
  7. "29 ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்தது". விடுதலை. நவம்பர் 28, 2014. http://viduthalai.in/home/viduthalai/medical/91999-29--------.html. [தொடர்பிழந்த இணைப்பு]
  8. "சென்னை விமான நிலையத்தில் 32ஆவது முறையாக கண்ணாடி நொறுங்கியது". தினமலர். சனவரி 15, 2015. http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/04/07/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/article2154197.ece. 
  9. "ஏர்போர்ட்டில் 36ஆவது விபத்து : உள்நாட்டு முனையத்தில் 2 கண்ணாடி உடைந்து நொறுங்கியது". தமிழ் முரசு. மார்ச்சு 16, 2015 இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304224334/http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=71982. 

வெளியிணைப்புக்கள்

[தொகு]