கிளாந்தான் மந்திரி பெசார்
கிளாந்தான் மந்திரி பெசார் Menteri Besar of Kelantan Menteri Besar Kelantan | |
---|---|
கிளாந்தான் மந்திரி பெசார் கொடி | |
கிளாந்தான் மாநில அரசு | |
உறுப்பினர் | கிளாந்தான் மாநில ஆட்சிக்குழு |
அறிக்கைகள் | கிளாந்தான் மாநில சட்டமன்றம் |
வாழுமிடம் | JKR 10, Bangunan Perbadanan Menteri Besar Kelantan, கம்போங் சீரே, கோத்தா பாரு, கிளாந்தான் |
அலுவலகம் | Tingkat 1, Blok 1, கோத்தா தாருல் நாயிம், 15502 கோத்தா பாரு, கிளாந்தான் |
நியமிப்பவர் | ஐந்தாம் முகமது| கிளாந்தான் சுல்தான் |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவானது, ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது |
முதலாவதாக பதவியேற்றவர் | லோங் அப்துல் காபார் (Long Abdul Ghafar) |
உருவாக்கம் | 1775 |
இணையதளம் | www |
மலேசிய அரசியலின் ஒரு பகுதி |
மலேசிய அரசியல் |
---|
கிளாந்தான் மந்திரி பெசார் அல்லது கிளாந்தான் முதல்வர் (ஆங்கிலம்: Menteri Besar of Kelantan அல்லது First Minister of Kelantan; மலாய்: Menteri Besar Kelantan; சீனம்: 吉兰丹州务大臣) என்பவர் மலேசிய மாநிலமான கிளாந்தான் மாநிலத்தின் அரசுத் தலைவர் ஆவார். மலேசியாவில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை மந்திரி பெசார் என்று அழைப்பது வழக்கம். இவர் கிளாந்தான் மாநில சட்டமன்றத்தின் (Kelantan State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார்.
தற்போது கிளாந்தான் மந்திரி பெசார் பதவியில் உள்ளவர் முகமது நசுருதீன் தாவூத் (Mohd Nassuruddin Daud). இவர் 15 ஆகஸ்டு 2023 முதல் கிளாந்தான் மாநிலத்தின் முதல்வர் பதவியை வகித்து வருகிறார்.
நியமனம்
[தொகு]கிளாந்தான் மாநில அரசமைப்புச் சட்டத்தின்படி, கிளாந்தான் சுல்தான் முதலில் மந்திரி பெசாரை மாநில நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிப்பார். அந்த வகையில் நியமிக்கப்படும் மந்திரி பெசார் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். அத்துடன் மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையையும் மந்திரி பெசார் பெற்று இருக்க வேண்டும்.
கிளாந்தான் மந்திரி பெசார் இசுலாம் மதத்தைச் சார்ந்தவராகவும்; மலாய் இனத்தைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். அவரின் குடியுரிமை, பதிவு மூலம் பெற்ற ஒரு மலேசியக் குடிமகனாக இருக்கக்கூடாது. மந்திரி பெசாரின் ஆலோசனையின் பேரில், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து 10 அல்லது நான்கிற்கும் குறையாத உறுப்பினர்களை மாநில செயற்குழுவில் கிளாந்தான் சுல்தான் நியமிப்பார்.
மாநில ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் கிளாந்தான் சுல்தான் முன்னிலையில் பதவி உறுதிமொழி; பற்று உறுதிமொழி மற்றும் இரகசியக் காப்பு உறுதிமொழி எடுக்கவேண்டும். கிளாந்தான் மாநிலச் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்சிக்குழுவினர் கூட்டாகப் பொறுப்பு ஏற்க வேண்டும். அத்துடன் அவர்கள் வருமானம் தரும் எந்த ஒரு பதவியையும் வகிக்கக் கூடாது; அல்லது கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்தும் எந்த ஒரு வணிகம் அல்லது தொழிலிலும் ஈடுபடக்கூடாது.
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு
[தொகு]மாநில அரசாங்கம் தனது சட்டங்களைச் சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாவிட்டால்; அல்லது மாநிலச் சட்டமன்றம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நிறைவேற்றப் படுமானால்; மந்திரி பெசார் உடனடியாகப் பதவிதுறப்பு செய்ய வேண்டும். மாற்று மந்திரி பெசாரைத் தேர்ந்தெடுப்பது சுல்தானின் பொறுப்பு ஆகும். சுல்தான் அனுமதிக்கும் காலம் வரையில்; மந்திரி பெசார் பதவி வகிக்காத ஒரு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியில் இருப்பார்.
ஒரு தேர்தலில் தோல்வி அடைந்த மந்திரி பெசார் தன் பதவியைத் துறப்பு செய்ததைத் தொடர்ந்து; அல்லது ஒரு மந்திரி பெசாரின் மரணத்தைத் தொடர்ந்து; ஆளும் கட்சியால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபரை புதிய மந்திரி பெசாராகச் சுல்தான் நியமிப்பார்.
