சங்காட் ஜெரிங்

ஆள்கூறுகள்: 4°47′N 100°43′E / 4.783°N 100.717°E / 4.783; 100.717
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்காட் ஜெரிங்
Changkat Jering
சங்காட் ஜெரிங் நகருக்கு அருகில் சாலை அடையாளங்கள்
சங்காட் ஜெரிங் நகருக்கு அருகில் சாலை அடையாளங்கள்
சங்காட் ஜெரிங் is located in மலேசியா
சங்காட் ஜெரிங்
      சங்காட் ஜெரிங்
ஆள்கூறுகள்: 4°47′N 100°43′E / 4.783°N 100.717°E / 4.783; 100.717
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்கி.பி. 1800
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
இணையதளம்http://www.mptaiping.gov.my/

சங்காட் ஜெரிங் (மலாய்: Changkat Jering) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். தைப்பிங் நகரத்திற்கும்; கோலாகங்சார் அரச நகரத்திற்கும் இடையில் அமைந்து உள்ளது.

இந்த நகரத்தைச் சுற்றிலும் நிறைய சுண்ணாம்பு மலைகள் உள்ளன. மலேசியாவின் மிக நீளமான இரயில் சுரங்கங்களில் ஒன்றான புக்கிட் பெராப்பிட் இரயில் சுரங்கத்தைத் தாண்டித் தான் சங்காட் ஜெரிங் நகரத்தை அடைய வேண்டும். ஈப்போ மாநகரில் இருந்து 58 கி.மீ. தொலைவில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்து உள்ளது.[1]

சங்காட் ஜெரிங் நகரத்திற்கு அருகில் உள்ள நகரங்கள்: புக்கிட் கந்தாங்; கம்போங் செ; மாத்தாங்; பாடாங் ரெங்காஸ்; கோலா சபெத்தாங். ஆரவாரம் இல்லாத அமைதியான நகரம். வார இறுதிநாட்களில் நடைபெறும் மாலைச் சந்தைக்குப் புகழ் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்காட்_ஜெரிங்&oldid=3990997" இலிருந்து மீள்விக்கப்பட்டது