மெராடோங் மாவட்டம்
மெராடோங் மாவட்டம் Meradong District Daerah Meradong | |
---|---|
ஆள்கூறுகள்: 2°06′09″N 111°42′49″E / 2.10250°N 111.71361°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | சரிக்கே பிரிவு |
மாவட்டங்கள் | மெராடோங் மாவட்டம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 96500[1] |
மெராடோங் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Meradong; ஆங்கிலம்: Meradong District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சரிக்கே பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். மெராடோங் மாவட்டத்தின் தலைநகரம் பிந்தாங்கூர் (Bintangor).
மெரடோங் மாவட்டம் 719 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மாவட்டம் சரவாக் மாநிலத்தின் மிகச்சிறிய மாவட்டமாக அறியப்படுகிறது. இது சரிக்கே மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
பொது
[தொகு]மாவட்டத்தின் மையத்தில் பாயும் ஆற்றின் பெயரில் இருந்து மெராடோங் என்ற பெயர் வந்தது. சனவரி 24, 1984 அன்று, இந்த மாவட்டத்தின் பெயர் மெராடோங் மாவட்டம் என மாற்றப்பட்டது.[2]
13 பிப்ரவரி 1984 தேதியிட்ட சரவாக் அரசாங்க அரசிதழ் பகுதி II, தொகுதி:XXXIX, எண்.4 (Sarawak Government Gazette Part II, Vol:XXXIX, No.4) வழியாக மாவட்டத்தின் பெயர் மாற்றம் அரசிதழில் வெளியிடப்பட்டது.
பிந்தாங்கூர் நகரம், மெராடோங் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். பிந்தாங்கூர் நகரில் நான்கு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.[3]
கல்வி
[தொகு]மெராடோங் மாவட்டத்தில் 32 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 18 தேசியப் பள்ளிகள் (SK); மற்றும் 14 தேசிய வகை பள்ளிகள் (SJK(c).
மலேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் (Malaysian Teachers Education Institute) இராஜாங் வளாகம், பிந்தாங்கூர் நகரத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Meradong, Bintangor - Postcode - 96500 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 1 October 2024.
- ↑ "Meradong District Office Introduction - Official Portal of Sarikei Division Administration". sarikei.sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 October 2024.
- ↑ "Bintangor town quiet after wharf destroyed". The Borneo Post. 25 June 2015 இம் மூலத்தில் இருந்து 12 April 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170412061432/http://www.theborneopost.com/2015/06/25/bintangor-town-quiet-after-wharf-destroyed/.
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Matu District தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Matu & Daro District Council Official Website