கதக் மாவட்டம்
கதக் மாவட்டம் | |
— மாவட்டம் — | |
அமைவிடம்: கதக் மாவட்டம், கருநாடகம்
| |
ஆள்கூறு | 15°25′00″N 75°37′00″E / 15.41667°N 75.61667°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
ஆளுநர் | தவார் சந்த் கெலாட் |
முதலமைச்சர் | கே. சித்தராமையா |
மக்களவைத் தொகுதி | கதக் மாவட்டம் |
மக்கள் தொகை | 10,64,570 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | https://gadag.nic.in/en/ |
கதக் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கதக் நகரத்தில் உள்ளது. . 1997 ஆம் ஆண்டில் தார்வாட் மாவட்டத்திலிருந்து சில பகுதிகளைப் பிரித்து இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது.
அமைவிடம்
[தொகு]இதன் வடக்கில் பாகல்கோட் மாவட்டமும், கிழக்கில் கொப்பள் மாவட்டமும், தென்கிழக்கில் பெல்லாரி மாவட்டமும், தென்மேற்கில் ஆவேரி மாவட்டமும், மேற்கில் தார்வாட் மாவட்டமும், வடமேற்கில் பெல்காம் மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]கதக் மாவட்டம் 7 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. [1]
- கதக் வட்டம்
- முந்தராகி வட்டம்
- நர்குண்டு வட்டம்
- ரோன் வட்டம்
- சிராஹட்டி வட்டம்
- கஜேந்திரகாட் வட்டம்
- லட்ச்மேஷ்வர் வட்டம்
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, கதக் மாவட்டத்தின் மக்கள் தொகை 1,064,570 ஆகும். அதில் ஆண்கள் 537,147 மற்றும் 527,423 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.12%ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 85.27% , இசுலாமியர் 13.50 %, கிறித்தவர்கள் 0.32 %, சமணர்கள் 0.56 % மற்றும் பிறர் 0.35% ஆக உள்ளனர்.[2]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புக்கள்
[தொகு]- கர்நாடகா ஆன்லைன் இணைய தளத்தில் கதக் மாவட்டப் பக்கம் பரணிடப்பட்டது 2009-03-18 at the வந்தவழி இயந்திரம்