மாச்சாங்
மாச்சாங் Machang | |
---|---|
![]() | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°45′39″N 102°12′57″E / 5.76083°N 102.21583°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
அமைவு | 1880 |
பரப்பளவு | |
• மொத்தம் | 130 km2 (50 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 56,937 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 18XXX |
தொலைபேசி எண்கள் | +6-09 |
வாகனப் பதிவெண்கள் | D |
மாச்சாங் (மலாய் மொழி: Machang; ஆங்கிலம்: Machang) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில்; மாச்சாங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்.
மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 44 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 298 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
பொது
[தொகு]குதிரை மாம்பழம் என்று அழைக்கப்படும் மாச்சாங் மாம்பழம் (Mangifera foetida) என்பதன் மலாய் பெயரில் இருந்து இந்த இடத்திற்கு மாச்சாங் என்று பெயரிடப்பட்டது.[2]
மாச்சாங் எனும் பெயரில் கம்போங் மாச்சாங் (Kampung Machang) எனும் கிராமம் உள்ளது. 1880-ஆம் ஆண்டில் செனிக் அவாங் கெச்சிக் (Senik Awang Kecik) என்பவரின் தலைமையில் குடியேறிய ஒரு குழுவினரால் கம்போங் மாச்சாங் எனும் கிராமம் உருவாக்கப்பட்டது.
இந்தக் கிராமத்தில் இருந்துதான் மாச்சாங் நகரமும் உருவானது.
கில்மார்ட் பாலம்
[தொகு]கிளாந்தான் ஆற்றின் குறுக்கே தானா மேராவுக்கு அருகில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் இரயில் பாலம் உள்ளது. அதன் பெயர் கில்மார்ட் பாலம் (Guillemard Bridge). இந்தப் பாலம் மலேசியாவிலேயே மிக நீளமான இரயில் பாலமாகும். இதன் கட்டுமானம் 1920-இல் தொடங்கி 1924-இல் நிறைவு அடைந்தது.
கில்மார்ட் எனும் பெயர், சர் லாரன்ஸ் கில்மார்ட் (Sir Laurence Guillemard) என்பவரின் பெயரில் இருந்து எடுக்கப்பட்டது. இவர் அப்போது நீரிணை குடியேற்றங்களின் ஆளுநராகவும், மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையராகவும் இருந்தவர்.
சப்பானிய படையெடுப்பு
[தொகு]மலாயா மீதான சப்பானிய படையெடுப்பின் போது, சப்பானிய இராணுவ துருப்புக்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக, 1941 டிசம்பர் 12-ஆம் தேதி பிரித்தானியத் துருப்புக்களால் இந்தப் பாலம் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது.
பின்னர் இந்தத் தொடருந்துப் பாலம் விரைவில் பழுதுபார்க்கப்பட்டு, 1948 செப்டம்பர் 7-ஆம் தேதி போக்குவரத்திற்கு மீண்டும் திறக்கப்பட்டது. இந்தப் பாலத்திற்கு அருகில் மேலும் ஒரு புதிய பாலம் கட்டப்பட்டது. அதனால் கில்மார்ட் பாலம் இப்போது தொடருந்துகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Latar Belakang". 11 November 2015.
- ↑ "Raremaps.com". Retrieved 10 January 2017.