உள்ளடக்கத்துக்குச் செல்

திருவையாறு

ஆள்கூறுகள்: 10°53′N 79°06′E / 10.88°N 79.1°E / 10.88; 79.1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவையாறு
—  பேரூராட்சி  —
வரைபடம்:திருவையாறு, இந்தியா
திருவையாறு
அமைவிடம்: திருவையாறு, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°53′N 79°06′E / 10.88°N 79.1°E / 10.88; 79.1
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் திருவையாறு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், இ. ஆ. ப [3]
பெருந்தலைவர்
சட்டமன்றத் தொகுதி திருவையாறு
சட்டமன்ற உறுப்பினர்

துரை சந்திரசேகரன் (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

16,164

2,912/km2 (7,542/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5.55 சதுர கிலோமீட்டர்கள் (2.14 sq mi)

38 மீட்டர்கள் (125 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/thiruvaiyaru


திருவையாறு (Thiruvaiyaru), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவையாறு வட்டத்தில் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சிஆகும்.வரலாற்று சிறப்பு வாய்ந்தது.

அமைவிடம்

[தொகு]

திருவையாறு பேரூராட்சியிலிருந்து கும்பகோணம் 33 கி.மீ.; தஞ்சாவூர் 13.5 கி.மீ.; அரியலூர் 30 கி.மீ.; திருச்சி 50 கி.மீ., தொலைவிலும் உள்ளது.

புவியியல்

[தொகு]

திருவையாறு தஞ்சாவூருக்கு வடக்கே 11 km (6.8 mi) தொலைவில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

திருவையாறு 10°53′N 79°06′E / 10.88°N 79.1°E / 10.88; 79.1 இல் அமைந்துள்ளது.[4] இது சராசரியாக 38 மீட்டர்கள் (124 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது.

நகராட்சியின் அமைப்பு

[தொகு]

5.55 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)க்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,199 வீடுகளையும், 16,164 மக்கள்தொகையும் கொண்டது.[6][7]

வரலாறு

[தொகு]

பெயர்க் காரணம்

[தொகு]

திரு+ஐந்து+ஆறு காவிரி, மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது.

ஐயாறப்பர் கோயில்

[தொகு]

இங்குள்ள ஐயாறப்பர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.[8]. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேக்கிழார் அருளிய பெரியபுராணத்தின்படி அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலம் இதுவாகும்.

தியாகராஜ ஆராதனை விழா

[தொகு]

கருநாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான தியாகராஜ சுவாமிகள் நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான திருவையாற்றில், ஆண்டுதோறும் சனவரி மாதத்தில் தியாகராஜரின் சமாதியின் அருகில், தியாகராஜ ஆராதனை விழா என்ற இசை நிகழ்ச்சி ஐந்து நாள்கள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரு தனித்துமான இசைப் பெருவிழாவாக கருநாடக இசையுலகத்தினர் கருதுகிறார்கள். இதேபோல் சென்னையிலும் சென்னையில் திருவையாறு என்ற தலைப்பில் திருவையாற்றை முன்மாதிரியாகக் கொண்டு சென்னையில் ஆண்டுதோறும் இசை விழா நடைபெற்று வருகின்றது.

திருவையாறு சப்தஸ்தானம்

[தொகு]

சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்.[9] பின்னர் பிற சப்தஸ்தான பல்லக்குகள் அவரவர் தலங்களுக்குத் திரும்பும். இவ்வாறான திருவிழா கும்பகோணம், கரந்தட்டாங்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற இடங்களில் நடைபெறுகிறது.

திருநல்லூர், திருநீலக்குடி, திருக்கஞ்சனூர் ஆகிய இடங்களிலும் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது.[10]

கல்லூரி

[தொகு]

பள்ளிகள்

[தொகு]
  • அமல்ராஜ் மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளி
  • சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளி
  • தூய வளனார் உயர்நிலைப்பள்ளி
  • அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
  • சரஸ்வதி அம்மாள் நடுநிலைப் பள்ளி
  • இமாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Falling Rain Genomics, Inc - Thiruvaiyaru
  5. "திருவையாறு பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-27. Retrieved 2019-03-27.
  6. Thiruvaiyaru Population Census 2011[தொடர்பிழந்த இணைப்பு]
  7. Thiruvaiyaru Town Panchayat
  8. பஞ்சநதேஸ்வரர் (பஞ்ச நதி ஈசுரர்)
  9. திருவையாறில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி, தினமணி, மே 16, 2014
  10. ஏழூர்த் திருவிழாக்கள் (சப்தஸ்தானம்), முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவையாறு&oldid=4251547" இலிருந்து மீள்விக்கப்பட்டது