உள்ளடக்கத்துக்குச் செல்

கனோவிட் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனோவிட் (P210)
மலேசிய மக்களவைத் தொகுதி
 சரவாக்
Kanowit (P210)
Federal Constituency in Sarawak
கனோவிட் மக்களவைத் தொகுதி
(P210 Kanowit)
மாவட்டம்கனோவிட் மாவட்டம்
வட்டாரம்சிபு பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை30,988 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிகனோவிட் மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள்சரிக்கே
பரப்பளவு2,187 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1968
கட்சி      சரவாக் கட்சிகள் கூட்டணி
மக்களவை உறுப்பினர்ஆரோன் அகோ டகாங்
(Aaron Ago Dagang)
மக்கள் தொகை24,700 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1969
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

கனோவிட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kanowit; ஆங்கிலம்: Kanowit Federal Constituency; சீனம்: 加诺威联邦选区) என்பது மலேசியா, சரவாக், சிபு பிரிவின் கனோவிட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P210) ஆகும்.[5]

கனோவிட் மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1969-ஆம் ஆண்டில் இருந்து கனோவிட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

கனோவிட் மாவட்டம்

[தொகு]

கனோவிட் மாவட்டம் (Kanowit District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சிபு பிரிவில்; ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கனோவிட் நகரம்.[7][8] இந்த மாவட்டத்தின் முக்கிய இனக்குழுக்கள்: இபான், சீனர், மலாய்க்காரர் மற்றும் மெலனாவ் பூர்வீக மக்கள்.

வரலாற்றுப் பதிவுகளின்படி, 1851-ஆம் ஆண்டில் இருந்து கனோவிட் மாவட்டத்தின் வரலாறு தொடங்குகிறது. 1851-ஆம் ஆண்டில், ஜேம்சு புரூக் அங்கு ஒரு கோட்டையைக் கட்டினார். அதன் பெயர் எம்மா கோட்டை. அப்போது கனோவிட் நிலப்பகுதி, புரூணை பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.

1853-ஆம் ஆண்டில், ஜேம்சு புரூக், புரூணை சுல்தானகத்திடம் இருந்து ராஜாங் ஆற்றின் நிலப்பகுதிகளைப் பெற்றுக் கொண்டார். ஏற்கனவே கட்டப்பட்ட எம்மா கோட்டை, ராஜாங் ஆற்றைப் பயன்படுத்திய மக்களுக்கு டயாக் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு அளித்தது.

கனோவிட் மக்களவைத் தொகுதி

[தொகு]




கனோவிட் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[9]

  சீனர் (11.3%)
  இதர இனத்தவர் (0.8%)





கனோவிட் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (49.94%)
  பெண் (50.06%)

கனோவிட் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (6.28%)
  21-29 (19.45%)
  30-39 (20.88%)
  40-49 (16.43%)
  50-59 (16.27%)
  60-69 (11.83%)
  70-79 (5.78%)
  80-89 (2.11%)
  + 90 (0.98%)
கனோவிட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2024)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
கனோவிட் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
1969-1971 நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[10][11]
3-ஆவது மக்களவை P138 1971-1974 ஜோசப் உந்திங் உமாங்
(Joseph Unting Umang)
சுயேச்சை
4-ஆவது மக்களவை P148 1974-1976 லியோ மோகி
(Leo Moggie Irok)
சரவாக் தேசிய கட்சி (SNAP)
1976-1978 பாரிசான் நேசனல் (BN)
(சரவாக் தயாக் மக்கள் கட்சி) (PBDS)
5-ஆவது மக்களவை 1978-1982
6-ஆவது மக்களவை 1982-1986
7-ஆவது மக்களவை P171 1986-1990
8-ஆவது மக்களவை P170 1990-1995
9-ஆவது மக்களவை P182 1995-1999
10-ஆவது மக்களவை P183 1999-2004 பாரிசான் நேசனல் (BN)
(சரவாக் மக்கள் கட்சி) (PRS)
11-ஆவது மக்களவை P209 2004-2008 ஆரோன் அகோ டகாங்
(Aaron Ago Dagang)
12-ஆவது மக்களவை P210 2008-2013
13-ஆவது மக்களவை 2013-2018
14-ஆவது மக்களவை 2018
2018-2022 சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)
(சரவாக் மக்கள் கட்சி) (PRS)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
ஆரோன் அகோ டகாங்
(Aaron Ago Dagang)
சரவாக் கட்சிகள் கூட்டணி
(GPS)
7,41141.0741.07 Increase
முகமட் பவுசி அப்துல்லா
(Mohd Fauzi Abdullah)
பாக்காத்தான்
(PH)
7,17539.774.35 Increase
மைக்கெல் லியாஸ்
(Michael Lias)
சுயேச்சை
(Independent)
2,28912.6912.69 Increase
ஜார்ஜ் சென் நுக் ஃபா
(George Chen Nguk Fa)
சுயேச்சை
(Independent)
7414.114.11 Increase
எல்லி லுகாத்
(Elli Luhat)
சுயேச்சை
(Independent)
4272.372.37 Increase
மொத்தம்18,043100.00
செல்லுபடியான வாக்குகள்18,04398.01
செல்லாத/வெற்று வாக்குகள்3671.99
மொத்த வாக்குகள்18,410100.00
பதிவான வாக்குகள்30,9881841013.83
Majority2361.327.85
      சரவாக் கட்சிகள் கூட்டணி கைப்பற்றியது
மூலம்: [12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. "Malaysia Districts". Statoids.com.
  8. "Malaysia: Administrative Division". City Population.
  9. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
  10. Ahmad Fauzi Mustafa (2012-03-12). "Hanya Yang di-Pertuan Agong ada kuasa panggil Parlimen bersidang". Utusan Online. http://ww1.utusan.com.my/utusan/info.asp?y=2012&dt=0312&pub=Utusan_Malaysia&sec=Rencana&pg=re_05.htm. 
  11. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
  12. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]