உள்ளடக்கத்துக்குச் செல்

செம்போல் மாவட்டம்

ஆள்கூறுகள்: 2°55′N 102°25′E / 2.917°N 102.417°E / 2.917; 102.417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்போல் மாவட்டம்
Jempol District
நெகிரி செம்பிலான்
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் செம்போல் மாவட்டம்
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் செம்போல் மாவட்டம்
Map
செம்போல் மாவட்டம் is located in மலேசியா
செம்போல் மாவட்டம்
செம்போல் மாவட்டம்
செம்போல் மாவட்டம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°55′N 102°25′E / 2.917°N 102.417°E / 2.917; 102.417
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம் செம்போல்
தொகுதிபண்டார் ஸ்ரீ செம்போல்
உள்ளூராட்சிசெம்போல் உள்ளூராட்சி மன்றம்
அரசு
 • மாவட்ட அதிகாரிசசாலி சலாவுடின்[1]
பரப்பளவு
 • மொத்தம்1,12,354 km2 (43,380 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்82,545
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+8 (பயன்பாடு இல்லை)
மலேசிய அஞ்சல் குறியீடு
72xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-06
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N
இணையதளம்செம்போல் மாவட்டக் கழகம்

செம்போல் மாவட்டம் அல்லது ஜெம்போல் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Jempol; ஆங்கிலம்: Jempol District; சீனம்: 仁保县) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். நெகிரி செம்பிலான் மாநிலத்திலேயே பெரிய மாவட்டம். இந்த மாவட்டத்தின் வடகிழக்கில் பகாங்; கிழக்கில் ஜொகூர் மாநிலங்கள் உள்ளன.

செம்போல் மாவட்டத்தின் இரு முக்கிய நகரங்கள்: பண்டார் ஸ்ரீ செம்போல் (Bandar Seri Jempol); பகாவ் நகரம்.

கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 137 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து கிழக்கே 70 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. மிக அருகாமையில் உள்ள நகரம் பகாவ் நகர்ம். 21 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

மூவார் ஆறும் செர்த்திங் ஆறும் சந்திக்கும் இடத்தில் செம்போல் மாவட்டம் அமைந்து உள்ளது. பழங்காலத்தில் போக்குவரத்துக்கு இந்தச் சந்திப்பு மிக முக்கிய பங்கு வகித்து உள்ளது.

தம்பின் முக்கிம்கள்

[தொகு]

தம்பின் மாவட்டத்தில் 5 முக்கிம்கள் உள்ளன.[3]

  1. செலாய் (Jelai)
  2. கோலா செம்போல் (Kuala Jempol)
  3. ரொம்பின் (Rompin)
  4. செர்த்திங் லிலிர் (Serting Ilir)
  5. செர்த்திங் உலு (Serting Ulu)

போக்குவரத்து

[தொகு]

நெடுஞ்சாலை 10 (Malaysia Federal Route 10); ஜெம்போல் மாவட்டத்தில் முக்கிய சாலையாகும். இந்தச் சாலை பகாவ் நகரத்தின் வழியாகச் சென்று பண்டார் ஸ்ரீ செம்போலைத் தொட்டு, அப்படியே பகாங் தெமர்லோ நகரத்தை அடைகிறது.

பெரா நெடுஞ்சாலை (Bera Highway) 11; செம்போல் தொகுதியைக் கிழக்கு - மேற்குத் திசையாக வெட்டிச் செல்கிறது. இந்தச் சாலை செர்த்திங்கில் தொடங்கி, பின்னர் தெற்கு பகாங்கில் உள்ள பண்டார் துன் அப்துல் ரசாக் நகரத்திற்கு அருகே முடிவு அடைகிறது.

நெடுஞ்சாலை 13 (Malaysia Federal Route 13); கோலா பிலா தொகுதியில் பகாவ் நகரத்தையும் சுவாசே நகரத்தையும் இணைக்கிறது.

பகாவ் தொடருந்து நிலையம் தான், இந்த செம்போல் மாவட்டத்திற்கு சேவை செய்யும் முதன்மை தொடருந்து நிலையம் ஆகும்.

மலேசிய நாடாளுமன்றம்

[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) போர்டிக்சன் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதி. 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.

நாடாளுமன்றம் தொகுதி உறுப்பினர் கட்சி
PP126 செலுபு சலாலுடின் அலியாஸ் பாரிசான் நேசனல் (அம்னோ)
PP127 செம்போல் சலீம் சாரீப் பாரிசான் நேசனல் (அம்னோ)

தம்பின் மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தம்பின் மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[4][5]

மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
N3 சுங்கை லூய் ராசி முகமட் அலி பாரிசான் நேசனல் (அம்னோ)
N5 செர்த்திங் சம்சுல்கார் டெலி பாரிசான் நேசனல் (அம்னோ)
N6 பாலோங் முஸ்தாபா நாகூர் பாரிசான் நேசனல் (அம்னோ)
N7 ஜெராம் பாடாங் மாணிக்கம் லெட்சுமணன் பாரிசான் நேசனல் (ம.இ.கா)
N8 பகாவ் தியோ கோக் சியோங் பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க)

செம்போல் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

[தொகு]

