உள்ளடக்கத்துக்குச் செல்

துவாக்குடி

ஆள்கூறுகள்: 10°45′09″N 78°49′47″E / 10.7526°N 78.8298°E / 10.7526; 78.8298
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துவாக்குடி நகராட்சி
துவாக்குடி நகராட்சி
அமைவிடம்: துவாக்குடி நகராட்சி, தமிழ்நாடு
ஆள்கூறு 10°45′09″N 78°49′47″E / 10.7526°N 78.8298°E / 10.7526; 78.8298
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
வட்டம் திருவெறும்பூர் வட்டம்
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
நகராட்சி தலைவர் இ.காயாம்பு
மக்களவைத் தொகுதி துவாக்குடி நகராட்சி
மக்கள் தொகை 21,460 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


120 மீட்டர்கள் (390 அடி)

குறியீடுகள்


துவாக்குடி (ஆங்கில மொழி: Thuvakudi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளியின் கூட்டுப் புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 9,402 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 38,887 ஆகும். அதில் 21,112 ஆண்களும், 17,775 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 89% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 842 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3261 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, பெண் குழந்தைகள் 956 வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 6,835 மற்றும் 386 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 83.68%, இசுலாமியர்கள் 5.05%, கிறித்தவர்கள் 10.8% மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர்.[1]

இவ்வூரின் சிறப்பு

[தொகு]

இவ்வூர் முற்காலத்தில் துழாய்க்குடி என்றழைக்கப்பட்டு, பின்னர் மருவி துவாக்குடி என்றழைக்கப் படுகிறது. இவ்வூரில் உள்ள சோழீசுவரர் கோவில் கல்வெட்டுகளின் மூலம் இத்தகவல் அறியப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கான தேசிய தொழில்நுட்பக் கழகம் துவாக்குடியில் அமைந்துள்ளது.

அருகில் அமைந்துள்ள ஊர்

[தொகு]

திருவெறும்பூர்

ஆதாரங்கள்

[தொகு]
  1. துவாக்குடி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=துவாக்குடி&oldid=3872248" இலிருந்து மீள்விக்கப்பட்டது