அதிகாரங்கள்
[தொகு]ஒரு மந்திரி பெசாரின் அதிகாரம் பல வரம்புகளுக்கு உட்பட்டது. ஒரு மந்திரி பெசார் அவரின் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அல்லது அவருடைய அரசாங்கம் சட்ட மன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியுற்றால்; புதிய ஒரு மாநிலத் தேர்தலுக்கு மந்திரி பெசார் பரிந்துரை செய்ய வேண்டும்; அல்லது அந்த மந்திரி பெசார் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது சுல்தானால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
வழங்கல் மசோதா (Supply Bill) அல்லது முக்கியமான கொள்கை தொடர்பான சட்டத்தை ஒரு மந்திரி பெசாரால் நிறைவேற்ற முடியாமல் போனால், அல்லது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எடுக்கப்படுமானால், அரசாங்கப் பதவிகளில் இருந்து அந்த மந்திரி பெசார் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது அவர் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும்.
தற்காலிக மாநில அரசின் மந்திரி பெசார்
[தொகு]மந்திரி பெசாரின் ஆலோசனையின் பேரில் சுல்தானால் கலைக்கப்பட்ட மாநிலச் சட்டமன்றம் அதன் முதல் கூட்டத்தின் தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்படலாம். மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து பொதுத் தேர்தலை 60 நாட்கள் வரை தாமதப்படுத்த மாநில அரசியலமைப்பு அனுமதி வழங்குகிறது.
மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 120 நாட்களுக்குள் மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். வழக்கமாக, ஒரு மாநிலச் சட்டமன்றம் கலைக்கப் படுவதற்கும் அடுத்த மாநிலச் சட்டமன்றம் கூட்டப் படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில், மந்திரி பெசார் மற்றும் அவரின் நிர்வாகக் குழுவினரும் தான் காபந்து அரசாங்க பதவியில் (Caretaker Government) இருப்பார்கள்.
கிளாந்தான் மந்திரி பெசார் பட்டியல்
[தொகு]1775-ஆம் ஆண்டு தொடங்கி 2024-ஆம் ஆண்டு வரையிலான கிளாந்தான் மாநிலத்தின் மந்திரி பெசார்களின் பட்டியல் பின்வருமாறு:[1]
அரசியல் கட்சிகள்:
அம்னோ
நெகாரா கட்சி
கூட்டணி /
பாரிசான் நேசனல்
பாஸ்
உம்மா ஒற்றுமைக் கட்சி
மாற்று பாரிசான்
பாக்காத்தான் ராக்யாட்
காகாசான்
பெரிக்காத்தான் நேசனல்
# | தோற்றம் | பெயர் (பிறப்பு–இறப்பு) தொகுதி |
பதவியில் | கட்சி[a] | தேர்தல் | கூட்டத் தொடர் | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
பதவியேற்பு | பதவி விலகல் | பதவி காலம் | |||||||
1 | லோங் அப்துல் காபார் (Long Abdul Ghafar) |
1775 | 1794 | இல்லை | – | – | |||
2 | வான் மகமூத் வான் இப்ராகிம் (Wan Mahmud Wan Ibrahim) |
1800 | 1835 | இல்லை | – | – | |||
3 | துவான் பெசார் ராஜா மூடா இசுமாயில் (Tuan Besar Raja Muda Ismail) |
1835 | 1839 | இல்லை | – | – | |||
4 | லோங் சைனல் அபிடின் லோங் அப்துல் காபார் (Long Zainal Abidin Long Abdul Ghafar) |
1839 | 1851 | இல்லை | – | – | |||
5 | நிக் அப்துல் மஜீத் நிக் யூசோப் (Nik Abdul Majid Nik Yusoff) |
1851 | 1885 | இல்லை | – | – | |||
6 | நிக் யூசோப் நிக் அப்துல் மஜீத் (Nik Yusof Nik Abdul Majid) |
1886 | 1890 | இல்லை | – | – | |||
7 | சாட் நிகா (Saad Ngah) |
1890 | 1894 | இல்லை | – | – | |||
8 | நிக் யூசோப் நிக் அப்துல் மஜீத் (Nik Yusof Nik Abdul Majid) |
1894 | 1900 | இல்லை | – | – | |||
9 | அசான் முகமத் சாலே (Hassan Mohd Salleh) |
1900 | 1920 | இல்லை | – | – | |||
10 | நிக் மகமூத் நிக் இசுமாயில் (Nik Mahmud Nik Ismail) |
