மைசூர்
மைசூர்
ಮೈಸೂರು (கன்னடம்) எருமையூர் | |
---|---|
மைசூரு | |
![]() மேலிருந்து கடிகார திசையில்: மைசூர் அரண்மனை, சிவசமுத்திரம் அருவி, இன்ஃபோசிஸ் மல்டிபிளக்ஸ், மாண்டியாவில் பிருந்தாவன் தோட்டம், சோமநாதபுரம், லலித மகால், புனித பிலோமினா தேவாலயம் மற்றும் சாமுண்டீஸ்வரி கோயில். | |
அடைபெயர்(கள்): பாரம்பரிய நகரம், அரண்மனைகளின் நகரம், கருநாடகத்தின் கலாச்சார தலைநகரம், சந்தன மர நகரம்,[1] மல்லிகை நகரம் | |
ஆள்கூறுகள்: 12°18′31″N 76°39′11″E / 12.30861°N 76.65306°E | |
நாடு | ![]() |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ![]() |
கோட்டம் | மைசூர் |
மாவட்டம் | மைசூர் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | மைசூர் மாநகராட்சி |
• மாநகர முதல்வர் | சிவகுமார்[2] (பா.ச.க.) |
• துணை மாநகர முதல்வர் | ஜி. ரூபா[2] |
பரப்பளவு | |
• பெருநகரம் | 112.81 km2 (110.5 sq mi) |
• நாட்டுப்புறம் | 703 km2 (271 sq mi) |
• மாநகரம் | 156 km2 (60 sq mi) |
ஏற்றம் | 770 m (2,503 ft) |
மக்கள்தொகை (2011) | |
• பெருநகரம் | 9,20,550 |
• அடர்த்தி | 8,200/km2 (8,300/sq mi) |
• நாட்டுப்புறம் | 3,88,706[3] |
• பெருநகர் | 10,60,120 |
இனம் | மைசூர்காரன் |
நேர வலயம் | ஒசநே+05:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 570 0xx |
வாகனப் பதிவு | KA-09, KA-55 |
தொலைபேசி குறியீடு | 91-(0)821-XXX-XXXX |
UN/LOCODE | IN MYQ MYS |
அலுவல் மொழி | கன்னடம்[4] |
இணையதளம் | www |
மைசூர், அல்லது எருமையூர், இந்தியாவிலுள்ள கருநாடகத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இது மைசூர் மாவட்டத்தின் மற்றும் மைசூர் கோட்டத்தின் நிர்வாக மையமாகும். மைசூர் நகரமே பண்டைய மைசூர் இராச்சியத்தின் தலைநகரமுமாகும். இங்கு கன்னடம் பரவலாக பேசப்பட்டாலும் தமிழ் பேசுவோரும் கணிசமாக குறிப்பிட்ட தக்க அளவில் உள்ளனர்.
சங்கநூல் குறிப்புகள்
[தொகு]எருமையூர், மையூர் என்னும் பெயர்களால் இவ்வூர் சங்ககாலத்தில் வழங்கப்பட்டு வந்தது. மைசூர் நாடு 'எருமை நன்னாடு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மையூர் கிழான் என்பவன் சேரவேந்தன் இளஞ்சேரல் இரும்பொறையின் அமைச்சனாக இருந்தவன். இந்தச் சேரவேந்தனின் தந்தை குட்டுவன் இரும்பொறைக்குப் பெண் கொடுத்தவன். வேளிர் குடியைச் சேர்ந்தவன். இளஞ்சேரல் இரும்பொறைக்குத் தாய்வழிப் பாட்டன். (பதிற்றுப்பத்து - ஒன்பதாம் பத்து - பதிகம்)
தலையாலங்கானம் என்னுமிடத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்துப் போரிட்ட எழுவர் கூட்டணியில் எருமையூரன் என்பவனும் ஒருவன். (அகநானூறு 36)
இக்கால மைசூர்
[தொகு]மைசூர் அரண்மனையும் பிருந்தாவன் தோட்டமும் மிகப் புகழ்பெற்றவையாகும். மைசூரில் ஒரு பெரிய அருங்காட்சியகமும் உள்ளது. மைசூர் மிருகக்காட்சிசாலை ஒரு புகழ்பெற்ற விலங்குக் காட்சிச்சாலை. இங்கு மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ 2.0 2.1 Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ THE KARNATAKA LOCAL AUTHORITIES (OFFICIAL LANGUAGE) ACT, 1981 https://indiacode.nic.in/bitstream/123456789/7897/1/30_of_1981_%28e%29.pdf