உள்ளடக்கத்துக்குச் செல்

இகான்

ஆள்கூறுகள்: 2°49′25″N 111°42′24″E / 2.82361°N 111.70667°E / 2.82361; 111.70667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இகான்
Igan
Kampung Igan
இகான் மீனவர் திருவிழா (2012)
இகான் மீனவர் திருவிழா (2012)
இகான் is located in மலேசியா
இகான்
      இகான்       மலேசியா
ஆள்கூறுகள்: 2°49′25″N 111°42′24″E / 2.82361°N 111.70667°E / 2.82361; 111.70667
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுமுக்கா பிரிவு
மாவட்டம்இகான் துணை மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்248 km2 (96 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்3,731
 • அடர்த்தி15/km2 (39/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
96300[1]
இணையதளம்Matu & Daro District Council

இகான் (மலாய் மொழி: Kampung Igan; ஆங்கிலம்: Igan) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் முக்கா பிரிவு; மாத்து மாவட்டத்தில் அமைந்து உள்ள துணை மாவட்டம்; மற்றும் நகரமாகும்.[2]

இந்த நகரம், தென் சீனக் கடற்கரையில், இகான் ஆற்றுக் கழிமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

இகான் நகரம், முக்கா பிரிவின் நிர்வாக நகரமான முக்கா நகரத்திற்கு மேற்கே ஏறக்குறைய 50 கிலோமீட்டர்கள் (131 மைல்கள்) தொலைவிலும்; ஓயா நகரத்தில் இருந்து 23 கிலோமீட்டர்கள் (14 மைல்கள்) தொலைவிலும் உள்ளது.

பொது

[தொகு]

இகான் என்பது இகான் கிராமத்தைச் சுற்றிலும் மட்டுமே காணக்கூடிய ஒரு வகை மீன் ஆகும்.[2] கம்போங் இகான் எனும் இகான் கிராமம், ராஜாங் ஆற்றின் முடிவில் அமைந்துள்ள மெலனாவ் கிராமங்களில் ஒன்றாகும். இங்குள்ளவர்களில் பெரும்பாலோர் மெலனாவ் மக்கள் ஆவார்கள்.[3]

சிபுவில் இருந்து இகான் கிராமத்திற்குச் சாலை வழியாகச் செல்வது என்றால் 3 முதல் 4 மணி நேரம் பிடிக்கும். அதே வேளையில் விரைவுப் படகு பயணத்திற்கு 5 மணிநேரம் பிடிக்கும். கிராமவாசிகள் பெரும்பாலோர் சொந்தத் தொழில் செய்பவர்களாக உள்ளனர்.

உப்பு மீன்கள், நெத்திலி மீன்கள், பெலாச்சான் விற்பனை; மற்றும் செம்பனைச் சாகுபடி, ரப்பர் மரம் வளர்ப்பு, கைவினைப்பொருட்கள் விற்பனை போன்றவை அவர்களின் முக்கியத் தொழில்களாக உள்ளன. இவர்களின் தயாரிப்புகள் கூச்சிங் நகரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Igan Mukah". poskod.com. பார்க்கப்பட்ட நாள் 6 October 2024.
  2. 2.0 2.1 "Kampung Igan is located under the administration of the Igan Subdistrict Office". Pusat Sebaran Maklumat Nasional Igan. பார்க்கப்பட்ட நாள் 6 October 2024.
  3. "Profile of Kampung Tengah Igan". Bangunan Pejabat Daerah Lama Igan. பார்க்கப்பட்ட நாள் 6 October 2024.
  4. Tawie, Sulok (14 August 2024). "Recoda develops 105ha agropark in Mukah to showcase sustainable farming | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 October 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இகான்&oldid=4106492" இலிருந்து மீள்விக்கப்பட்டது