உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பெரும்புதூர்

ஆள்கூறுகள்: 12°57′45″N 79°56′43″E / 12.962500°N 79.945300°E / 12.962500; 79.945300
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்ரீபெரும்புதூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருப்பெரும்புதூர்
திருப்பெரும்புதூர்
அமைவிடம்: திருப்பெரும்புதூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°57′45″N 79°56′43″E / 12.962500°N 79.945300°E / 12.962500; 79.945300
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
வட்டம் திருப்பெரும்புதூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி திருப்பெரும்புதூர்
மக்களவை உறுப்பினர்

த. ரா. பாலு

சட்டமன்றத் தொகுதி திருப்பெரும்புதூர்
சட்டமன்ற உறுப்பினர்

கு. செல்வப்பெருந்தகை (இ.தே.கா)

மக்கள் தொகை

அடர்த்தி

24,864 (2011)

1,480/km2 (3,833/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

19.39 சதுர கிலோமீட்டர்கள் (7.49 sq mi)

66 மீட்டர்கள் (217 அடி)

இணையதளம் www.townpanchayat.in/sriperumbudur

திருப்பெரும்புதூர் (ஆங்கிலம்: Sriperumbudur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்பெரும்புதூர் வட்டத்தின் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். மேலும் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்கு இயங்குகிறது.

திருப்பெரும்புதூர் வைணவ ஆச்சாரியரான இராமானுசர் பிறந்த தலமாகும். இப்பபகுதியில் ஆதிகேசவபெருமாள் மற்றும் இராமானுஜர் திருக்கோயில் அமைந்துள்ளது. முன்னாள் பாரதப் பிரதமர் பாரத ரத்னா இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நினைவிடமும் இந்த பகுதியில் உள்ளது. திருப்பெரும்புதூர் நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

அமைவிடம்

[தொகு]

திருப்பெரும்புதூர் நகராட்சிக்கு தெற்கே காஞ்சிபுரம் 38 கிமீ; வடக்கே சென்னை 33 கிமீ; கிழக்கே தாம்பரம் 25 கிமீ; மேற்கே திருவள்ளூர் 18 கிமீ தொலைவில் உள்ளது.

நகராட்சியின் அமைப்பு

[தொகு]

19.39 சகிமீ பரப்பும், 15 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 383 தெருக்களையும் கொண்ட இப்பகுதி திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4][5]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதி 6,318 வீடுகளும், 24,864 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பகுதியின் எழுத்தறிவு 86.26% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 950 பெண்கள் வீதம் உள்ளனர்.[6]

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 12°58′N 79°57′E / 12.97°N 79.95°E / 12.97; 79.95 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 37 மீட்டர் (121 அடி) உயரத்தில் இருக்கின்றது.

தொழிற்சாலைகள்

[தொகு]
  • டெல் - மடிக்கணினி, மேசைக் கணினி உற்பத்தி தொழிற்சாலை
  • ஹுன்டாய் தானுந்து தொழிற்சாலை
  • ஜெ.கெ டயர்ஸ்
  • செயிண்ட் கோபைன்
  • பாக்ஸ்கான்
  • சாம்சங் - குளிர்சாதன பெட்டி

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திருப்பெரும்புதூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Sriperumbudur Town Panchayat
  6. Sriperumbudur Population Census 2011
  7. "Sriperumbudur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பெரும்புதூர்&oldid=4155659" இலிருந்து மீள்விக்கப்பட்டது