உள்ளடக்கத்துக்குச் செல்

இபான் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இபான்மக்கள்
Iban people
Orang Iban
1920-1940-இல் போர் உடையில் போர்னியோ இபான் டயாக்குகள்
மொத்த மக்கள்தொகை
approximately 1,070,500
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
போர்னியோ:
 மலேசியா
(சரவாக், சபா, லபுவான், தீபகற்ப மலேசியா)
753,500[1]
 இந்தோனேசியா297,000+[2]
(மேற்கு கலிமந்தான்)297,000[3]
 புரூணை20,000[4]
மொழி(கள்)
இபான் மொழி, இந்தோனேசிய மொழி, சரவாக் மலாய் மொழி
சமயங்கள்
கிறிஸ்தவம், ஆங்கிலிக்கனிசம், ஆன்மீகம், இஸ்லாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கந்து, முவாலாங், செம்புருவாங், புகாவ், செபாரு

இபான் மக்கள் அல்லது கடல் டயாக்குகள் (மலாய்: Orang Iban; ஆங்கிலம்: Iban People; சீனம்: 伊班族) என்பவர்கள் தென்கிழக்கு ஆசியாவின் போர்னியோ தீவில் உள்ள டயாக் மக்களின் ஒரு பிரிவு மக்களாகும். இபான் வம்சாவழியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடல் டயாக்குகள் (Sea Dayaks) என்று அறியப் படுகிறார்கள்.

டயாக் எனும் சொல் மேற்கத்தியர்களால் வழங்கப்பட்ட சொல். தலை வேட்டையாடுதல் (headhunting) எனும் காட்டுவாசிப் பழக்கத்திற்கு இபான்கள் புகழ் பெற்றவர்கள். மேலும் துணிச்சலுடன் எதிர்த்துப் போரிடும் குணம் கொண்ட பழங்குடியினராகக் கருதப் படுகிறார்கள்.

பொது

[தொகு]
சரவாக், பெலகா பகுதியில் ஒரு நவீன மர நீண்ட வீடு.

ஐரோப்பியர்களின் வருகை; மற்றும் அடுத்தடுத்த காலனித்துவ ஆட்சிகள்; போன்றவற்றினால் கடல் டயாக்குகளின் தலையை வேட்டையாடும் பழக்கம் படிப்படியாக மறைந்து விட்டது. இருப்பினும் இன்றும் பல பாரம்பரியப் பழங்குடி பழக்க வழக்கங்கள் இருக்கவே செய்கின்றன.

மலேசியாவில் சரவாக் மாநிலம்; புரூணை; மற்றும் இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் மாநிலம் போன்ற நிலப் பகுதிகளில் இபான் மக்கள் வாழ்கின்றனர். மேற்கு கலிமந்தானில் ரூமா பாஞ்சாங் எனப்படும் நீண்ட வீடுகளில் வாழ்கின்றனர்.[5][6]

ரூமா பேத்தாங் நீள வீடுகள்

[தொகு]

இந்த நீள வீட்டை, இந்தோனேசிய மொழியில் 'ரூமா பேத்தாங்' (rumah betang) என்றும்; மலாய் மொழியில் 'ரூமா பாஞ்சாங்' (rumah panjang) என்றும் அழைக்கிறார்கள்.[7]

அவர்களைப் பற்றிய தொன்ம ஆய்வுகள்; பழைய புராணங்களின் படி, இபான் மக்கள் வரலாற்று ரீதியாக போர்னியோவில் உள்ள கபுவாஸ் ஆற்றுப் பகுதியில் (Kapuas river) இருந்து வந்தவர்கள் என்று அறியப் படுகிறது. ஆனாலும் அவர்கள் இந்தோனேசியாவைப் பூர்வீகமாகக் கொன்டவர்கள்.[8]

ஸ்ரீ அமான் நதிப்படுகை

[தொகு]

காலப் போக்கில் இவர்கள் மெதுவாகச் சரவாக் நகர்களுக்குள் வந்து சேர்ந்தனர்.[9] இந்தப் பழங்குடியினரில் சிலர் ஸ்ரீ அமான் நதிப் படுகையில் குடியேறினார்கள்.[10] ஜேம்சு புரூக் ஆட்சியின் போது, ​​இபான் பழங்குடியினர் சரவாக் உள்நாட்டிற்குள் மேலும் ஊடுருவினர். அங்கு ஏற்கனவே இருந்த பல உள்ளூர் பழங்குடியினருடன் மோதலில் ஈடுபட்டனர்.[11]

காலப் போக்கில் உள்ளூர் மக்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர். ஜேம்சு புரூக் காலத்தில் அவர்களின் மனிதத் தலை வேட்டையாடும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Launching of Report On The Key Findings Population and Housing Census of Malaysia 2020". Department of Statistics Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Iban of Indonesia". People Groups. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
  3. "Iban of Indonesia". People Groups. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
  4. "Iban of Brunei". People Groups. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
  5. "Borneo trip planner: top five places to visit". News.com.au. 2013-07-21. Archived from the original on 2015-10-16. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
  6. Sutrisno, Leo (2015-12-26). "Rumah Betang". Pontianak Post. Archived from the original on 2015-12-29. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
  7. Osup, Chemaline Anak (2006). "Puisi Rakyat Iban – Satu Analisis: Bentuk Dan Fungsi" [Iban Folk Poetry – An Analysis: Form and Function] (PDF). University of Science, Malaysia.
  8. "Use of Papan Turai by Iban". Ibanology. 29 May 2013. பார்க்கப்பட்ட நாள் 3 December 2016.
  9. Mawar, Gregory Nyanggau (21 June 2006). "Gawai". Iban Cultural Heritage. பார்க்கப்பட்ட நாள் 3 December 2016.
  10. "Early Iban Migration – Part 1". 26 March 2007.
  11. Jabu, Empiang (28 February 2013). "History Perspective of The Iban".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இபான்_மக்கள்&oldid=4101544" இலிருந்து மீள்விக்கப்பட்டது