மலேசியா; நெகிரி செம்பிலான்; செம்போல் மாவட்டத்தில் (Jempol District) 11 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 978 மாணவர்கள் பயில்கிறார்கள். 141 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[6]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
NBD6001 பகாவ் தோட்டம் SJK(T) Ldg Bahau[7][8] பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72100 பகாவ் 264 23
NBD6002 ஆயர் ஈத்தாம் தோட்டம் SJK(T) Ladang Air Hitam[9][10] ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72120 பண்டார் ஸ்ரீ செம்போல் 91 14
NBD6003 கெடிஸ் தோட்டம் SJK(T/Te) Ladang Geddes கெடிஸ் தோட்டத் தமிழ் தெலுங்கு பள்ளி 72120 பண்டார் ஸ்ரீ செம்போல் 85 14
NBD6004 சுங்கை செபாலிங் தோட்டம் SJK(T) Ladang Sg Sebaling[11][12] சுங்கை செபாலிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72100 பகாவ் 16 7
NBD6005 கெல்பின் தோட்டம் SJK(T) Ldg Kelpin[13] கெல்பின் தோட்டத் தமிழ்ப்பள்ளி 73500 ரொம்பின் 24 9
NBD6006 செனாமா தோட்டம் SJK(T) Ldg Senama[14] செனாமா தோட்டத் தமிழ்ப்பள்ளி 72100 பகாவ் 81 10
NBD6007 செயிண்ட் ஹெலியர் தோட்டம் SJK(T) Ladang St Helier[15] செயிண்ட் ஹெலியர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72100 பகாவ் 171 15
NBD6008 சியாலாங் தோட்டம் SJK(T) Ldg Sialang சியாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72100 பகாவ் 78 10
NBD6009 ஜெராம் பாடாங் தோட்டம் SJK(T) Ldg Jeram Padang[16] ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 72100 பகாவ் 24 10
NBD6010 ரொம்பின் SJK(T) Dato' K.Pathmanaban[17] டத்தோ கு.பத்மநாபன் தமிழ்ப்பள்ளி 73500 ரொம்பின் 110 21
NBD6011 மிடில்டன் தோட்டம் SJK(T) Ldg Middleton[18] மிடில்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி 73500 ரொம்பின் 34 8

காட்சியகம்

[தொகு]

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jempol District Council". Retrieved 24 December 2021.
  2. User, Super. "Pejabat Daerah Dan Tanah Tampin - Latarbelakang". pdttampin.ns.gov.my. Archived from the original on 2017-12-01. Retrieved 2021-12-24. {{cite web}}: |last= has generic name (help)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-03-05. Retrieved 2021-12-24.
  4. "www.spr.gov.my மலேசியாவின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள் - 2018". Archived from the original on 2018-05-09. Retrieved 2021-12-24.
  5. "Federal Government Gazette - Notice of Polling Districts and Polling Centres for the Federal Constituencies and State Constituencies of the States of Malaya [P.U. (B) 197/2016]" (PDF). Attorney General's Chambers of Malaysia. 29 April 2016. Archived from the original (PDF) on 2019-03-28. Retrieved 2021-12-06.
  6. "மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் - Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. Retrieved 2021-11-28.
  7. "பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT LADANG BAHAU". sjktlbns.blogspot.com (in ஆங்கிலம்). Retrieved 24 December 2021.
  8. Manap, Abnor Hamizam Abd (24 October 2019). "Ladang Bahau pupils win silver at I'tnl Young Inventors Award | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). Retrieved 24 December 2021.
  9. "ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Sekolah Jenis Kebangsaan Tamil Ayer Hitam". Retrieved 24 December 2021.
  10. "ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Retrieved 24 December 2021.
  11. "சுங்கை செபாலிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Reaching to SJK (T) Ladang Sg Sebaling" (in ஆங்கிலம்). Retrieved 24 December 2021.
  12. "சுங்கை செபாலிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - MINGGU BAHASA MELAYU SJK(T) LADANG SG SEBALING". '. 8 November 2011. Retrieved 24 December 2021.
  13. "கெல்பின் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK TAMIL LADANG KELPIN". Retrieved 24 December 2021.
  14. Senama, Sjkt Ladang (NaN). "செனாமா தோட்டத் தமிழ்ப்பள்ளி - TERMASYA SUKAN SEKOLAH TAHUNAN 2013 SJK (T) LADANG SENAMA". SJK(T) Ladang Senama. Retrieved 24 December 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  15. "செயிண்ட் ஹெலியர் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) Ladang St. Helier | The Community Chest". commchest.org.my. Retrieved 24 December 2021.
  16. "ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - PSS Jeram Padang". pssjerampadang.blogspot.com. Retrieved 24 December 2021.
  17. "டத்தோ கு.பத்மநாபன் தமிழ்ப்பள்ளி - outing : my primary tamil school". outing. 13 May 2019. Retrieved 24 December 2021.
  18. "மிடில்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி - PSS SJKT LADANG MIDDLETON". psssjktldgmiddleton.blogspot.com. Retrieved 24 December 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்போல்_மாவட்டம்&oldid=3930234" இலிருந்து மீள்விக்கப்பட்டது