உள்ளடக்கத்துக்குச் செல்

அரியலூர்

ஆள்கூறுகள்: 11°8′14″N 79°4′40″E / 11.13722°N 79.07778°E / 11.13722; 79.07778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரியலூர்
அரியலூர் தொடருந்து நிலையம்
அடைபெயர்(கள்): சிமெண்ட் நகரம்
அரியலூர் is located in தமிழ் நாடு
அரியலூர்
அரியலூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
அரியலூர் is located in இந்தியா
அரியலூர்
அரியலூர்
அரியலூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°8′14″N 79°4′40″E / 11.13722°N 79.07778°E / 11.13722; 79.07778
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
பகுதிசோழ நாடு
அரசு
 • வகைஇரண்டாம் நிலை நகராட்சி
 • நிர்வாகம்அரியலூர் நகராட்சி
 • மக்களவை உறுப்பினர்தொல். திருமாவளவன்
 • சட்டமன்ற உறுப்பினர்கே. சின்னப்பா (மதிமுக)
 • மாவட்ட ஆட்சியர்பி. இரத்னசாமி, இ. ஆ. ப [3]
ஏற்றம்
76 m (249 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்28,902
மொழிகள்
 • அலுவல்தமிழ் மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீடு
621 704, 621 713
தொலைபேசி குறியீடு91-4329
வாகனப் பதிவுTN 61
சென்னையிலிருந்து தொலைவு310 கி.மீ. (190 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு65 கி.மீ (40 மைல்)
தஞ்சாவூரிலிருந்து தொலைவு40 கி.மீ (26 மைல்)
வானிலையியல்830 மி.மீ
இணையதளம்ariyalur

அரியலூர் (Ariyalur), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், இரண்டாம் நிலை நகராட்சியும் ஆகும். மேலும் இந்தியாவிலே இங்கு தான் நிலத்தடியில் பாறை கற்களை உடைத்து குவாரி சுரங்கம் மூலமாக சுண்ணாம்புக்கல் மற்றும் பைஞ்சுதை காரையான (சிமெண்ட்) அதிகமாக கிடைப்பதால் அதை மையமாக கொண்டு பல சிமெண்ட் ஆலைகள் இவ்வூரை சுற்றி அதிகமாக உள்ளதால். அரியலூரை சிமெண்ட் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் தலைநகரமான சென்னை 310 கி.மீ. தொலைவில் உள்ளது.

பெயர்க்காரணம்

[தொகு]
  • அரியல் - ஒரு வகையான மதுபானம். இங்கு கள் உற்பத்தி இருந்ததனால் அந்த சிற்றூர் அரியலூர் என சொல்லப்பட்டிருக்கலாம்.
  • விஷ்ணுவின் பெயரால் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது.
  • ஹரியலூர் என்ற பெயரே காலப்போக்கில் அரியலூர் ஆக மாறியது.
  • அரி+இல்+ஊர்= அரியிலூர்.
    • அரி- விஷ்ணு
    • இல்- உறைவிடம்
    • ஊர்- பகுதி.
  • விஷ்ணு பகவான் உறைவிடம் கொண்ட பகுதி என்பதன் சுருக்கம்.
  • விஷ்ணு (திருமால்) சாந்தி வைணவ வழிபாட்டு திருக்கோயில்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதாலும் இவ்வூருக்கு அரியலூர் என்று பெயர் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
  • மேலும் அக்காலகட்டத்தில் ஜமீன் ஆதிக்கமிக்க பகுதியாக இவ்வூர் சுற்று புறங்களில் இருந்ததால் அம்மக்கள் அனைவரும் அறியாமையால் இருந்ததாலும் அறியலூர் என்ற பெயர் காலபோக்கில் " அரியலூர் " என மாறியது என்றும் கூறப்படுகிறது.

