சிக்குசு
ஆள்கூறுகள்: 4°03′N 101°6′E / 4.050°N 101.100°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
மாவட்டம் | ஈலிர் பேராக் மாவட்டம் |
உருவாக்கம் | 1880 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | www.mpti.gov.my |
சிக்குஸ் அல்லது சிக்குசு என்பது (மலாய்:Chikus; ஆங்கிலம்:Chikus; சீனம்:筑氏) மலேசியா, பேராக் மாநிலத்தில், ஈலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுநகரம்.
இந்த நகரத்திற்கு அருகில் சுங்கை பத்தாங் பாடாங்; சுங்கை மானிக் ஆறுகள் ஓடுகின்றன. அருகில் உள்ள நகரம் தெலுக் இந்தான். மிக அருகில் தாப்பா தொடருந்து நிலையம் உள்ளது. இது ஒரு கிராமப்புறச் சிறுநகரம்.
பொது
[தொகு]டிரான்ஸ் பேராக் - சுங்கை மானிக் நெல் வேளாண்மைத் திட்டத்திற்கு ஒரு முக்கியப் பகுதியாக விளங்குகிறது. இங்கு வாழ்பவர்களில் அதிகமானோர் மலாய்க்காரர்கள். நெல் வேளாண்மையில் ஈடுபட்டு உள்ளார்கள். மற்ற தொழில்கள் எண்ணெய்ப் பனை உற்பத்தி; டுரியான் பழத்தோட்டங்கள்.
சிக்குசு ஒரு கிராமப்புற நகரமாக உள்ளதால் பிற நகரங்களில் இருந்து சற்று ஒதுக்குப் புறமாக அமைந்து உள்ளது. விரல்விட்டு எண்ணும் அளவிற்குத் தான் இந்தியர்கள் உள்ளார்கள். சீனர்களும் ஓரளவிற்கு உள்ளனர். கடைகள் வைத்து இருக்கிறர்ர்கள். 10 கி.மீ. அப்பால் []தாப்பா]] நகரம் உள்ளது. தாப்பா நகரில் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.
அத்தாடூரி பாலம் பாதிப்பு
[தொகு]2021 சனவரி மாதம் தாப்பா பகுதியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அதனால் சிக்குசு நகரத்திற்கு அருகில் இருந்த அத்தாடூரி (Attaduri) பாலம் பெரிதும் சிதைவுற்றது.[1] 22 இலட்சம் ரிங்கிட் செலவில் செப்பனிடும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Laluan Jambatan Attaduri ke Chikus, di sini terpaksa ditutup berikutan kerosakan jalan yang berlaku akibat arus deras dan limpahan air dari Sungai Batang Padang.
- ↑ Peruntukan berjumlah RM2.2 juta diperlukan untuk membaiki Jalan Besar Chikus yang menghubungkan pekan kecil Chikus dan Jalan Attaduri ke Teluk Intan yang sebahagiannya runtuh tengah malam Selasa akibat banjir yang melanda daerah Hilir Perak sejak Ahad lepas.