ஒராங் செலாத்தார் மக்கள்
Kon Seletar / Kon | |
---|---|
ஒராங் செலாத்தார் மக்கள்; பாசிர் கூடாங்; ஜொகூர் (2013) | |
மொத்த மக்கள்தொகை | |
3,000[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
ஜொகூர் நீரிணை: | |
மலேசியா ஜொகூர் | 1,042 (2010)[2] |
சிங்கப்பூர் | 1,200[3] |
மொழி(கள்) | |
ஒராங் செலாத்தார் மொழி, மலாய் மொழி | |
சமயங்கள் | |
ஆன்மவாதம், கிறிஸ்தவம், இசுலாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
சக்குன் மக்கள், கானாக் மக்கள், கோலா மக்கள், தெமுவான் மக்கள், ஒராங் லாவுட் மக்கள் |
செலாத்தார் மக்கள் அல்லது ஒராங் செலாத்தார் மக்கள் (ஆங்கிலம்: Orang Seletar People; Selitar People; மலாய்: Orang Seletar; Slitar; Kon; Seletar Kon) என்பவர்கள் மலேசியப் பழங்குடியினர் இனக்குழுவில் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகும்.[4]
இவர்கள் ஒராங் அஸ்லியின் 3 முக்கிய குழுக்களில் ஒன்றான புரோட்டோ மலாய் (Proto-Malay) எனும் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.[5] இந்தப் பழங்குடியினர் ஒராங் லாவுட் மக்களின் ஒரு பிரிவினகவும் கருதப்படுகின்றனர்.[6] ஜொகூர் நீரிணைப் பகுதியை அவர்களின் மூதாதையர் வாழ்ந்த இடமாகக் கருதுகின்றனர். ஜொகூர் நீரிணை, தீபகற்ப மலேசியாவில் இருந்து சிங்கப்பூரைப் பிரிக்கிறது.
சிங்கப்பூரில், செலாத்தார் மக்கள் மலாய் சமூகத்தின் ஒரு பிரிவினராகக் கருதப்படுகிறார்கள். அத்துடன் தீபகற்ப மலேசியாவில், செலாத்தார் மக்கள், 18 மலேசியப் பழங்குடியினர் குழுக்களில் ஒரு பிரிவினராகக் கருதப்படுகிறார்கள்.[7]
பொது
[தொகு]மலேசிய அரசாங்கம், தீபகற்ப மலேசியாவின் பூர்வீகப் பழங்குடியினரை ஓராங் அஸ்லி (Orang Asli) என்று வகைப்படுத்துகிறது. மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறையின் (மலாய்: Jabatan Kemajuan Orang Asli (JAKOA); ஆங்கிலம்: Department of Orang Asli Development); கீழ் சிறப்புரிமை பெற்ற 18 தீபகற்ப மலேசியப் பழங்குடி இனக் குழுவினர் உள்ளனர்.[8]
மொழி, கலாசார அடிப்படையில் அவர்களை மூன்று பெரும் பிரிவுகளாக மலேசிய அரசாங்கம் பிரித்துள்ளது.[9][10] அந்த மூன்று பெரும் பிரிவுகளில் மலாய மூதாதையர் பிரிவின் கீழ் செலாத்தார் மக்கள் வகைப்படுத்தப் படுகின்றனர்.
மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறை
[தொகு]செலாத்தார் மக்கள் முதலில் ஒராங் லாவுட் மக்களின் ஒரு பகுதியாக வகைப்படுத்தப்பட்டு இருந்தாலும், மலேசிய அரசாங்கமும் மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறையும் செலாத்தார் மக்களை பூர்வகுடி மலாய மூதாதையர் பழங்குடியினரில் ஒன்றாக வகைப்படுத்துகின்றன.
மலாய மூதாதையர் குழு இன்றுள்ள மூன்று ஒராங் அஸ்லி துணைக்குழுக்களில் ஒன்றாகும். தீபகற்ப மலேசியாவின் பழங்குடி மக்களில் செலாத்தார் மக்களும் ஒரு பிரிவினர்; மற்றும் இவர்களின் வாழ்க்கை முறை வெப்பமண்டலக் காடுகளுடன் அமையாமல், கடல் பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கெமர் மோன் மொழி
[தொகு]செலாத்தார் மக்கள் தங்களை கோன் செலாத்தார் (Kon Seletar) என்று; கோன் (Kon) எனும் முன்னொட்டுடன் அல்லது வெறுமனே கோன் என்றும் குறிப்பிடுகின்றனர்; கோன் எனும் சொல் மோன் மொழியைச் சார்ந்ததாகும். மோன் மொழி என்பது கெமர் மொழியின் (Mon-Khmer Language) தோற்றம் கொண்டதாக நம்பப்படுகிறது.
