கம்பார் மாவட்டம்

ஆள்கூறுகள்: 4°20′N 101°15′E / 4.333°N 101.250°E / 4.333; 101.250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்பா மாவட்டம்
Daerah Kampa
பேராக்
கம்பார் மாவட்டம் அமைவிடம் பேராக்
கம்பார் மாவட்டம் அமைவிடம் பேராக்
கம்பார் மாவட்டம் is located in மலேசியா
கம்பார் மாவட்டம்
ஆள்கூறுகள்: 4°20′N 101°15′E / 4.333°N 101.250°E / 4.333; 101.250
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
தொகுதிகம்பார்
பெரிய நகரம்பாரிட்
நகராட்சிகம்பார் மாவட்ட மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்669.80 km2 (258.61 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்97,167
 • மதிப்பீடு 
(2015)
1,03,600
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
316xx - 319xx
தொலைபேசி எண்கள்+6-05
வாகனப் பதிவெண்A

கம்பார் மாவட்டம் (Daerah Kampar) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் செரி இசுகந்தர் நகரத்தை மையமாகக் கொண்டது. பேராக் தெங்கா மாவட்ட மன்றத்தால் நிர்வகிக்கப் படுகிறது; இருப்பினும் பாரிட் நகரமே இந்தப் பகுதியில் மிகப் பெரிய குடியேற்ற இடமாகும்.

2009 மே மாதம் 21-ஆம் தேதி, பேராக் சுல்தான் கம்பார் மாவட்டத்தை மாநிலத்தின் 10-வது மாவட்டமாக அறிவித்தார். அதன் பின்னர் இது ஒரு மாவட்டத் தகுதியைப் பெற்றது. கம்பார் மாவட்டம் மாநிலத்தின் சிறிய மாவட்டமாகும். கம்பார் நகரத்தை மையமாகக் கொண்டு கம்பார் மாவட்ட மன்றம் இயங்கி வருகிறது.

பொது[தொகு]

வரலாற்று ரீதியாக, கம்பார் மாவட்டம் ஒரு காலத்தில் ஈயத்திற்குப் பிரபலமானது, இது 18-ஆம் நூற்றாண்டில் ஈய உற்பத்தியில் முக்கிய இடமாகவும் முதல் இடமாகவும் இருந்தது. கிந்தா பள்ளத்தாக்கில் கம்பார் மாவட்டம் ஒரு பகுதியாகும்.[1]

19-ஆம் நூற்றாண்டில், கிந்தா மாவட்டம் அதன் ஈய உற்பத்திக்கு பிரபலம் அடைந்தது. உலகில் ஈயம் உற்பத்தி செய்யும் பள்ளத்தாக்குகளில் கிந்தா பள்ளத்தாக்கு முதலிடம் பெற்றது.[2]

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

கம்பார் மாவட்டம் 2 முக்கிம்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.

  • கம்பார் (Kampar)
  • தேஜா (Teja)

மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்[தொகு]

பின்வரும் கம்பார் மாவட்ட மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் மலேசியா 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.[3]

கம்பார் மாவட்ட மக்கள் இனவாரியாக: 2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு
இனம் மக்கள் தொகை விழுக்காடு
மலாய்க்காரர்கள் 35,033 36.1%
சீனர்கள் 51,341 52.8%
இந்தியர்கள் 10,638 11.0%
மற்றவர்கள் 115 0.1%
மொத்தம் 97,167 100%

மலேசிய நாடாளுமன்றம்[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) கம்பார் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.

நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
P70 கம்பார் நகரம் சூ கியோங் சியோங் பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க)
P71 கோப்பேங் லீ பூன் சாய் பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்.)

பேராக் மாநிலச் சட்டமன்றம்[தொகு]

பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் கம்பார் மாவட்டப் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P70 N41 மாலிம் நாவார் லியோங் சியோக் கெங் பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க)
P70 N42 கெராஞ்சி சோங் சேமின் பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க)
P70 N43 துவாலாங் செக்கா நோலி அஸ்லின் முகமட் ராட்சி பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்.)
P71 N46 தேஜா சாந்திரியா நிங் சை சிங் பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்.)

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பார்_மாவட்டம்&oldid=3995783" இலிருந்து மீள்விக்கப்பட்டது