30 ஏப்ரல் 1921 |
27 டிசம்பர் 1944 |
23 ஆண்டுகள், 241 நாட்கள் | இல்லை | – | – | ||
11 | நிக் அகமட் கமீல் (Nik Ahmad Kamil) (1909–1977) |
27 டிசம்பர் 1944 |
1953 | இல்லை | – | – | |||
அம்னோ | |||||||||
மலாயா விடுதலைக் கட்சி | |||||||||
நெகாரா கட்சி | |||||||||
12 | தெங்கு முகம்மது அம்சா தெங்கு சைனல் ஆபிதீன் (Tengku Muhammad Hamzah Tengku Zainal Abidin) (1909–1962) |
1953 | 1959 | கூட்டணி (அம்னோ) |
– | – | |||
13 | இசாக் லோட்பி உமர் (Ishak Lotfi Omar) (1916–1992) கோத்தா பாரு செலாத்தான் சட்டமன்ற உறுப்பினர் |
1959 | 1964 | இசுலாமிய கட்சி | 1959 | 1-ஆவது சட்டமன்றத் தொடர் | |||
14 | டத்தோ அசுரி மூடா (Asri Muda) (1924–1992) கோத்தா பாரு தெங்கா சட்டமன்ற உறுப்பினர் |
1964 | 1973 | இசுலாமிய கட்சி | 1964 | 2-ஆவது சட்டமன்றத் தொடர் | |||
1969 | 3-ஆவது சட்டமன்றத் தொடர் | ||||||||
15 | டத்தோ முகமத் நாசீர் (Mohamed Nasir) (1916–1997) தென்டோங் சட்டமன்ற உறுப்பினர் |
1974 | நவம்பர் 1977 |
பாரிசான் நேசனல் (பாஸ்) | 1974 | 4-ஆவது சட்டமன்றத் தொடர் | |||
16 | டத்தோ முகமத் யாக்கூப் (Mohamed Yaacob) (1926–2009) லானாஸ் சட்டமன்ற உறுப்பினர் (1986 வரையில்) பாங்லீமா பாயூ சட்டமன்ற உறுப்பினர் (1986 தொடக்கம்) |
23 மார்ச் 1978 |
22 அக்டோபர் 1990 |
12 ஆண்டுகள், 213 நாட்கள் | பாரிசான் நேசனல் (அம்னோ) | 1978 | 5-ஆவது சட்டமன்றத் தொடர் | ||
1982 | 6-ஆவது சட்டமன்றத் தொடர் | ||||||||
1986 | 7-ஆவது சட்டமன்றத் தொடர் | ||||||||
17 | டத்தோ நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் (Nik Abdul Aziz Nik Mat) (1931–2015) செமுட் அப்பி சட்டமன்ற உறுப்பினர் (1995 வரையில்) செம்பாக்கா சட்டமன்ற உறுப்பினர் (1995 தொடக்கம்) |
22 அக்டோபர் 1990 |
6 மே 2013 |
22 ஆண்டுகள், 196 நாட்கள் | உம்மா ஒற்றுமைக் கட்சி (பாஸ்) | 1990 | 8-ஆவது சட்டமன்றத் தொடர் | ||
1995 | 9-ஆவது சட்டமன்றத் தொடர் | ||||||||
மாற்று பாரிசான் (பாஸ்) | 1999 | 10-ஆவது சட்டமன்றத் தொடர் | |||||||
2004 | 11-ஆவது சட்டமன்றத் தொடர் | ||||||||
பாக்காத்தான் ராக்யாட் (பாஸ்) | 2008 | 12-ஆவது சட்டமன்றத் தொடர் | |||||||
18 | டத்தோ அகமட் யாக்கூப் (Ahmad Yakob) (பிறப்பு 1950) பாசிர் பெக்கான் சட்டமன்ற உறுப்பினர் |
6 மே 2013 |
15 ஆகஸ்டு 2023 |
10 ஆண்டுகள், 101 நாட்கள் | பாக்காத்தான் ராக்யாட் (பாஸ்) | 2013 | 13-ஆவது சட்டமன்றத் தொடர் | ||
காகாசான் (பாஸ்) | 2018 | 14-ஆவது சட்டமன்றத் தொடர் | |||||||
பெரிக்காத்தான் நேசனல் (பாஸ்) | |||||||||
19 | டத்தோ முகமது நசுருதீன் தாவூத் (Mohd Nassuruddin Daud) (பிறப்பு 1965) மெராந்தி சட்டமன்ற உறுப்பினர் |
15 ஆகஸ்டு 2023 |
பதவியில் உள்ளார் | 1 ஆண்டு, 97 நாட்கள் | பெரிக்காத்தான் நேசனல் (பாஸ்) | 2023 | 15-ஆவது சட்டமன்றத் தொடர் |
- ↑ இந்த நெடுவரிசையில் மந்திரி பெசார் சார்ந்த கட்சியின் பெயர் மட்டுமே உள்ளது. அவர் தலைமையிலான மாநில அரசு பல கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் கூட்டணியாக இருக்கலாம்; அவை இங்கே பட்டியலிடப்படவில்லை.
வாழும் முன்னாள் மந்திரி பெசார்கள்
[தொகு]பெயர் | பதவியின் காலம் | பிறந்த தேதி |
---|---|---|
அகமட் யாக்கூப் | 2013–2023 | 1 பிப்ரவரி 1950 (வயது 74) |
மேலும் காண்க
[தொகு]- கிளாந்தான்
- கிளாந்தான் சுல்தான்
- கிளாந்தான் மாநில சட்டமன்றம்
- கிளாந்தான் மாநில ஆட்சிக்குழு
- கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Portal YAB Menteri Besar Kelantan (Official site)