உள்ளடக்கத்துக்குச் செல்

மாம்பலம்

ஆள்கூறுகள்: 13°02′29″N 80°13′59″E / 13.0414°N 80.2330°E / 13.0414; 80.2330
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாம்பலம்
மாம்பலம்
அமைவிடம்: மாம்பலம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 13°02′29″N 80°13′59″E / 13.0414°N 80.2330°E / 13.0414; 80.2330
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
வட்டம் மாம்பலம் வட்டம்
மிகப்பெரிய நகரம் சென்னை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


மாம்பலம் (ஆங்கில மொழி: Mambalam) இந்தியாவின் சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்பகுதி ஆகும்.

சென்னையின் பழமை வாய்ந்த பிராமணக் குடியிருப்புப் பகுதிகள் இங்கு உள்ளன. தி.நகர், நந்தனம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் போன்றவை மாம்பலத்தை சுற்றி உள்ளன. மாம்பலத்தில் இரங்கநாதன் தெரு, ஆர்யகௌடா சாலை, துரைசாமி சுரங்கபாதை, தம்பையா சாலை, தபால் காலனி, பிருந்தாவன் வீதி, முதலியன முக்கிய வழித்தடங்கள். கர்நாடக இசை, ஆன்மிகம், நாடகம், புதினம் போன்றவை சென்னையில் தழைத்தோங்கியதற்கு மாம்பலத்தின் பங்கும் இன்றியமையாதது.

பெயர்க்காரணம்

[தொகு]

வில்வ மரங்கள் (Aegle mermelos) நிறைந்த பகுதியாதலால் மாவில்வம்=மாவிலம்=மாம்பலம் எனப் பெயர் பெற்றது.

"மயிலை மேல் அம்பலம்" (மயிலையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளதால்), மேல் அம்பலம் பிந்நாளில் "மேற்கு மாம்பலம்" என மருவியதாகவும் நம்பப்படுகிறது.

வரலாறு

[தொகு]

சென்னை மாநகரத்துடன் இணைப்பதற்கு முன்பு, மாம்பலம் பகுதி செங்கல்பட்டு மாவட்டம் சைதை (சைதாபேட்டை) வட்டத்தில் ஒரு கிராமமாக விளங்கியது. நகரமயமாக்கல் மூலம் மாம்பலம் பகுதிகள் சீர்படுத்தப்பெற்றன. 1911ல் கட்டப்பட்ட மாம்பலம் தொடருந்து நிலையம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார தொடருந்தின் முக்கிய வழித்தடமாகும்.

கோயில்கள்

[தொகு]

இங்குள்ள காசி விஸ்வநாத சுவாமி , மற்றும் கோதண்டராம சுவாமி முதலியன முக்கிய சைவ, வைணவத் திருத்தலங்களாகும்.

அயோத்தியா மண்டபம்

[தொகு]

1954-ஆம் ஆண்டில் துவகக்ப்பட்ட சிறீ ராம் சமாஜம் மூலம் சைவ, வைணவ ஆன்மிக வழிபாட்டிடமாக விளங்குகிறது. இங்கு இராம நவமி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆர்யகௌடா சாலை

[தொகு]

ராவ் பகதூர் ஹச். பி. ஆர்ய கௌடரின் நினைவாக இச்சாலை ஆர்ய கௌடா சாலையென வழங்கப்பெறுகிறது. சென்னையின் ரயில் நிலைய சேவைக்கு இவர் ஆற்றிய அருந்தொண்டினால் இப்பெயரிடப்பட்டது.

இங்கு வாழ்ந்த முக்கிய பிரமுகர்கள்

[தொகு]

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.

அமைவிடம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாம்பலம்&oldid=4168794" இலிருந்து மீள்விக்கப்பட்டது