மலாயா பொதுத் தேர்தல், 1955
| |||||||||||||||||||||||||||||
பதிவு செய்த வாக்காளர்கள் | 1,240,058 | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 82.84% | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் | |||||||||||||||||||||||||||||
|
மலாயா பொதுத் தேர்தல், 1955 (மலாய்: Pilihan Raya Umum Tanah Melayu 1955; ஆங்கிலம்: 1955 Malayan General Election; சீனம்: 1955年马来亚大选); என்பது 1957-ஆம் ஆண்டு மலாயா விடுதலை பெறுவதற்கு முன்னர் நடந்த ஒரே மலேசியப் பொதுத் தேர்தல் ஆகும். இந்தத் தேர்தல் 27 சூலை 1955 புதன்கிழமை அன்று நடத்தப்பட்டது.
மலாயா கூட்டமைப்பின் கூட்டரசு சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. முன்பு கூட்டரசு மலாயாவின் சட்டமன்ற உறுப்பினர்கள், பிரித்தானிய மலாயாவின் உயர் ஆணையரால் நியமிக்கப்பட்டனர்.
பொது
[தொகு]மலேசிய அரசியலின் ஒரு பகுதி |
மலேசிய அரசியல் |
---|
மலாயாவின் 52 கூட்டரசு தொகுதிகளின் ஒவ்வொரு தொகுதியிலும் ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அத்துடன் மலாயாவின் ஒன்பது மாநிலங்களில் உள்ள 136 மாநிலத் தொகுதிகளிலும் மாநிலத் தேர்தல்கள் நடைபெற்றன. மேலும் 10 அக்டோபர் 1954 முதல் நவம்பர் 12, 1955 வரையில்; மலாக்கா, பினாங்கு நீரிணை குடியேற்றங்களில் மாநில ஆட்சிமன்றத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குப் பதிவுகளும் நடைபெற்றன.
மலேசிய இசுலாமிய கட்சி (பாஸ்), இந்த 1955-ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே உருவாக்கப்பட்டது. முன்னதாக மலேசிய இசுலாமிய கட்சி ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு எனும் அம்னோ கட்சியின் ஒரு பகுதியாக இருந்தது.
தீபகற்ப மலாயாவில் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்த மலாயா தீபகற்பத்தின் வடக்கு மாநிலங்களான கிளாந்தான், திராங்கானு மாநிலங்களை அடித்தளமாகக் கொண்டு மலேசிய இசுலாமிய கட்சி உருவாக்கப்பட்டது. மலேசிய இசுலாமிய கட்சி இசுலாத்தை முதன்மை நோக்கமாக அறிவித்து மலாய் மக்களின் ஆதரவைப் பெற்றது.[1]
புதிய அரசாங்கம்
[தொகு]அம்னோ, மலேசிய சீனர் சங்கம், மற்றும் மலேசிய இந்திய காங்கிரசு ஆகியவற்றின் கூட்டணியான மலேசிய கூட்டணி கட்சிக்கு இந்தத் தேர்தலில் அமோகமான வெற்றி கிடைத்தது. முன்னாள் அம்னோ தலைவர் ஒன் ஜாபார் தலைமையிலான நெகாரா கட்சிக்கு இந்தத் தேர்தல் ஒரு மாபெரும் தோல்வியில் முடிந்தது. ஒன் ஜாபார் கட்சியினர் எந்த ஓர் இடத்திலும் வெற்றி பெறவில்லை.
இதன் பின்னர் மலேசிய கூட்டணி கட்சி புதிய அரசாங்கத்தை அமைக்கத் தொடங்கியது; அதன் தலைவர் துங்கு அப்துல் ரகுமான் முதலமைச்சரானார். 1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் பெறும் வரையில் மலாயா நாட்டின் தலைவர் முதல்வர் என்றே அழைக்கப்பட்டார்.
இந்தத் தேர்தலில் முப்பது மலேசிய கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 10,000 வாக்குகளுக்கும் மேல் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றனர். அவர்களில் ஒன்பது பேர் 20,000 வாக்குகளுக்கும் மேல் பெரும்பான்மையைப் பெற்றனர். எதிரணிகளைச் சேர்நந் நாற்பத்து மூன்று பேர் தங்கள் வைப்புத் தொகையை இழந்தனர்.
