உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய சீனர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Malaysian Chinese Association
மலேசிய சீன சங்கம்
தலைவர்வெய் ஜியாக்ஸியாங்
தொடக்கம்பிப்ரவரி 27, 1949
தலைமையகம்கோலாலம்பூர், மலேசியா
செய்தி ஏடுதி கார்டியன் The Guardian
இளைஞர் அமைப்பும.சீ.ச இளஞர் அணி
உறுப்பினர்மலேசியச் சீனர்கள்
கொள்கைதேசியவாதம், பழைமை வாதம், சமூக பழைமைவாதம், ஒழுக்கவாதம்
தேசியக் கூட்டணிபாரிசான் நேசனல்
நிறங்கள்நீலம், மஞ்சள்
மலேசிய நாடாளுமன்றம்
2 / 222
கட்சிக்கொடி
இணையதளம்
http://www.mca.org.my/

மலேசிய சீனர் சங்கம் (சுருக்கமாக ம.சீ.ச; Malaysian Chinese Association - MCA; (சீனம்: 马来西亚华人公会; மலாய்: Persatuan Cina Malaysia) என்பது மலேசியாவில் உள்ள சீனர்களைப் பிரதிநிதிக்கும் ஓர் அரசியல் சங்கம் ஆகும். இந்தச் சங்கம் மலேசியாவை ஆளும் அரசியல் கூட்டணியான பாரிசான் நேசனலின் ஒரு முக்கிய உறுப்புக் கட்சியாகும்.

ஐக்கிய மலாய்க்காரர்களின் தேசிய சங்கம் அம்னோ எனும் United Malays National Organisation (UMNO), மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா) எனும் Malaysian Indian Congress (MIC), இவை இரண்டும், பாரிசான் நேசனல் கூட்டணியின் இதர முக்கிய கட்சிகளாக விளங்குகின்றன. மலேசிய அரசியலில் மலேசிய சீனர் சங்கம், செல்வாக்கு மிக்க மிக முக்கிய அரசியல் கட்சியாகும்.

பின்புலம்

[தொகு]

மலேசியாவில் பிரபலமாக விளங்கும் ஐந்து தேசிய நாளிதழ்களை மலேசிய சீனர் சங்கம் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அவையாவன:

  • தி ஸ்டார், ஆங்கில நாளிதழ் (The Star)[1]
  • சின் சியூ ஜிட் போ, சீன நாளிதழ் (Sin Chew Jit Poh)[2]
  • நான்யாங் சியாங் பாவ், சீன நாளிதழ் (Nanyang Siang Pau)[3]
  • சைனா பிரஸ், சீன நாளிதழ் (China Press)[4]
  • குவாங் மிங், சீன நாளிதழ் (Guang Ming Daily)[5]

சீன நாளிதழ்கள், சரவாக் மாநிலத்தில் கோடீஸ்வரராக விளங்கும் தியோங் ஹிவ் கிங் (Tiong Hiew King)[6] என்பவருக்குச் சொந்தமானவையாகும். இவர் சரவாக் மாநில ஆளும் கட்சியில் மிகுந்த செல்வாக்கு உள்ளவர். அண்மைய காலங்களில் இந்த நாளிதழ்கள் மலேசிய சீனர் சங்கத் தலைவர்களிடையே அதிருப்திகளை ஏற்படுத்தி வருகின்றன. அதனால், அந்தச் சங்கத்திற்குள்ளேயே ‘ஏ’ குழு (Team A), ‘பி’ குழு (Team B) என இரு குழுக்கள் உருவாகியுள்ளன. 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மலேசிய சீனர் சங்கம் மிகவும் மோசமான முடிவுகளைப் பெற்றது.[7] [8]

உருவாக்கம்

[தொகு]

மலேசிய சீனர் சங்கம் 1949 பிப்ரவரி 27ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. மலாயா கூட்டமைப்பு உருவான காலத்தில், சீனர்களுக்கு குடியுரிமை பெறுவதில் சிரமங்கள் ஏற்பட்டன. மலேசியச் சீனர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்க ஓர் அமைப்பு தேவைப்பட்டது. அதன் காரணமாக டான் செங் லோக் (Tan Cheng Lock) என்பவர் மலேசிய சீனர் சங்கத்தை உருவாக்கினார்.[9] அதனால், சீனர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கும் இடையே சமூக இறுக்கங்கள் ஏற்பட்டன. அப்போது மலாய்க்காரர்களின் தலைவராக இருந்த ஓன் ஜாபார் (Onn Jaafar) என்பவ்ர் இருந்தார். அவர் டான் செங் லோக்கிடம் இருந்து ஒதுங்கி நின்றார்.

குவோமிந்தாங்

[தொகு]

மலேசிய சீனர் சங்கத்தின் தொடக்க காலத் தலைவர்கள் சீனாவின் குவோமிந்தாங் இராணுவத் தலைவர்கள் ஆவர். லியோங் இயூ கோ (Leong Yew Koh) என்பவர் குவோமிந்தாங் இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்தவர். பின்னர், இவர் மலாக்கா மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்தவர். இவர் மலேசியாவின் முதல் நிதியமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர். துன் ஹென்றி எச்.எஸ்.லீ (Tun Henry H.S. Lee), டாக்டர் லிம் சோங் இயூ (Dr Lim Chong Eu) போன்ற்வர்கள் குவோமிந்தாங் இராணுவத்தில் முக்கிய பதவிகளை வகித்தவர்கள்.

வரலாறு

[தொகு]

மே 13, 1969 இல் மலேசியாவின் மூன்றாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் 33 நாடாளுமன்ற இடங்களுக்கு மலேசிய சீனர் சங்கம் போட்டியிட்டது. அவற்றில் 13 இடங்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டது. பினாங்கு மாநிலம் கைவிட்டுப் போனது. அதன் காரணமாக, ம.சீ.ச.வின் தலைவராக இருந்த டான் சியூ சின் (Tan Siew Sin) என்பவர் 1974இல் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_சீனர்_சங்கம்&oldid=3401843" இலிருந்து மீள்விக்கப்பட்டது