பெலுரான் மாவட்டம்
பெலுரான் மாவட்டம் Beluran District Daerah Beluran | |
---|---|
![]() பெலுரான் மாவட்ட மன்ற அலுவலகம். | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°52′44″N 117°33′43″E / 5.87889°N 117.56194°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | சண்டக்கான் பிரிவு |
தலைநகரம் | பெலுரான் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | யூசோப் ஒசுமான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,345 km2 (3,222 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 1,04,484[1] |
இணையதளம் | ww2 ww2 |
பெலுரான் மாவட்டம்; (மலாய்: Daerah Beluran; ஆங்கிலம்: Beluran District) என்பது மலேசியா, சபா மாநிலம், சண்டக்கான் பிரிவில் (Sandakan Division) உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் பெலுரான் (Beluran Town) நகரம்.
இந்த நகரம், சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து வட கிழக்கே 308 கி.மீ. தொலைவிலும்; தென்கிழக்கே கெனிங்காவ் நகரத்தில் இருந்து 276 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பொது
[தொகு]
சபா மாநிலத்தின் சண்டக்கான் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
- பெலுரான் மாவட்டம் (Beluran District)
- கினபாத்தாங்கான் மாவட்டம் (Kinabatangan District)
- சண்டாக்கான் மாவட்டம் (Sandakan District)
- தெலுபிட் மாவட்டம் (Telupid District)
- தொங்கோட் மாவட்டம் (Tongod District)
வரலாறு
[தொகு]முன்னர் காலத்தில் இந்த பெலுரான் மாவட்டம், லாபுக்-சுகுட் மாவட்டம் (Labuk-Sugut District) என்று அழைக்கப்பட்டது. பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் (British North Borneo Chartered Company) சபா மாநிலத்தை நிர்வாகம் செய்த காலத்தில் இருந்து, இந்த பெலுரான் மாவட்டமும் அறியப் படுகிறது.[1]
வடக்கு போர்னியோவின் (British North Borneo) தொடக்கக் கால மாவட்டங்களில் பெலுரான் மாவட்டமும் ஒன்றாகும்.
1916-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது
[தொகு]பெலூரான் மாவட்ட நிர்வாக அலுவலகம் 1916-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் இந்த மாவட்டத்தின் அனைத்துப் பதிவுகளும் தரவுகளும் அழிக்கப்பட்டு விட்டன.
சில பழைய சான்றுகளின்படி, 1945-ஆம் ஆண்டில், பி.எஸ். வில்லி (B.S Willie) என்பவர் பெலூரான் மாவட்ட அதிகாரியாகவும்; கிளாகன் (Klagan) என்பவர் லபுக்-சுகுட் மாவட்டத்தின் முதல் நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.[1]
முன்பு காலத்தில் இந்தப் பகுதி அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கியது. அதனால் பிரித்தானிய அதிகாரிகள் பெலூரான் மாவட்ட நிர்வாக மையத்தை இன்றைய பெலூரான் நகருக்கு அருகில் உள்ள மலை அடிவாரத்திற்கு மாற்றி இருக்கிறார்கள்.
மக்கள் தொகையியல்
[தொகு]2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெலுரான் மாவட்டத்தின் மக்கள் தொகை 77,125.[1] இங்கு வாழும் மக்கள் பெரிய சமூகங்களாகவும் சிறியச் சமூகங்களாகவும் பிரிக்கப்பட்டு உள்ளனர்.
மக்கள் தொகையானது கடசான்-டூசுன், திடோங், பஜாவ், சூலுக், ஓராங் சுங்கை போன்ற பல்வேறு பழங்குடி இனக் குழுக்களின் கலவையைக் கொண்டுள்ளது. அத்துடன் சீனர்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.
சட்டவிரோதக் குடியேற்றம்
[தொகு]சபாவின் பிற மாவட்டங்களைப் போலவே, அருகிலுள்ள தெற்கு பிலிப்பீன்சு நாட்டில் இருந்தும், முக்கியமாக சூலு தீவுக் கூட்டம் (Sulu Archipelago) மற்றும் மிண்டனாவோ (Mindanao) தீவில் இருந்தும் கணிசமான எண்ணிக்கையில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் உள்ளார்கள். மக்கள் தொகை புள்ளிவிவரத்தில் இவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை.
காட்சியகம்
[தொகு]-
பெலுரான் நகர நுழைவாயில்
-
கத்தோலிக்க ஆலயம்
-
பெலுரான் காடுகள்
-
பெலுரான் காடுகள்
மேற்கோள்கள்
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Treacher, W. H (1891). "British Borneo: sketches of Brunai, Sarawak, Labuan, and North Borneo". University of California Libraries. Singapore, Govt. print. dept. p. 190.
- Rutter, Owen (1922). "British North Borneo - An Account of its History, Resources and Native Tribes". Cornell University Library. Constable & Company Ltd, London. p. 157.
- Tregonning, K. G. (1965). A History Of Modern Sabah (North Borneo 1881–1963). University of Malaya Press.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் பெலுரான் மாவட்டம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- பெலுரான் நகராண்மைக் கழகம்