உள்ளடக்கத்துக்குச் செல்

மையூர் கிழான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மையூர் கிழான் என்பவன் மையூர் அரசன்.
இவன் வேளிர் குடியினன் ஆதலால் ‘மையூர் கிழான் வேள்’ எனப்பட்டான்.
இந்த வேளின் மகள் ‘வேண்மாள்’.
இவளுக்குத் தந்தை இட்ட பெயர் ‘அந்துவஞ்செள்ளை’.
அந்துவஞ்செள்ளை குட்டுவன் இரும்பொறைக்கு மணம் முடித்துக் கொடுக்கப்பட்டாள்.
குட்டுவன் இரும்பொறைக்கும் அந்துவஞ்செள்ளைக்கும் மகனாகப் பிறந்தவன் இளஞ்சேரல் இரும்பொறை.[1]

மேலைக் கடற்கரைச் சேர மன்னர்கள் பொதினிமலை வேளிரோடு மண உறவு கொண்டிருந்தனர்.

கொங்கு நாட்டுக் கருவூர்ச் சேர மன்னர்கள் மைசூர் மன்னனோடும் மண உறவு கொண்டிருந்தனர்.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
    வேண்மாள் அந்துவஞ்செள்ளை ஈன்ற மகன், (பதிற்றுப்பத்து பதிகம் 9)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மையூர்_கிழான்&oldid=1266807" இலிருந்து மீள்விக்கப்பட்டது