தேர்தல்கள்
[தொகு]கூட்டரசு மலாயா சட்டமன்றம்
[தொகு]- வேட்பு மனு நாள்: 15 சூன் 1955
- தேர்தல் நாள்: 27 சூலை 1955
மாநிலத் தேர்தல்
[தொகு]மாநிலம் | வேட்பு மனு நாள் | தேர்தல் நாள் |
---|---|---|
ஜொகூர் | 1 செப்டம்பர் 1954 | 10 அக்டோபர் 1954 |
திராங்கானு | 29 அக்டோபர் 1954 | |
சிலாங்கூர் | 11 ஆகஸ்டு 1955 | 27 செப்டம்பர் 1955 |
கெடா | 14 ஆகஸ்டு 1955 | இல்லை |
கிளாந்தான் | 15 ஆகஸ்டு 1955 | 19 செப்டம்பர்1955 |
பெர்லிஸ் | 17 ஆகஸ்டு 1955 | 24 செப்டம்பர் 1955 |
பகாங் | 25 ஆகஸ்டு 1955 | 26 செப்டம்பர் 1955 |
நெகிரி செம்பிலான் | 8 செப்டம்பர் 1955 | 12 அக்டோபர் 1955 |
பேராக் | 1 அக்டோபர் 1955 | 12 நவம்பர் 1955 |
நீரிணை குடியேற்றங்கள்
[தொகு]குடியேற்றம் | வேட்பு மனு நாள் | தேர்தல் நாள் |
---|---|---|
பினாங்கு | 13 சனவரி 1955 | 19 பிப்ரவரி 1955 |
மலாக்கா | 4 ஆகஸ்டு 1955 | இல்லை |
முடிவுகள்
[தொகு]மலாயா கூட்டணி மொத்த வாக்குகளில் 80% பெற்றது; மற்றும் போட்டியிட்ட 52 இடங்களில் 51 இடங்களில் வெற்றி பெற்றது. மலேசிய இசுலாமிய கட்சி பேராக் மாநிலத்தின் கிரியான் தொகுதியில் மட்டும் ஒரே இடத்தை வென்றது.
மலேசிய இசுலாமிய கட்சியின் ஒரே வெற்றி வேட்பாளரான அஜி அகமத் துவான் உசைன், ஓர் இசுலாமிய அறிஞர் ஆகும்; பின்னர் இவர் "திருவாளர் எதிர்க்கட்சி" எனும் செல்லப் பெயரைப் பெற்றார். 1955-ஆம் ஆண்டு மலாயா பொதுத் தேர்தலில் 82.8% மொத்த வாக்குகள் பதிவாகின.
கட்சிகள் | வாக்குகள் | இடங்கள் | ||||
---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | இடங்கள் | % | |||
மலாயா கூட்டணி | ALLIANCE | 818,013 | 81.68 | 51 | 98.08 | |
அம்னோ | UMNO | 589,933 | 58.90 | 34 | 65.38 | |
மலேசிய சீனர் சங்கம் | MCA | 201,212 | 20.09 | 15 | 28.85 | |
மலேசிய இந்திய காங்கிரசு | MIC | 26.868 | 2.68 | 2 | 3.85 | |
தேசிய கட்சி | Negara | 78,909 | 7.88 | 0 | 0.00 | |
மலேசிய இசுலாமிய கட்சி | PMIP | 40,667 | 4.06 | 1 | 1.92 | |
பேராக் தேசிய சங்கம் | NAP | 20,996 | 2.10 | 0 | 0.00 | |
பேராக் மலாய் லீக் | PML | 5,433 | 0.54 | 0 | 0.00 | |
மலாயா தொழிலாளர் கட்சி | Lab | 4,786 | 0.48 | 0 | 0.00 | |
மக்கள் முற்போக்கு கட்சி | PPP | 1,081 | 0.11 | 0 | 0.00 | |
சுயேச்சை | IND | 31,642 | 3.16 | 0 | 0.00 | |
செல்லுபடி வாக்குகள் | 1,001,527 | |||||
செல்லாத வாக்குகள் | 25,684 | |||||
மொத்தம் | 1,027,211 | 82.8% | 52 | 100.00 | ||
வாக்கு தவிர்த்தவர்கள் | 253,644 | |||||
பதிவு பெற்ற வாக்காளர்கள் | 1,280,855 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gill, Ranjit (1990). Of Political Bondage. Sterling Corporate Services. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 981-00-2136-4.
- ↑ Carnell, Francis G. (December 1955). "The Malayan Elections". Pacific Affairs (University of British Columbia) 28 (4): 315–330. doi:10.2307/3035316. பன்னாட்டுத் தர தொடர் எண்:0030-851X. https://archive.org/details/sim_pacific-affairs_1955-12_28_4/page/315.
- Barbara Watson Andaya dan Leonard Y. Andaya. A History of Malaysia, The MacMlllan Press Ltd. (1982). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-27673-6.
- The World Book Encyclopedia, World Book International (1994). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7166-6694-4.