வரலாறு

[தொகு]

அரியலூர் மாவட்டம், சனவரி 1, 2001 இல் பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002 ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பொருளாதாரக் காரணங்களுக்காக, அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 இல் உருவாக்கப்பட்டது.[1] அரியலூர் நகரம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

புவியியல்

[தொகு]

அரியலூர் மாவட்டத்தில், (11°08′25″N 79°04′28″E / 11.1404°N 79.0745°E / 11.1404; 79.0745) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அரியலூர் நகரம் அமைந்துள்ளது.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது.

அரியலூர் is located in Ariyalur
அரியலூர்
அரியலூர்
அரியலூர் (Ariyalur)

எல்லைகள்

[தொகு]

கிழக்கே சிதம்பரம் 88 கிமீ; தெற்கே தஞ்சாவூர் 45 கிமீ; மேற்கே பெரம்பலூர் 31 கிமீ; வடக்கே விருத்தாசலம் 58 கிமீ; வடகிழக்கே கடலூர் 120 கிமீ; தென்மேற்கே திருச்சி 62 கிமீ; தொலைவிலும் அரியலூர் மாவட்ட எல்லைகளாக அமைந்துள்ளது.

தனித்துவம்

[தொகு]

இது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்றாகும்.

மக்கள் வகைப்பாடு

[தொகு]
மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
90.55%
முஸ்லிம்கள்
4.61%
கிறித்தவர்கள்
3.81%
சீக்கியர்கள்
0.02%
பௌத்தர்கள்
0.01%
சைனர்கள்
0.01%
மற்றவை
0.97%
சமயமில்லாதவர்கள்
0.01%

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 7,319 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 28,902 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,014 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,977 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 936 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,254 மற்றும் 8 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.55%, இசுலாமியர்கள் 4.61%, கிறித்தவர்கள் 3.81%, மற்றும் பிறர் 1.02.% ஆகவுள்ளனர்.[5]

அரியலூர் சிமெண்ட் ஆலைகள்

[தொகு]
  1. டான்செம் (TANCEM) (Tamilnadu Cement Corporation Limited). இது ஒரு அரசு நிறுவனம் ஆகும். இது 1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  2. ராம்கோ சிமென்ட் (Ramco Cement) கோவிந்தபுரம். 1997 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியால் துவங்கி வைக்கப்பட்டது. துவக்கத்தில் 0.9 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்யத்துவங்கிய ஆலை, தற்போது 3 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்கிறது. இந்தியாவிலேயே நான்கு இலை விருது (Four Leaves Award) வாங்கிய ஒரே நிறுவனம் ஆகும்.
  3. டால்மியா சிமெண்ட் (Dalmia Cement) தாமரைக்குளம். 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால், 2012 பசுமை விருது (Green Award-2012), 2012 ஆம் ஆண்டிற்கான சிஐஐ வினைதிறன் யூனிட் விருதும் (CII ENERGY EFFICIENT UNIT AWARD-2012) ஆக ஓராண்டில் இரண்டு விருதுகள் வாங்கியுள்ளது.
  4. செட்டிநாடு சிமெண்ட் (Chettinad Cement) கீழப்பழூர்.
  5. அல்ட்ரா டெக் சிமெண்ட் (Ultra Tech Cement) (Adithya Birla Group) ரெட்டிப்பாளையம்.
  6. இந்தியா சிமெண்ட் (Coromandel King-Sankar Sakthi) தளவை.

நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்

[தொகு]
நகராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர் கே. சின்னப்பா
மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன்

அரியலூர் நகராட்சியானது அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொல். திருமாவளவன் வென்றார்.

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான (மதிமுகவை) சேர்ந்த கே. சின்னப்பா வெற்றி பெற்றார்.

கல்லூரிகள்

[தொகு]
  1. அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர்.
  2. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரியலூர்.
  3. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜெயங்கொண்டம்.
  4. அரசு பொறியியல் கல்லூரி, அரியலூர்.
  5. அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி, கீழப்பழுவூர்.
  6. மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தத்தனூர்.
  7. விநாயகா கலை அறிவியல் மகளிர் கல்லூரி, கீழப்பழுவூர்.