வாழ்வியல்
[தொகு]ஒரு காலத்தில், செலாத்தார் மக்கள் நீண்ட படகு வீடுகளில் வாழ்ந்தனர். கடல், தீவுகள், கடற்கரைகள் மற்றும் ஆற்றுப் படுகைகளின் மேற்பரப்பில் நாடோடிகளாக வாழ்ந்த கடல்சார் மக்களில் ஒரு பகுதியாகவும் இருந்தனர். இருப்பினும், தற்போது இவர்கள் தீபகற்ப மலேசியாவின் நிலப்பரப்புகளில் வாழ்கின்றனர்; மற்றும் சொந்த கிராமப் பகுதிகளையும் கொண்டுள்ளனர்.
செலாத்தார் மக்கள் கடலில் கிடைக்கும் பொருள்களை நம்பி இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலை அவர்களை அடிக்கடி இடம்பெயர்வுகளுக்குள் கொண்டு செல்கிறது. இருப்பினும், நாடு அளவில் ஏற்பட்டு வரும் சமூக-பொருளாதாரத மாற்றங்களினால், செலாத்தார் மக்களின் வாழ்க்கை முறையும் மாறி வருகின்றன.
செலாத்தார் மக்கள் தற்போது ஜொகூர் மாநிலத்தின் தெற்கில் உள்ள கம்போங் பாக்கார் பத்து, ஜொகூர் பாரு போன்ற புதிய குடியிருப்புப் பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்கள் ஆன்மவாதத்தைக் கடைபிடிக்கின்றனர். ஆனாலும் அவர்களில் சிலர் இசுலாத்தைத் தழுவியுள்ளனர்.
காட்சியகம்
[தொகு]-
ஒரு செலாத்தார் பையனும் பெண்ணும்
-
செலாத்தார் வீடுகள்; பாசிர் கூடாங், ஜொகூர்
-
செலாத்தார் வீட்டின் உட்பகுதி
-
ஒரு செலாத்தார்
மீனவர் -
ஒரு செலாத்தார்
பையன் -
பாசிர் கூடாங்கில் ஒரு செலாத்தார் வீடு
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Orang Seletar". Joshua Project. பார்க்கப்பட்ட நாள் 2016-12-10.
- ↑ Kirk Endicott (2015). Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli. NUS Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
- ↑ "Orang Seletar in Singapore". Joshua Project. பார்க்கப்பட்ட நாள் 2016-12-10.
- ↑ Zafarina Zainuddin (2012). Genetic and Dental Profiles of Orang Asli of Peninsular Malaysia. Penerbit USM. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-98-386-1550-1.
- ↑ Zafarina Zainuddin (2012). Genetic and Dental Profiles of Orang Asli of Peninsular Malaysia. Penerbit USM. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-98-386-1550-1.
- ↑ Ian Glover (2004). Southeast Asia: From Prehistory to History. Psychology Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 04-152-9777-X.
- ↑ Ben Tan (25 October 2015). "Johor Orang Asli community lauds initiative to look into hostel woes". The Rakyat Post. பார்க்கப்பட்ட நாள் 2016-12-10.
- ↑ "A Systematic Review on the Mah Meri People in Malaysia" (PDF). Human Resource Management Academic Research Society. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
- ↑ "Suku Kaum". Laman Web Rasmi Jabatan Kemajuan Orang Asli. பார்க்கப்பட்ட நாள் 2022-07-23.
- ↑ Alan G. Fix (2015). Kirk Endicott (ed.). 'Do They Represent a "Relict Population" Surviving from the Initial Dispersal of Modern Humans from Africa?' from Malaysia's "Original People". NUS Press. pp. 101–122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
சான்று நூல்கள்
[தொகு]- Kirk Endicott (2015), Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli, NUS Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4
மேலும் படிக்க
[தொகு]- Original Wisdom: Stories of an Ancient Way of Knowing by Robert Wolff. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89281-866-2
- 1400s - The Orang Laut Warriors - a short documentary about the Orang Laut in the 15th - 17th century, produced for the Singapore Bicentennial in 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Orang Seletar தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.