உள்ளடக்கத்துக்குச் செல்

உக்கிட் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உக்கிட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உக்கிட் மக்கள்
Ukit People
Dayak Ukit
Orang Ukit
ஒரு உக்கிட் பழங்குடியினர்
மொத்த மக்கள்தொகை
120 (1981)[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 மலேசியா
 சரவாக்
மொழி(கள்)
உக்கிட் மொழி, மலேசிய மொழி, சரவாக் மலாய் மொழி
சமயங்கள்
நாட்டுப்புற மதம் (பெரும்பான்மை), கிறிஸ்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஒராங் உலு, புக்கித்தான்

உக்கிட் மக்கள் (மலாய்: Ukit, Orang Bukit, Bekiau; ஆங்கிலம்: Ukit, Ukit People Dayak Ukit); என்பவர்கள் மலேசியா, சரவாக் பகுதிகளில் வாழும் பழங்குடி தயாக்கு மக்கள் (Indigenous Dayak People); ஆகும்.

இவர்கள் போர்னியோ மழைக்காடுகளில் (Borneo Rain Forests) அண்மைய காலம் வரையில் நாடோடிகளாக வாழ்ந்த சிறுபான்மை மக்கள். அத்துடன் இந்த உக்கிட் மக்கள்; கிளிமந்தான் (Klemantan) மக்களின் துணைக் குழுவாகக்கூட இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.[2]

பொது

[தொகு]

சரவாக் பாலுய் ஆற்றின் (Balui River) மேல் பகுதியில் உள்ள ரூமா உக்கிட் கிராமத்தில் (Rumah Ukit Village), உக்கிட் மக்களில் சிலர் நிரந்தரமாகக் குடியேறி உள்ளனர். இந்தக் கிராமம் இராசோம் ஆறு (Rajom River) மற்றும் தாதாவ் ஆறு (Tatau River) ஆகியவற்றின் மேல் பகுதியில் அமைந்து உள்ளது.

உக்கிட் மக்கள் தொகை எண்ணிக்கையில் சிறியது. பல பழங்குடியினர் பலர் நீண்ட காலத்திற்கு முன்பு கொல்லப் பட்டதால் சாத்தியமான இன அழிவை சந்தித்து வருகின்றனர். பிற பழங்குடியினருடன் திருமணம் செய்து கொள்வது அவர்களின் மக்கள்தொகை குறைவதற்கு மற்றொரு காரணியாகும்.

வன நாடோடிகளாக உக்கிட் மக்கள்

[தொகு]

போர்னியோவின் இபான், காயான் போன்ற வலுவான தயாக்கு பழங்குடியினருடன் ஏற்பட்ட போரில் உக்கிட் மக்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டன. உக்கிட் மக்களின் தாயகமாகக் கருதப்படும் சரிபாசு (Saribas), கலகா (Kalaka), கிரியான் (Krian) பகுதிகளில் இருந்து துரத்தப்பட்டனர்.

இன்றைய நிலையில், உக்கிட் மக்கள்தொகை சுமார் 120 என மதிப்பிடப்பட்டு உள்ளது. இருப்பினும், அறியப்படாத எண்ணிக்கையிலான உக்கிட் மக்கள், அவர்களின் பாரம்பரிய வழியில் வன நாடோடிகளாக (Forest Nomads) வாழ்ந்து வருகின்றனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Raymond G. Gordon Jr., ed. (2005). Ethnologue: Languages of the World, Fifteenth edition. SIL International. ISBN 1-55671-159-X.
  2. John Alexander Hammerton; Dr. Charles Hose (1922). Peoples of All Nations. Concept Publishing Company. ISBN 81-7268-156-9.
  3. Harry De Windt "On the Equator"

மேல் விவரங்கள்

[தொகு]
  • O'Hanlon Redmond (1985): Into The Heart of Borneo. Pp. 143–4, 171–183. Penguin (Salamander Press 1985)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்கிட்_மக்கள்&oldid=4086439" இலிருந்து மீள்விக்கப்பட்டது