கோயில்

[தொகு]

போக்குவரத்து

[தொகு]

பேருந்து போக்குவரத்து

[தொகு]

தொடருந்து போக்குவரத்து

[தொகு]

அரியலூர் தொடருந்து நிலையம் ஆனது சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியை இணைக்கும் ஒரு முக்கிய ரயில் நிலையமாகும். இங்கு தினமும் பல்லவன் தொடர்வண்டி, மலைக்கோட்டை விரைவுவண்டி, முத்து நகர் விரைவுவண்டி, வைகை விரைவுத் தொடர்வண்டி மற்றும் குருவாயூர் விரைவுவண்டி ஆகிய தொடர்வண்டிகள் இந்த இரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இந்நிலையத்திற்கு, காலை 7.40 மணிக்கு வந்தடையும், சென்னை எழும்பூரை நோக்கி செல்லும் பல்லவன் விரைவுத் தொடருந்துக்காக, தஞ்சாவூரிலிருந்து நேரடியாக இந்த தொடருந்து நிலையத்திற்கு ஒரு அரசு பேருந்து இயக்கப்படுகிறது.

வானூர்தி போக்குவரத்து

[தொகு]

இதன் அருகில் உள்ள வானூர்தி நிலையம் 76 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

வானிலை மற்றும் காலநிலை

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், அரியலூர் (1981–2001)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 42.0
(107.6)
42.4
(108.3)
42.4
(108.3)
45.4
(113.7)
48.4
(119.1)
42.0
(107.6)
41.5
(106.7)
49.6
(121.3)
44.4
(111.9)
42.2
(108)
42.2
(108)
42.4
(108.3)
49.6
(121.3)
உயர் சராசரி °C (°F) 31.2
(88.2)
33.2
(91.8)
36.2
(97.2)
38.2
(100.8)
39.1
(102.4)
37.5
(99.5)
36.6
(97.9)
36.2
(97.2)
35.6
(96.1)
34.5
(94.1)
32.4
(90.3)
31.3
(88.3)
35.2
(95.4)
தாழ் சராசரி °C (°F) 21.1
(70)
21.7
(71.1)
23.8
(74.8)
26.5
(79.7)
26.9
(80.4)
26.6
(79.9)
26.2
(79.2)
25.9
(78.6)
24.9
(76.8)
24.0
(75.2)
22.7
(72.9)
21.6
(70.9)
24.3
(75.7)
பதியப்பட்ட தாழ் °C (°F) 15.2
(59.4)
13.0
(55.4)
15.2
(59.4)
20.0
(68)
15.6
(60.1)
21.9
(71.4)
19.4
(66.9)
20.6
(69.1)
19.8
(67.6)
18.2
(64.8)
13.0
(55.4)
15.2
(59.4)
13.0
(55.4)
மழைப்பொழிவுmm (inches) 15.4
(0.606)
8.0
(0.315)
7.1
(0.28)
35.1
(1.382)
35.9
(1.413)
18.1
(0.713)
41.0
(1.614)
69.2
(2.724)
97.6
(3.843)
99.6
(3.921)
100.4
(3.953)
91.2
(3.591)
618.6
(24.354)
ஈரப்பதம் 69 60 52 50 52 52 53 57 63 72 77 75 61
சராசரி மழை நாட்கள் 1.0 0.5 0.5 0.8 1.8 1.0 2.7 3.5 5.3 5.9 5.4 4.4 32.8
ஆதாரம்: இந்திய வானிலை ஆய்வுத் துறை[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Official Website of Ariyalur District
  2. "Ariyalur". Falling Rain Genomics, Inc.
  3. Urban Infrastructure Report 2009, pp. 4-5
  4. "Census Info 2011 Final population totals - Ariyalur". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2014.
  5. அரியலூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
  6. "Station: Ariyalur Climatological Table 1981-2010" (PDF). Climatological Normals 1981-2010. இந்திய வானிலை ஆய்வுத் துறை. சனவரி 2015. pp. 51–52. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 7 மார்ச் 2020. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியலூர்&oldid=4138586" இலிருந்து மீள்விக்கப்பட்டது