உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியப் பொதுத் தேர்தல், 1986

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியப் பொதுத் தேர்தல், 1986

← 1982 2–3 ஆகஸ்டு 1986 1990 →

மலேசிய மக்களவையின் 177 இடங்கள்
அதிகபட்சமாக 89 தொகுதிகள் தேவைப்படுகிறது
பதிவு செய்த வாக்காளர்கள்6,791,446
வாக்களித்தோர்69.97%
  First party Second party Third party
 
தலைவர் மகாதீர் முகமது லிம் கிட் சியாங் யூசோப் ராவா
கட்சி
பாரிசான் நேசனல்

ஜசெக

பாஸ்
முந்தைய
தேர்தல்
60.54%, 132 இடங்கள் 19.58%, 9 இடங்கள் 14.46%, 5 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
148 24 1
மாற்றம் Increase 16 Increase 15 4
மொத்த வாக்குகள் 2,649,238 975,544 716,952
விழுக்காடு 57.28% 21.09% 15.50%
மாற்றம் 3.26pp Increase1.51pp Increase1.04pp

முந்தைய பிரதமர்

மகாதீர் பின் முகமது
பாரிசான் நேசனல்

பிரதமர்-அமர்வு

மகாதீர் பின் முகமது
பாரிசான் நேசனல்


மலேசியப் பொதுத் தேர்தல், 1986 (1986 Malaysian General Election; மலாய்: Pilihan raya umum Malaysia 1986;) என்பது 1986 ஆகஸ்டு 2 - 3-ஆம் தேதிகளில், மலேசியாவில் நடைபெற்ற 7-ஆவது பொது தேர்தலைக் குறிப்பிடுவதாகும். மலேசியாவின் அப்போதைய 177 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது. அதே நாட்களில் மலேசியாவின் 11 மாநிலங்களில் உள்ள 351 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் மலேசிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. சபா, சரவாக் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவில்லை.

இந்தத் தேர்தலில் அம்னோ தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி, மொத்த 177 இடங்களில் 148 இடங்களை வென்றது. பாரிசான் நேசனல் கூட்டணிக்கு கிடைத்த வாக்குப்பதிவு 57.28%.[1][2]

பொது

[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. தேசியத் தேர்தல் ஒரு வகை. மாநிலத் தேர்தல் மற்றொரு வகை. மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காகத் தேசியப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தின் மக்களவையை டேவான் ராக்யாட் என்று அழைக்கிறார்கள். மலேசிய மாநிலங்களின் சட்ட மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக, மாநில அளவிலான மாநிலத் தேர்தல் நடைபெறுகிறது.[3]

தேசிய அளவில் அரசாங்கத்தை நிர்வாகம் செய்யும் தலைவரை மலேசியப் பிரதமர் அல்லது மலேசியப் பிரதம மந்திரி என்று அழைக்கிறார்கள். மாநிலச் சட்டப் பேரவைகள் அல்லது மாநிலச் சட்டமன்றங்கள் கலைக்கப்படுவதற்கு, மத்திய அரசாங்கத்தின் அனுமதி தேவை இல்லை. மாநிலச் சட்டமன்றங்கள் தனிச்சையாக இயங்கக் கூடியவை. அதனால், மாநில சுல்தான்களின் அனுமதியுடன் அவை கலைக்கப்பட முடியும்.[4]

தேசியப் பொதுத் தேர்தல்

[தொகு]

மலேசிய நாடாளுமன்றம், மக்களவை; மேலவை என இரு அவைகளைக் கொண்டது. மக்களவை 222 உறுப்பினர்களைக் கொண்டது. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்து எடுக்கப்படுகிறார். மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி வரையறுக்கப்படுகிறது. மக்களவையில் பெரும்பான்மை பெற்ற ஓர் அரசியல் கட்சி மத்திய அரசாங்கத்தை நிர்வாகம் செய்கிறது.

ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது சட்ட அரசியல் அமைப்பு விதியாகும். இருப்பினும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, மலேசிய மாமன்னரின் அனுமதியுடன் மலேசியப் பிரதமர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இரண்டே மாதங்களில், மேற்கு மலேசியாவில் பொதுத் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். கிழக்கு மலேசியாவில் மூன்று மாதங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
கட்சி அல்லது கூட்டணிவாக்குகள்%Seats+/–
பாரிசான் நேசனல்அம்னோ26,49,23857.2883+13
மலேசிய சீனர் சங்கம்17–7
கெராக்கான்50
மலேசிய இந்திய காங்கிரசு6+2
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி4–1
ஐக்கிய சபா கட்சி10புதிது
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி80
சரவாக் தேசியக் கட்சி4–2
மலேசிய இசுபுல் முசுலிமின் கட்சி1புதிது
ஐக்கிய சபா தேசிய அமைப்பு5+5
சரவாக் டயாக் இனக்கட்சி5புதிது
மொத்தம்148+16
ஜனநாயக செயல் கட்சி9,75,54421.0924+15
மலேசிய இசுலாமிய கட்சி7,16,95215.501–4
மலேசிய மக்கள் கட்சி59,1561.2800
மலேசியச் சமூக மக்களாட்சி கட்சி45,3400.9800
ஐக்கிய சபா மக்கள் கட்சி20,3600.4400
மலேசிய தேசியவாத கட்சி10,2280.220புதிது
சரவாக் ஐக்கிய தொழிலாளர் கட்சி9670.020புதிது
சபா தேசிய மோமோகன் கட்சி5840.010புதிது
சுயேச்சைகள்1,46,9033.184–4
மொத்தம்46,25,272100.00177+23
செல்லுபடியான வாக்குகள்46,25,27297.33
செல்லாத/வெற்று வாக்குகள்1,26,7322.67
மொத்த வாக்குகள்47,52,004100.00
பதிவான வாக்குகள்67,91,44669.97
மூலம்: Nohlen et al., IPU

மேற்கோள்கள்

[தொகு]
  1. Francis Kok-Wah Loh; Francis Loh Kok Wah; Boo Teik Khoo; Khoo Boo Teik (2002). Democracy in Malaysia: Discourses and Practices. Routledge. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7007-1161-9.
  2. Dieter Nohlen, Florian Grotz & Christof Hartmann (2001) Elections in Asia: A data handbook, Volume II, p152 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-924959-8
  3. Rahman, Rashid A. (1994). The Conduct of Elections in Malaysia, p. 10. Kuala Lumpur: Berita Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-969-331-7.
  4. Chow, Kum Hor (10 August 2005). "'Third government' is ratepayers' bugbear". New Straits Times. 

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]