சோழம்பேட்டை அழகியநாதர் கோயில்
Appearance
சோழம்பேட்டை அழகியநாதர் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | சோழம்பேட்டை அழகியநாதர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | மயிலாடுதுறை |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அழகியநாதர் |
தாயார்: | அறம் வளர்த்த நாயகி |
அழகியநாதர் கோயில் தமிழ்நாட்டில், மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள சோழம்பேட்டையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.
அமைவிடம்
[தொகு]இத்தலம் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ளது.
இறைவன், இறைவி
[தொகு]இத்தலத்தில் உறையும் இறைவன் அழகியநாதர். இறைவி அறம்வளர்த்தநாயகி.
மயிலாடுதுறை சப்தஸ்தானம்
[தொகு]மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும்.
பங்கேற்கும் பிற கோயில்கள்
- அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில்
- மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை மயூரநாதசுவாமி கோயில்
- கூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர் கோயில்
- மூவலூர் மங்களநாயகி சௌந்தரநாயகி உடனுறை மார்க்கசகாய சுவாமிகோயில்
- துலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோயில்
- சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் கோயில்
இவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது[1].