உள்ளடக்கத்துக்குச் செல்

பாடவான் மாவட்டம்

ஆள்கூறுகள்: 1°25′39″N 110°19′34″E / 1.427597°N 110.326150°E / 1.427597; 110.326150
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாடவான் மாவட்டம்
Padawan District
Daerah Padawan
பாடவான் நகரம் (2020)
பாடவான் நகரம் (2020)
பாடவான் மாவட்டம் is located in மலேசியா
பாடவான் மாவட்டம்
      பாவு மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 1°25′39″N 110°19′34″E / 1.427597°N 110.326150°E / 1.427597; 110.326150
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுகூச்சிங் பிரிவு
மாவட்டம்பாடவான்
பரப்பளவு
 • மொத்தம்1,771.3 km2 (683.9 sq mi)
இணையதளம்mpp.sarawak.gov.my
பாடவான் மாவட்டத்தின் வரைப்படம்

பாடவான் மாவட்டம் (மலாய்: Daerah Padawan; ஆங்கிலம்: Padawan District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் கூச்சிங் பிரிவில்; உள்ள ஒரு மாவட்டம். முன்பு இது மாவட்டத் தகுதி பெறாத நகர்ப் பகுதியாக இருந்தது. இருப்பினும் 2023-ஆம் ஆண்டில், பாடவான் பகுதிக்கு மாவட்டத் தகுதி வழங்கப்பட்டது. [1]

கூச்சிங் பிரிவில்; உள்ள மற்ற மாவட்டங்களான பாவு மாவட்டம், இலுண்டு மாவட்டம், கூச்சிங் மாவட்டம் ஆகிய 3 மாவட்டங்களத் தவிர பாடவான் துணை மாவட்டத்தைத் தனி ஒரு மாவட்டமாக வகைப்படுத்தலாம். அதற்கான சட்ட விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

பொது

[தொகு]

பாடவான் மாவட்டத்திற்கான பாடவான் நகராட்சி (Majlis Perbandaran Padawan) (MPP); பாடவான் மாவட்டப் பகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணிக்கிறது; மேலும் அந்தத் திட்டங்களை ஒழுங்கமைத்துச் செயல்படுத்துகின்றது.[2]

பாடவான் மாவட்டம் மூன்று முக்கிம் நகர்ப்புறப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

  • பத்து காவா
  • பாடவான் நகரம்
  • பத்து கித்தாங்

11 ஆகத்து 1983-இல் துணை மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அந்த வேளையில் பாடவான் துணை மாவட்டப் பகுதிக்கான தலைமையகம், தெங் புக்காப்பில் (Teng Bukap) அமைந்திருந்தது. பின்னர் கோத்தா பாடவானில் உள்ள அதன் புதிய தலைமையகத்திற்கு மாற்றப்பட்டது.

பாடவான் மக்கள்தொகை

[தொகு]

பத்து காவா

[தொகு]
2023-இல் பத்து காவா மக்கள் தொகை
# வகை தொகை இனம் தொகை
1 மலேசியர் 205,661 சீனர் 82,991
2 இபான் 63,875
3 மலாய் 39,182
4 பிடாயூ 18,764
5 இந்தியர் 610
6 ஒராங் உலு 115
7 மெலனாவ் 20
8 பிற இனத்தவர் 104

கோத்தா பாடவான்

[தொகு]
2023-இல் கோத்தா பாடவான் மக்கள் தொகை
# வகை தொகை இனம் தொகை
1 மலேசியர் 122,348 பிடாயூ 70,826
2 சீனர் 28,731
3 மலாய் 13,524
4 இபான் 8,792
5 ஒராங் உலு 280
6 மெலனாவ் 116
7 இந்தியர்
8 பிற இனத்தவர் 79

பத்து கித்தாங்

[தொகு]
2023-இல் பத்து கித்தாங் மக்கள் தொகை
# வகை தொகை இனம் தொகை
1 மலேசியர் 31,093 சீனர் 15,368
2 பிடாயூ 8,902
3 மலாய் 4,870
4 இபான் 1,506
5 ஒராங் உலு 251
6 மெலனாவ் 94
7 இந்தியர்
8 பிற இனத்தவர் 102

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Laman Web Rasmi Majlis Perbandaran Padawan". mpp.sarawak.gov.my. Archived from the original on 14 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 14 February 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Majlis Perbandaran Padawan, Kota Padawan, Jalan Penrissen, Pasar Batu 10, 93250 Kuching, Sarawak". mpp.sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 7 October 2024.

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடவான்_மாவட்டம்&oldid=4107604" இலிருந்து மீள்விக்கப்பட்டது