லூமுட் மக்களவைத் தொகுதி
லூமுட் (P074) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Lumut (P074) Federal Constituency in Perak | |
![]() | |
மாவட்டம் | மஞ்சோங் மாவட்டம் ![]() |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 92,972 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | லூமுட் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | லூமுட், பங்கோர் தீவு, ஆயர் தாவார், சித்தியவான் , ஸ்ரீ மஞ்சோங், பந்தாய் ரெமிஸ் |
பரப்பளவு | 343 ச.கி.மீ[3] |
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | ![]() |
மக்களவை உறுப்பினர் | நோர்டின் அகமது இசுமாயில் (Nordin Ahmad Ismail) |
மக்கள் தொகை | 80,485 (2020) [4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
லூமுட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Lumut; ஆங்கிலம்: Lumut Federal Constituency; சீனம்: 红土坎国会议席) என்பது மலேசியா, பேராக், மஞ்சோங் மாவட்டத்தில் (Manjung District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P074) ஆகும்.[7]
லூமுட் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து லூமுட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
லூமுட்[தொகு]
லூமுட் நகரம், பேராக், மஞ்சோங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரம். முன்பு காலத்தில் லூமுட் நகரம் ஒரு சிறு மீன்பிடி கிராமமாக இருந்தது. தற்சமயம் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த நகரம் கடல் முத்துச் சிப்பிகளுக்கும்; பவளக் கைவினைப் பொருட்களுக்கும் பெயர் பெற்று விளங்குகிறது.
ஈப்போ மாநகரில் இருந்து 77 கி.மீ. (48 மைல்); சித்தியவான் நகரில் இருந்து 12 கி.மீ. (7.5 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[8] லூமுட் நகரின் தொடக்கக் காலங்களில், கடற்கரை பாசிகள் நிறைந்து இருந்ததாகக் கூறப் படுகிறது. எனவே உள்ளூர் மக்கள் அந்த இடத்தை லூமுட் என்று அழைத்தனர்.
பங்கோர் உடன்படிக்கை 1874[தொகு]
மலாக்கா நீரிணையைப் பயன்படுத்தும் படகுகள், லூமுட்டில் அணைவதற்கு ஒரு படகுத் துறை உள்ளது. லூமுட் முகத்துவாரம் முன்பு சிவப்பு நிறக் கடற்பாசி மண்ணால் மூடப்பட்டு இருந்தது.
1874-ஆம் ஆண்டில் பங்கோர் உடன்படிக்கை 1874 கையெழுத்தானது. அந்த உடன்படிக்கையின்படி லூமுட் நகரம், நீரிணைக் குடியேற்றங்களில் (Straits Settlements) ஒரு பகுதியானது.
லூமுட் மக்களவைத் தொகுதி[தொகு]
லூமுட் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் சித்தியவான் தொகுதியில் இருந்து லூமுட் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P060 | 1974–1978 | ரிச்சர்ட் ஆங் உன் (Richard Ho Ung Hun) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | நிங் செங் குவாய் (Ng Cheng Kuai) | ||
7-ஆவது மக்களவை | P068 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | லிங் சூய் சியெங் (Ling Chooi Sieng) | ||
9-ஆவது மக்களவை | P071 | 1995–1999 | யாப் இட் தாங் (Yap Yit Thong) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | காங் சோ கா (Kong Cho Ha) | ||
11-ஆவது மக்களவை | P074 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | முகமது இம்ரான் அமீட் (Mohamad Imran Hamid) |
பாக்காத்தான் ராக்யாட் (மக்கள் நீதிக் கட்சி) | |
14-ஆவது மக்களவை | 2018–2022 | முகமது அத்தா ரம்லி (Mohd Hatta Ramli) |
பாக்காத்தான் அரப்பான் (அமாணா) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | நோர்டின் அகமது இசுமாயில் (Nordin Ahmad Ismail) |
பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) |
லூமுட் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022[தொகு]
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
92,972 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
72,672 | 76.54% | ![]() |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
71,162 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
520 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
990 | ||
பெரும்பான்மை (Majority) |
363 | 0.51% | ![]() |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் நேசனல் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [9] |
லூமுட் மக்களவை வேட்பாளர் விவரங்கள்[தொகு]
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
நோர்டின் அகமது இசுமாயில் (Nordin Ahmad Ismail) |
பெரிக்காத்தான் | 71,162 | 25,212 | 35.43% | + 35.43% ![]() | |
சாம்ரி அப்துல் காதர் (Zambry Abdul Kadir) |
பாரிசான் | - | 24,849 | 34.92% | - 5.26 % ![]() | |
முகமது அத்தா ரம்லி (Mohd Hatta Ramli) |
பாக்காத்தான் | - | 20,358 | 28.61% | - 12.32% ![]() | |
மசுலான் அப்துல் கனி (Mazlan Abdul Ghani) |
தாயக இயக்கம் | - | 385 | 0.54% | + 0.54% ![]() | |
முகமது இசுனின் இசுமாயில் (Mohd Isnin Ismail) |
வாரிசான் | - | 358 | 0.50% | + 0.50% ![]() |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Lumut lies about 48 miles (77 km) southwest of the tin-mining town of Ipoh.
- ↑ "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.