உள்ளடக்கத்துக்குச் செல்

தலாத் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலாத் மாவட்டம்
Dalat District
Daerah Dalat
தலாத் மாவட்டம் is located in மலேசியா
தலாத் மாவட்டம்

      தலாத்து மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 2°44′20″N 111°56′19″E / 2.73889°N 111.93861°E / 2.73889; 111.93861
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுமுக்கா பிரிவு
மாவட்டங்கள்தலாத் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்905.29 km2 (349.53 sq mi)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்21,147
 • அடர்த்தி23/km2 (61/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
96300
இணையதளம்www.mukah.sarawak.gov.my
தலாத் நகரத்தின் வான்வழி காட்சி. அங்கு காணப்படும் பெரிய ஆறு பாடாங் ஓயா ஆறு (2011).

தலாத் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Dalat; ஆங்கிலம்: Dalat District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; முக்கா பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டம் ஓயா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் தலைநகரத்தின் பெயர் தலாத்.[1]

இந்த மாவட்டம் 905.29 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் துணை மாவட்டமான ஓயா துணை மாவட்டம் 147.47 சதுர கி.மீ. பரப்பளவைக் பரப்பளவைக் கொண்டது.[2]

வரலாறு

[தொகு]

மாவட்டத்தின் சுருக்கமான வரலாறு:

  • 2 ஏப்ரல் 1974 - தலாத் நகரத்தை நிர்வாக மையமாகக் கொண்டு, தலாத் ஒரு மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டம் சிபு பிரிவின் கீழ் இருந்தது; மற்றும் ஓயா (Oya), பெரும் தலாத் (Dalat Proper), நங்கா பாவோ (Nanga Baoh), நங்கா தமின் (Nanga Tamin), இசுதாபாங் (Stapang), இசுகிம் செகுவா (Skim Sekuau) மற்றும் நங்கா பாக்கோ (Nanga Pakoh) ஆகிய இடங்களை உள்ளடக்கி இருந்தது. மாவட்டத்தில் 4 சிறிய நகரங்கள், 23 கிராமங்கள் மற்றும் 115 நீள வீடுகள் இருந்தன.
  • 1 மார்ச் 2002 - முக்கா பகுதி முக்கா பிரிவு என தரம் உயர்த்தப்பட்டது; மாவட்டத்தில் 3 சிறிய நகரங்கள், 23 கிராமங்கள் மற்றும் 22 நீள வீடுகள் இருந்தன.

மக்கள்தொகையியல்

[தொகு]

மலேசிய புள்ளியியல் துறையின் 2020-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தலாத் மாவட்டம் 21,147 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.

பொருளாதாரம்

[தொகு]

தலாத் மாவட்டத்தின் முக்கிய வேளாண் விளைபொருள் சவ்வரிசி மாவு ஆகும். 28,765 எக்டர் வேளாண் நிலம் சவ்வரிசி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 4 சவ்வரிசி மாவு தொழிற்சாலைகள் நாள் ஒன்றுக்கு 75 டன் சவ்வரிசி மாவை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.[3]

மொழிகள்

[தொகு]

இங்குள்ள மக்களில் பெரும்பான்மையோர் மெலனாவு மொழியைப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் இடையே மொழி வேறுபாடு உள்ளது.

இருப்பினும், அவர்கள் அந்த மொழியின் பேச்சுவழக்குகளை நன்றாகப் புரிந்து கொள்கிறார்கள். மலாய் மொழி, சரவாக் மலாய் மொழி, இபான் மொழி, மாண்டரின் மொழி, ஹொக்கியன் மொழி மற்றும் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளும் பரவலாகப் பேசப்படுகின்றன.

கல்வி

[தொகு]

இந்த மாவட்டத்தில் தலாத் தேசிய மேல்நிலைப்பள்ளி (1977-இல் நிறுவப்பட்டது); மற்றும் ஓயா தேசிய உயர்நிலைப்பள்ளி (2004 இல் நிறுவப்பட்டது) என இரண்டு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மேலும் மாவட்ட அதிகார வரம்பிற்குள் 25 தொடக்கப் பள்ளிகளும் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The district of Dalat is rich with culture and history waiting to be discovered". Borneo Post Online. 22 July 2013. பார்க்கப்பட்ட நாள் 2 October 2024.
  2. Pejabat Residen Bahagian Mukah (11 May 2018). "Senarai Nama Kampung dan Rumah Panjang di Bahagian Mukah" (XLSX). data.sarawak.gov.my (in ஆங்கிலம்). Sarawak Data. Archived from the original on 2019-07-05. பார்க்கப்பட்ட நாள் 20 May 2021.
  3. "Mukah: Dari Taman Rumbia ke Kota Bestar". Pejabat Residen Mukah. பார்க்கப்பட்ட நாள் 12 September 2014.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலாத்_மாவட்டம்&oldid=4105451" இலிருந்து மீள்விக்கப்பட்டது