உள்ளடக்கத்துக்குச் செல்

சரவாக் அமைச்சரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரவாக் அமைச்சரவை
Cabinet of Sarawak
Kabinet Sarawak
மேலோட்டம்
நிறுவப்பட்டதுசெப்டம்பர் 16, 1963 (1963-09-16)
அரசுசரவாக்
தலைவர்சரவாக் பிரதமர்
நியமிப்பவர்சரவாக் ஆளுநர்
பொறுப்புசரவாக் மாநில சட்டமன்றம்

சரவாக் அமைச்சரவை (ஆங்கிலம் Cabinet of Sarawak; மலாய்: Kabinet Sarawak ) என்பது மலேசியா சரவாக் மாநில அரசாங்கத்தின் அமைச்சரவை (ஆட்சிக் குழு) ஆகும். சரவாக் ஆளுநர் அவர்களால் நியமிக்கப்பட்ட சரவாக் பிரதமர் என்பவர் சரவாக் அமைச்சரவைக்குத் தலைமை தாங்குகிறார்.

சரவாக் பிரதமர் என்பது சரவாக் மாநிலத்தின் முதலமைச்சரை குறிப்பதாகும். சரவாக் பிரதமர் எனும் தற்போதைய பதவி, முன்பு சரவாக் முதல்வர் என்று அழைக்கப்பட்டது.

2022 பிப்ரவரி 15-ஆம் தேதி சரவாக் மாநில அரசியலமைப்பில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி சரவாக் முதல்வர் எனும் பதவி; பிரதமர் பதவி என்று மறுபெயரிடப் பட்டது. அரசியலமைப்புத் திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டு 2022 மார்ச் 1 முதல் நடைமுறைக்கு வந்தது.[1]

பொது

[தொகு]

சரவாக் அமைச்சரவையானது, சரவாக் பிரதமரின் பரிந்துரையால், சரவாக் மாநில சட்டமன்றம்|மாநில சட்டமன்றத்தில்]] இருந்து பெறப்பட்ட உறுப்பினர்கள் எனும் அமைச்சர்களை உள்ளடக்கியது.

சரவாக் பிரதமர், சரவாக் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும். அமைச்சரவையில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.

அமைச்சர்களின் பட்டியல்

[தொகு]
      சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS) (11)
      பூமிபுத்ரா கட்சி (PBB) (8)       சரவாக் மக்கள் கட்சி (SUPP) (2)       சரவாக் மக்கள் கட்சி (PRS) (1)       சரவாக் முற்போக்கு கட்சி (PDP) (0)
அமைச்சு அமைச்சர் கட்சி # பதவி ஏற்பு பதவி முடிவு
பிரதமர் அபாங் ஜொகாரி ஒப்பேங்
(Abang Abdul Rahman Zohari Abang Openg)
பூமிபுத்ரா கட்சி (PBB) 18 திசம்பர் 2021 பதவியில்
துணை முதலமைச்சர்கள் டக்ளஸ் உக்கா எம்பாஸ்
(Douglas Uggah Embas)
பூமிபுத்ரா கட்சி (PBB) 4 சனவரி 2022
அவாங் தெங்கா அலி அசன்
(Awang Tengah Ali Hasan)
பூமிபுத்ரா கட்சி (PBB)
சிம் குய் இயன்
(Sim Kui Hian)
சரவாக் மக்கள் கட்சி (SUPP)
பிரதமர் துறை அமைச்சர் ஜான் சிகி தயாய்
(John Sikie Tayai)
சரவாக் மக்கள் கட்சி (PRS)
நிதி மற்றும் புதிய பொருளாதார அமைச்சர் அபாங் ஜொகாரி ஒப்பேங்
(Abang Abdul Rahman Zohari Abang Openg)
பூமிபுத்ரா கட்சி (PBB)
டக்ளஸ் உக்கா எம்பாஸ்
(Douglas Uggah Embas)
(இரண்டாவது அமைச்சர்)
பூமிபுத்ரா கட்சி (PBB)
இயற்கை வளங்கள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் அபாங் ஜொகாரி ஒப்பேங்
(Abang Abdul Rahman Zohari Abang Openg)
பூமிபுத்ரா கட்சி (PBB)
அவாங் தெங்கா அலி அசன்
(Awang Tengah Ali Hasan)
(இரண்டாவது அமைச்சர்)
பூமிபுத்ரா கட்சி (PBB)
எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சர் அபாங் ஜொகாரி ஒப்பேங்
(Abang Abdul Rahman Zohari Abang Openg)
பூமிபுத்ரா கட்சி (PBB)
உள்கட்டமைப்பு மற்றும் துறைமுக மேம்பாட்டு அமைச்சர் டக்ளஸ் உக்கா எம்பாஸ்
(Douglas Uggah Embas)
பூமிபுத்ரா கட்சி (PBB)
பன்னாட்டு வணிகம் மற்றும் முதலீட்டு அமைச்சர் அவாங் தெங்கா அலி அசன்
(Awang Tengah Ali Hasan)
பூமிபுத்ரா கட்சி (PBB)
பொது சுகாதாரம், வீட்டு வசதி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் சிம் குய் இயன்
(Sim Kui Hian)
சரவாக் மக்கள் கட்சி (SUPP)
மகளிர், குழந்தைகள் மற்றும் சமூக நல்வாழ்வு மேம்பாட்டு அமைச்சர் பாத்திமா அப்துல்லா
(Fatimah Abdullah)
பூமிபுத்ரா கட்சி (PBB)
விவசாயம் மற்றும் பிராந்திய வளர்ச்சியின் நவீனமயமாக்கலுக்கான அமைச்சர் இஸ்டீபன் ருண்டி உத்தோம்
(Stephen Rundi Utom)
பூமிபுத்ரா கட்சி (PBB)
போக்குவரத்து அமைச்சர் லீ கிம் சின்
(Lee Kim Shin)
சரவாக் மக்கள் கட்சி (SUPP)
பயன்பாடு மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் அஜி சுலைகி பின் அஜி நராவி
(Haji Julaihi bin Haji Narawi)
பூமிபுத்ரா கட்சி (PBB)
சுற்றுலா, படைப்புத் தொழில் மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்கான அமைச்சர் அப்துல் கரீம் ரகுமான் அம்சா
(Abdul Karim Rahman Hamzah)
பூமிபுத்ரா கட்சி (PBB)
இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர்
கல்வி, புத்தாக்கம் மற்றும் திறமை மேம்பாட்டு அமைச்சர் ரோலண்ட் சாகா வீ இன்
(Roland Sagah Wee Inn)
பூமிபுத்ரா கட்சி (PBB)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. Wen, Lok Jian (2022-02-15). "Sarawak vote to call its leader 'premier' could be first step to greater autonomy". The Straits Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-16.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவாக்_அமைச்சரவை&oldid=4081556" இலிருந்து மீள்விக்கப்பட்டது