பெக்கெனு
Appearance
பெக்கெனு நகரம் | |
---|---|
Bekenu Town | |
சரவாக் | |
ஆள்கூறுகள்: 4°03′0″N 113°51′0″E / 4.05000°N 113.85000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | மிரி |
மாவட்டம் | பெக்கெனு |
பெக்கெனு (மலாய் மொழி: Bekenu; ஆங்கிலம்: Bekenu) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் மிரி பிரிவு; பெக்கெனு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். மாநிலத் தலைநகர் கூச்சிங்கில் இருந்து வடகிழக்கில் சுமார் 477.6 கி.மீ. (297 மைல்) தொலைவில் இந்த நகரம் அமைந்து உள்ளது.[1]
இந்த நகரத்திற்கு பெக்கெனு பசார் (Bekenu Bazaar) எனும் மற்றொரு பெயரும் உண்டு.
பொது
[தொகு]இந்த நகரத்தில் சில வரிசை கடைவீடுகளும் மீன் சந்தையும் உள்ளன. நகர சதுக்கம் பெக்கெனு ஆற்றை எதிர்கொள்கிறது. இங்குள்ள பல கடைவீடுகள் 1930-ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டவை.[2]
1962-ஆம் ஆண்டில் பெக்கெனுவில் மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டது. பல கடைகள் வெள்ளத்தில் மூழ்கின.