உள்ளடக்கத்துக்குச் செல்

முக்கா மாவட்டம்

ஆள்கூறுகள்: 2°53′46″N 112°4′43″E / 2.89611°N 112.07861°E / 2.89611; 112.07861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்கா மாவட்டம்
Mukah District
Daerah Mukah
ஆள்கூறுகள்: 2°53′46″N 112°4′43″E / 2.89611°N 112.07861°E / 2.89611; 112.07861
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுமுக்கா பிரிவு
மாவட்டங்கள்முக்கா மாவட்டம்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
96xxx
தொலைபேசி எண்கள்+60-84
போக்குவரத்துப் பதிவெண்கள்QS; HQ
இணையதளம்www.mukah.sarawak.gov.my

முக்கா மாவட்டம் (மலாய் மொழி: Daerah Mukah; ஆங்கிலம்: Mukah District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; முக்கா பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். முக்கா மாவட்டத்தின் தலைநகரம் முக்கா (Mukah) நகரம்.[1]

1911-இல் ஜேம்சு புரூக் வம்சாவளியினர் காலத்தின் போதே ​​முக்கா நகரம் செயல்பாட்டில் இருந்தது. ​​முக்கா நகரம் அப்போது மூன்றாம் பிரிவின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. அந்தக் கட்டத்தில் மூன்றாம் பிரிவின் ஆணையராக இருந்தவர் என்றி எர்பர்ட் கோர்ட்ரைட் (Henry Herbert Kortright).

பொது

[தொகு]

மார்ச் 1, 2002-இல் முக்கா மாவட்டம் நிறுவப்பட்டபோது, ​​அதன் ஆட்சி வரம்பு 5,020 சதுர கிலோமீட்டரில் இருந்து 2,536 சதுர கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டது.[2]

வரலாறு

[தொகு]

மெலனாவு மக்கள்தான் முக்காவில் முதன்முதலில் வாழ்ந்த பழங்குடியினக் குழுவாகும். முக்காவின் தொடக்கக்கால ஆவணங்கள் மயாபாகித் பேரரசின் வரலாற்றில் காணப்படுகின்றன. "மெலனோ" என்று அழைக்கப்படும் ஓர் இடம் மயாபாகித் பேரரசுக்குத் திறை செலுத்தியாகவும் அறியப் படுகிறது.

பின்னர் மெலனோ எனும் அந்த இடம் 13-ஆம் நூற்றாண்டில் புரூணை பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. 1860-இல், அந்த இடம் சரவாக் வெள்ளை இராஜாக்களுக்கு விற்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Malaysia Districts". Statoids.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2010.
  2. "Malaysia: Administrative Division". City Population. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.
  3. Diana, Rose (6 April 2011). "That binding man from Mukah". The Star (Malaysia) இம் மூலத்தில் இருந்து 6 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180906151631/https://www.thestar.com.my/news/community/2011/04/06/that-binding-man-from-mukah/. 

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கா_மாவட்டம்&oldid=4104470" இலிருந்து மீள்விக்கப்பட்டது